சாதியும்-வர்க்கமும் பற்றி தோழர் பேசியுள்ள வற்றின் உண்மைதன்மை தேடுவோம் முதலில்.
தோழர் சேதுராமலிங்கம் முகநூல் பதிவு:- மாமன்னண் குறித்து விமர்சனமாக எண்ணற்ற நபர்கள் எழுதி விட்டனர். இருப்பினும் அவற்றில் சொல்லப்படாத சில விடயங்களையே இங்கு குறிப்பிடுகிறேன். முனைவர் அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுவார்தலித் மக்களுக்கு மீதான வன்முறைகளுக்கும் அவர்களின் மீதான பாகுபாடு உள்ளிட்ட மனித்தன்மையற்ற கொடூரமான தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளுக்கு சாதி இநதுக்களே தலித் அல்லாதவர்களே பொறுப்பேற்க வேண்டும். கோடிக்கணக்கான தலித் மக்களின் உழைப்பில்தான் இந்த சமூகம் நாள்தோறும் உயிர்ப்பிக்கிறது. எனவே அவர்களின் நிலைக்கு தலித் அல்லாதோரே குற்ற உணர்வு கொள்ள வேண்டும் என்பார்.
நாற்காலியில் அமரக்கூட சொல்லாத அதை மறுக்கின்ற சாதியத்திமிரை மிக அருமையாக காட்சிப்படுத்தி இருந்தாலும் அந்த நேரத்தில் கதாநாயகன் சொத்ப்பி இருப்பார். கூர்மையான வசனங்களுக்கான வாய்ப்பிருந்தும் அதை கை விட்டிருப்பது நெருடல்ஒரு மிக அருமையானசாதியத்தின் கொடூரத்தை அடிப்படையான கருத்தியலாக கொண்ட அருமையானபடைப்பை குட்டிச் சுவராக்கி நாசமாக்க வேண்டும் என்றால் வேறொன்றும் செய்ய வேண்டாம் பல ஆயிரம் ரத்தினவேல்களின் அதிகாரத்திமிரைக் கொண்ட ஒரு திரைப்படக் கார்ப்பரேட் முதலாளியை நடிக்க வைத்தால் போதுமானது அவருக்கும் நடிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மீண்டும் வலிமையாக நிருபித்திருக்கிளார்.
என் பதில்;- கலை இலக்கியம் என்ன?
கலை தெய்வீகமானது மர்மமானது புரிந்து கொள்ள முடியாத புதிரானது. கலைஞன் தெய்வீகப் பிறவி என்று கூறுவது யாவும் வெறும் பொய்மையே.
நிலவுடைமை சமூகத்தில் பல்வேறு பிரிவு மக்கள் தமக்கான கலைகளை தங்கள் வாழ்வியலோடு வளர்த்து வந்தனர் (துன்பவியலை பேசும் ஒப்பாரி பாடலும் கூட்டு உழைப்பில் ஈடுபடும் பொழுது கூட்டு பாட்டுகலும் இதில் அடங்கும்) ஆனால் நிலவுடைமை சமூகம் தன் கட்டுக்கோப்புக்குள் கலைகளை கட்டிக் காத்தது.ஆனால் இன்றைய வளர்ந்துள்ள இச்சமூகத்தில் கலைகள் பல வடிவங்களாக விரிவடைந்து சில சுதந்திரமான கண்ணோட்டத்தில் வளர்ந்து வந்துள்ளது.
இன்றுகலை அமைப்பு பணி பற்றிய நுட்பங்களை கற்காமலே கலைஞர்கள் கலைகளை படைப்பதும்,சாதாரண மக்களும் அவற்றை சுவைப்பதையும் காணலாம். இதுவே கலையின் இன்றைய தனிச்சிறப்பு, ஏனெனில் கலைகள்யாவும்மனிதஉணர்வுகளின் தொகுப்பாகும். மனித உழைப்பில் இருந்தே கலைகள் தோன்றுகின்றன கலையை சுவைபவனும் (ரசிபவனும்) மனிதனே.
