Thursday, 13 April 2023

அம்பேத்காரை புரிந்துக் கொள்ள

 எல்லா ஒடுக்குமுறைகளும் அதிகாரத்தின் மூலமே செலுத்தப்படுகிறது.நிலவுகிற ஒடுக்குமுறையை ஒழிப்பத்தற்கு அதிகாரம் உழைக்கும் மக்கள் கைகளில் வரவேண்டும். புரட்சிகர அதிகார மாற்றம் இல்லாமல், புரட்சிகர சமூக மாற்றம் சாத்தியம் இல்லையென்பதே மார்க்சியம்.

சாதிய ஒடுக்குமுறைகள் அனைத்தும் சாதிய அதிகாரத்தின் மூலமே நிகழ்த்தப்படுகின்றன.ஆகவே சாதியை ஒழிப்பதற்கு சாதியாதிக்கவாதிகளின் அதிகாரம் ஒழிக்கப்பட்டு,சாதி ஒழிப்பாளர்களிடம் அதிகாரம் வார வேண்டும்.அனால் அம்பேத்கரோ தலைகீழாக சாதி ஒழிப்பை முன்வைக்கிறார். அதிகார மாற்றமில்லாத,கற்பனாவாத சாதி ஒழிப்பை கூறுகிறார். இது இன்று சாதியவாதம் பேசிக்கொண்டு பிழைப்பு நடத்தும் தலித் இயக்கங்களைத்தான் தோற்றுவித்துள்ளது.அம்பேத்கர் அதிகாரவர்க்கத்தின் இராணுவம்,போலிசுநாடாளுமன்றம்,  நீதித்துறை மற்றும் அதன் அமைப்புமுறை குறித்து எந்த கேள்வியையும் உறுதியாக எழுப்பாதவர். அவரின் கோட்பாடு சாதிய கட்டுமானத்தை உடைப்பதில் தோற்றுவிட்டது. அவர் சமூகத்தின் பிரதானமான ஒடுக்குமுறை சக்திகளை கணிக்க தவறிவிட்டார்.சாதியைஅதற்கான பொருளாதார அடித்தளத்தை அழிக்கும் திட்டம் எதுவும் அம்