"கலையும் விஞ்ஞானமும் சமூக உழைப்பில் இருந்து தோன்றியவை; இரண்டும் ஒன்றுக்கொன்று ஆதாரமாக உள்ள இருவகைப்பட்ட வடிவங்கள்; இவை இரண்டும் மானிட உழைப்பிலே வேர்கொண்டுள்ளன" என மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் தாம்சன் கூறுகிறார்.
கலைஞனும் சமூகத்தில் வாழ்வதால் எத்தனை கற்பனையாக கலையை படைத்தாலும் தன்னிச்சையாக படைத்தாலும் அது சமுதாயத்தை ஒட்டியதாக இருப்பதை காணலாம். அக்கலை சமுதாயத்துடன் தொடர்பு கொண்டு சமூகத்தில் காணும் இன்ப துன்ப நிகழ்வுகளை உணர்வுபடுத்தி உழைக்கும் மக்கள் தன் சக்தியை மீண்டும் பெற முயல வேண்டும்.
கலையும் கலைஞனின் சமூக பங்களிப்பும்
கலைஞனுடைய படைப்பு சமுதாய உணர்வு மட்டத்தில் எந் நிலையில் உள்ளது என்பது முக்கியமாகும். சமுதாயத்தில் சமத்துவம் சமூக நீதியை நிலைநாட்டி மனிதரது உழைப்பில் ஆர்வம் காட்டி மேலும் உழைப்பிற்கு உந்துசக்தியாகஉயர்த்தி பிடித்து எல்லா ஒடுக்குமுறைகளையும் தகர்க்கும் போராட்டத்தை தொடங்கி வைக்கும் கலை படைப்பே உயர்ந்த கலை படிப்பாகும்.
ஒரு கலைஞன் கலையை படைக்கும் பொழுது எல்லா உருவகத்திலும் புரட்சியை வேண்டியே நிற்காது, இருந்தாலும் அவை எந்த வர்க்க நலனில் உள்ளது என்பதை கணக்கில் கொண்டு பார்த்தால்,அவர்கள் நோக்கம் ஒடுக்கப்பட்ட வர்க்க நலன் சார்ந்ததா அல்லது ஆளும் வர்க்க நலன் சார்ந்ததா என்று விமர்சகர்கள் தன்னுடைய விமர்சனக் கண்ணோட்டத்தில் இருந்து அணுக வேண்டும்.
கலையும் ரசிகனும்
தனிநபர்கள் சினிமாவின் கதையோடு தமது வாழ்க்கை சம்பவத்தை இனங்கண்டு ஒன்றிவிடலாம்.உதாரணமாக காதலில் தோல்வியுற்ற ஒருவர் சில சினிமாக்கள் ஒருதலை காதல்,காதல் தோல்வி பேசும் படங்களோடு தன்னுடைய வாழ்க்கையோடு ஒன்றிபோவதை ஏற்று கொள்வதை போன்றே பல்வேறு ஒடுக்குமுறை ஆளாகும் பலரும் தன் மீது இழைக்கப்பட்ட குற்றங்களை சினிமாவில் பார்க்கும் பொழுது அந்த வலிகளை இதன் ஊடாக தன்னை உருவகப்படுத்திக் கொள்ளலாம் அதன் வடிகாலாக இதனை காணும் அவருக்கு தீர்வாக என்ன சொல்வது என்பதே கலைஞனின் வெற்றி அடங்கி உள்ளது.
மார்க்சிய ஆசான்கள் பேசும் எதார்த்தம்
"எதார்த்தம் என்பது உண்மை.Realism என்ற ஆங்கில பதத்தையே எதார்த்தம் என கலை இலக்கிய விமர்சனங்களின் போது தமிழில் பயன்படுத்துவது மரபாகிவிட்டது என்கிறார்", தோழர் செ. கணேசலிங்கம் அவர்கள்.
எதார்த்தம் என்பது மார்க்ஸ் எங்கெல்ஸின் வழிவந்த வார்த்தையாகும் . எங்கெல்ஸ் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டதை பின்வருமாறு பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள்விளக்குகிறார்,"யதார்த்த நெறி என்பது நுணுக்க விபரங்களின் உண்மையுடைமை தவிர,வகை மாதிரிக்கு பொருத்தமான பாத்திரங்களை நிலைமைகளுக்கு இணங்க மெய்மை குன்றாத வகையில் சித்தரித்தலாகும்" என்பதே ஏங்கெல்ஸ் மணிமொழி என்கிறார்.
மேலும் "யதார்த்தவாதம் சமுதாய முரண்பாடுகளும் அவற்றுக்குக் காரணமான பௌதீக நிலைமைகளுமே வாழ்க்கையின் தன்மைக்குக் காரணம் எனக் கண்டு "துன்பமே இயற்கை " என்னும் சொல்லை மாற்ற முயலும் உள்ளங்களின் நம்பிக்கைக் குரல்" என்று க.கைலாசபதியே கூறுகிறார்.
இனி சினிமா பற்றி
சினிமாவானது முதலாளித்துவ ஆதிக்கத்தின் விற்பனை பொருளாகவே இன்றும் உள்ளன.இங்கு நிலபிரபுத்துவ சிந்தனைகளும் மதிப்புகளும் இன்றும் ஆதிக்கம் பெற்று இருப்பதால் அவற்றை கலை இலக்கியம் மூலமாக முதலாளித்துவம் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கிறது.
சமுதாய உணர்வை கருத்தில்கொண்டுசமுதாயத்தை மாற்றி அமைக்கக்கூடிய புரட்சிகர சினிமா பிற கலை இலக்கியங்களை ஆக்கி மக்களுக்கு வழங்க கூடிய பொருளாதார வாய்ப்புகள் இன்னும் முற்போக்கு இடதுசாரி சிந்தனையாளர்கள் இன்னும் முன்னேறவில்லை.
இந்த நிலையில் மக்கள் முதலாளித்துவ சந்தையின்பொருட்களை வாங்குவது போலவே முதலாளிகள் வழங்கும் கலை இலக்கியங்களையும் ரசிக்க வேண்டிய கட்டத்தில்தான் உள்ளனர் என்றால் மிகையாகாது என்பேன். இவை மாமன்னன் எவ்விதத்தில் யாருக்கானது நான் சொல்ல தேவையில்லை!!!
கலை இலக்கியம் கருத்தியல் சார்ந்தவை மேற்கட்டுமானத்தை சார்ந்த ஒன்று. மதம் பற்றி மார்க்ஸ் கூறும் போது "மக்களின் அபினி "என்று மட்டும் கூறவில்லை "ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு இதயமற்ற உலகின் இதயம்" "ஆத்மா அற்ற நிலையின் ஆத்மா"என்றும் கூறிய பின்னரே "மதம் மக்களின் அபின்" என்று சொன்னார்.
அபினி வெறும் மயக்கம் மட்டும் தருவதல்ல ஒரு பொய்மையான தற்காலிக சந்தோஷத்தையும் தருவதாகும் .இதை ஒழித்து எதார்த்தமான நிரந்தர மகிழ்வு ஏற்படுத்துவதற்கு பொய்மையின் தேவையை விடுவிப்பதற்கேற்ற சூழலை, கடப்பாடுகளை மன நிலைமைகளை நாம் ஏற்படுத்த வேண்டும்.
பெரும்பாலான மக்கள் சினிமாவின் பல்வேறு கலை வடிவங்களில் மயங்கி விடுகின்றனர். தற்காலிக பொய்மை மகிழ்வில் மயங்கி ஆர்ப்பரிக்கின்றனர்.
எப்படி கோயில் ஆராதனைகளில் கோயில் பூஜைகளில் தன்னை மறந்து ஏதேதோ வார்த்தைகளை கூறி அங்கே மயங்கிக் கிடப்பது போல சினிமாவில் காட்டப்படும் பல்வேறு கற்பனைகளில் மூழ்கி கிடப்பதும்மதம் கடவுள் போன்ற கற்பனைகளே அன்றி வேறென்ன?.
மீண்டும் நாம் மார்க்சின் கூற்றுப்படி வருவோம் மதம் என்ற அபினி மூலம் மக்களை பிரித்தும் மோதவிட்டும் தற்காலிக திருப்தி பெறுவதிலேயே இன்றும் மதவாதிகளும் ஓட்டு அரசியல்வாதிகளும் குறியாக உள்ளனர். மக்களுக்கு இதை உணர்த்தி நிரந்தர மகிழ்ச்சியுடன் சேர்ந்து நல்வாழ்வு கிடைப்கேற்ற சூழலை கடப்பாடுகளை மன நிலைகளை ஏற்படுத்தி பொய்மைகளிலிருந்து அவர்களை விடுவிக்கும். முயற்சிகளில் மக்களை நாம் ஈடுபடுத்த முயல வேண்டும்.
மார்க்சியம் எல்லாத்துறைகளிலும் குறுகிய நோக்கத்திற்கு விரோதமானது. உலக நாகரிகம் என்னும் வளர்ச்சிப்பாதையில் மார்க்சியம் தோன்றி முன்னேற்றம் அடைகிறது.எல்லா காலங்களிலும் வாழ்ந்து மறைந்த மூளை கூர்மையுடையோர் மூளைகள் எழுப்பி உள்ள வினாக்களுக்கெல்லாம் விடை கூறுவது மார்க்சியம்- லெனின் ( மார்க்சிய அழகியல்- பேரா. நா. வானமாமலை பக்கம் 6).
இனி அடுத்த விவாதம்.
தோழர் சேதுராமலிங்கம் முகநூல் பதிவே :- ஒரு விவாதத்திற்கு அழைக்கிறோம்.நம் மார்க்சிஸட்டுகளை பொருத்தவரை பெரும்பாலான வர்கள் வர்க்கம் என்பதே தனியாக அந்தரத்தில் உள்ளதாக கருதுகின்றனர். அது சாதியோடும் ஒடுக்கப்படும் பிரிவினரோடும் இணைந்தது என்பதை புரிந்து கொள்வதில்லை. ஒரு சாதிய மோதல்களும் சரி அல்லது மத மோதல்களும் சரி வர்கக்கப்போராட்டங்களின் வடிவங்களே . அன்றைக்கு மேற்கத்திய தொழிலாளர்களைப்போன்றே இங்குள்ள தொழிலாளர்களை மட்டும் பாடடாளி வர்ககமாக அன்றைய கம்யூனிஸ்ட்டுகள் கருதி பெரும்பாலான மிகவும் பல மடங்கு பாட்டாளிகளான மனிதர்களாக கூட நடத்தப்படாத தலித் மக்களை பாட்டாளிகளாக கருதவில்லை விளைவு அன்று அண்ணல் அம்பேத்கரை எதிர் முகாமுக்கு தள்ளி விட்டனர். அந்த வரலாற்று தவறுகள் இனியும் நீடிக்கக்கூடாது (இதையும் அடையாள அரசியலையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்) மேற்கத்திய பாட்டாளி வரக்கம் போன்று இங்கு கிடையாது அவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளாகவும் பிரிவினராகவும் உள்ளனர் என்பதே உண்மை. வர்க்கப்பபோராட்டம் பல வடிவங்களில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை காண வேண்டும் இதை எப்போது புரிந்து கொள்வார்களோ தெரியவில்லை ஆரோக்கியமான முறையில் விவாதிக்கலாம் நக்கல் நையாண்டிகளை தவிர்ககவும்.
எனது பதில்:- தோழர் சாதிக்கும் வர்க்கதிற்கும் வேறுபாடு தெரியாதவர் இல்லை இருந்தும்.
சாதி என்றால் சுருக்கமாக:-சாதி என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்டது. அகமண முறையின் அடிப்படையில் கட்டிக் காக்கப்படுவதாகும். சாதியின் தோற்றம் வளர்ச்சி எளிய வகைப்பட்ட மறு உற்பத்தியுடன் தொடர்பு கொண்டு இருந்தவை. நில உடமை சமூக காலத்தில் சுயதேவை உற்பத்திக்கானவையாக இருந்தது. சாதி அமைப்பு என்பது முதலாளித்துவதிற்கு முந்தைய உற்பத்தி வடிவமாகும்.
வர்க்கம் பற்றி வரையறை நீண்டதாக இருப்பினும்:- வர்க்கமானது உடைமை சமூகத்தில் உடமை உள்ளவனும் உடமை அற்றவனும் அதாவது அரசு உருவாகத்தில் ஒரு பக்கம் ஒடுக்குபவனும் இன்னொரு பக்கம் ஒடுக்கப்படுபவனும் ... ஒரு பக்கம் சுரண்டுபவனும் இன்னொரு பக்கம் சுரண்டப்படுவோனும்.... இதில் மூன்றாவது பிரிவு ஒன்று என்று இல்லை.
ஆக வர்க்க போராட்டத்திற்கும் சாதியத்துக்கும் இடையிலான உறவு, வர்க்கம் என்பது ஜாதியின் மறுபடியுமாக இருந்த நிலவுடமை காலகட்ட சூழலும் இன்றைய அரை நிலவுடமை சூழலும் ஒன்றா?
சமுதாய வளர்ச்சிக்கு போக்கில் உழைப்பு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்டுள்ள மாற்றம் சாதியின் பொருளியல் கூறுகள் தகர்ந்தாலும் அதனை இன்று கட்டிக் காப்பது யார் ஏன்? இதனை தவிர்க்கவே பல கருத்துகளை 1960 களுக்கு பிறகு குறிப்பாக இன்றைய தனியார் மய தாராளமய உலக மய கொள்கையால் மக்கள் வாழ வழியற்று கிடக்கும் இந்த நேரத்தில் படித்தாலும் வேலையில்லை, கல்வி வாய்ப்பே மறுக்கப் பட்டுக்கொண்டுள்ளது மருத்துவம் ஏழை எளிய மக்களுக்கு எட்டாகனியாகி விட்ட இச்சூழலில் உண்மையான எதிரியை மூடிமறைக்க வர்க்க எதிரிக்கு பதிலாக நட்பு வர்க்கங்களிடையே பகைமையை எப்படி மூட்டுகின்றனர் என்பது நெடிய தேடுதல்கள். பின்னர் பார்ப்போம் அதனை.
இன்றுள்ள சில முரண்களை கருத்தில் கொள்வோம், படிப்பதற்கும் வேலைக்கும் இட ஒதுக்கீடு என்பது உண்மையில் இன்று சட்ட ரீதியாக இருந்தாலும் அந்த மக்களுக்கு பயன்படுகிறதா என்பதனை நடைமுரையில் புரிந்துக் கொள்ளுங்கள்.
படிப்பதற்கான இட ஒதுக்கீடு என்பது சாதி அமைப்புகளின் கோரிக்கை ,வேலை ஒதுக்கீட்டு கோரிக்கையும் போராட்டமும் ஜாதி அமைப்புகளை தக்க வைத்துக் கொள்ள பயன்படுவதாக உள்ளன. இதே ஜாதி சான்றிதழ் அரசு வழங்கும் மாயையான சலுகளைப் பெற சாதி சான்றுகள் ஒரு கடவு சீட்டு(Pass port) போல உள்ளன. இந்த ஜாதி அமைப்பினால் மிக அநியாயமாக பாதிக்கப்படுபவர்கள் பட்டியல் இன மக்களே. ஜாதி அமைப்பினால் ஆளும் வர்க்க நலன்கள் மட்டுமே மிகவும் சிறப்பாக நிறைவேற்றப்படுகின்றன.
இன்றோ வேலைவாய்ப்பே இல்லை இட ஒதுக்கீடு என்பது மாயை ஆகி உள்ளது தனது வேலை இன்மைக்கு காரணம் யாரோ வேலை வாய்ப்பை தட்டிப் பறிப்பது போல் ஜாதி கட்சிகள் பட்டியல்யின மக்களுக்கு எதிராக படித்த இளைஞர்களை திசை திருப்புகின்றன அரசின் இயலாமையை மூடி மறைக்க எல்லாவிதமான ஜாதி சங்கங்களும் கட்சிகளும் இச்செயலை செய்கிறது.
இதனை கருத்தில் கொண்டு இந்த விவாதத்தை முன்னெடுப்போம். பொருளாதாரத் துறையில் ஜாதியினர் ஆதிக்கம் கணிசமான பங்கு மாறுதல் ஏற்பட்டிருந்தாலும் கருத்தியல் துறையில் தொடரத்தான் செய்கின்றன முழுவதான காரணம் இந்த அரசமைப்பே தான்.
சாதி ஒழித்தாலே வர்க்கப் போராட்டம் நடத்த முடியும் என்பது ஜாதியையும் வர்க்கத்தையும் புரிந்து கொள்ளாமையே. ஒரே ஜாதிக்குள் இரு வர்க்கங்கள் உள்ள போது பகை வர்க்கங்களின் ஒற்றுமை காக்கலாம் என்கின்றீரா?
ஜாதி தொடர்பான மூன்று விதமான அணுகுமுறைகள் உள்ளதை புரிந்துக்கொள்ள...
ஆளும் வர்க்கத்தின் அணுகுமுறை :- சுண்டலுக்கு ஏற்ற வகையில் ஜாதி அமைப்பை கட்டிக்காத்து பட்டியல்யின ஜாதியிலுள்ள திறமையான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற பெயரில் தனக்கு சேவகம் செய்ய பயன்படுத்திக் கொள்கிறது.அவர்கள் இந்த அமைப்பை கட்டிக் காக்கவும் இந்த ஆளும்வர்க்கத்துக்கு உறுதுணையாகவும் பயன்படுகின்றனர்.
இடைத்தட்டு வர்க்கங்களின் அணுகுமுறை:- சில ஜாதி அமைப்போடு தொடர்பில் உள்ளவர்கள் இவர்கள் குட்டி முதலாளித்து வர்க்கத்தினர் தத்தம் ஜாதிகளை மேம்படுத்தினால் ஜாதி ஒழிந்துவிடும் என்று நினைக்கின்றார்
வேலையில் இட ஒதுக்கீடு கல்வியில் இட ஒதுக்கீடு போன்ற சீர்திருத்தத்தின் மூலமாக மட்டுமே ஜாதி உள்ள அனைவரும் உயர்ந்துவிட முடியும் எனக்கு தாராளமாக நினைக்கின்றனர்.
பாட்டாளி வர்க்க அணுகுமுறை :- இது ஜாதி அமைப்பை ஒழித்து கட்ட விரும்புகிறது. அனைத்து ஒடுக்கு முறையின் ஒரு பகுதியாக ஜாதி ஒடுக்குமுறையை காண்கிறது.
சாதியின் பொருளாதார கலாச்சாரகள் கூறுங்கள் ஒழிக்கப்படும் பொழுது சாதி ஒழியும். இதற்கு அடிப்படையான சமூக மாற்றத்தின் ஊடாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் அம்பேத்கர் பற்றிய மதிப்பீடு
அவரின் ஏற்கத்தக்க பங்களிப்பு
தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்கு முறைக்கு எதிராக கவனம் குவித்தது. அந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்டு மக்களின் மேம்பாட்டுக்காகவும் சுயமரியாதைக்காவும் சீர்திருத்துக்காக அம்பேத்கர் போராடினார். ஜாதி ஒழிப்பு மக்கள் நல்வாழ் திட்டங்கள் ஆகியவை சட்டபூர்வமான வழிகளில் அடைய இயலுமென அம்பேத்கர் குறிப்பிட்டார். அந்த மக்களின் நல்வாழ்வுக்காக அரசாங்க திட்டங்களை முன் வைத்தார்.
பாதகமான அம்சங்கள்
இந்தியாவின் நில உடமையையும் சாதி அமைப்பையும் பாதுகாத்த பிரிட்டான் காலனி ஏகாதிபத்தியத்தை அம்பேத்கர் எதிர்க்கவில்லை.ஜாதி ஆதிக்க தீர்வு ஏற்படும் வரை பிரிட்டிஷ் ஆட்சி இருந்தாக வேண்டும் என்று விரும்பினார்.
அரசியல் சட்ட ரீதியான அணுகுமுறை
அரசு கட்டமைப்புக்கு உட்பட்ட அரசியல் சாசன வடிவிலான சீர்திருத்தங்கள் வாயிலாக தாழ்த்தப்பட்ட மக்களின் சிக்கல்கள் தீரும் என்பதில் அம்பேத்கர் உறுதியாக இருந்தார். அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்ட சமூக மாற்றத்துக்கான இயக்கங்களை அவர் புறக்கணித்தார். இந்த மாயைதான் இன்றும் இந்த மக்களை என்றும் இந்த அமைப்பு முறைக்குள்ளேயே சிந்திக்க சொல்கிறது.
மதங்கள் மீதான அணுகுமுறை இரண்டாம் உலகப் போருக்கு பின் மக்களை சோசலிச முகாமுக்கு செல்லாத வகையில் மதங்களை பயன்படுத்தியது. அதாவது மதங்களாக மக்களை பிரித்தாலும் சூழ்ச்சியில் ஏகாதிபத்தியம் செயல்பட்டது, இதனை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். இதுதான் அவரை புத்த மதத்திற்கு மாற செய்தது. மதத்தில் இருந்து அரசியலைப் பிரித்து அறிய தயாராக இல்லை அவர்.
புரட்சியா சீர்திருத்தமா?
காலனி ஆதிக்க முடிவானது சீர்திருத்த மாயைகளை ஏகாதிபத்தியம் உருவாக்கியது, இதனை ஏற்றுக் கொண்டனர். இவ்வாறக இந்த சட்ட அமைப்புக்குள்ளேயே இந்த இழிவான நிலைக்கு தீர்வுகான நினைத்த அம்பேத்கார் எப்பொழுது புரட்சிகர சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்டார் என்பதனை ப்திவர் குறிப்பிட்டால் சிறப்பு.
மேலும், மார்க்சின் புரட்சிகர வாழ்க்கையைப் பற்றிப் பேசுகையில் ஏங்கெல்ஸ் கூறியுள்ளதாவது: "முதலாளிய சமுதாயத்தைத் தூக்கியெறிவதற்கும்அது உருவாக்கிய அரச நிறுவனங்களையும் தூக்கியெறிவதற்கும் எந்தப்பாட்டாளி வர்க்கத்தை அதன் சொந்த நிலைமை பற்றியும் அதன் தேவைகள் பற்றியும் உணர்வுடையவராக்கி அதன் விடுதலைக்கான நிபந்தனைகள் பற்றியும் உணர்வுடையவராக்கினாரோ அதன் விடுதலைக்கு ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பதே அவரது வாழ்வின் மெய்யான குறிக்கோள்.” என்றார்.
இதில் அம்பேத்கார் பாத்திரம் என்னே தோழர்கள் பேசலாம்.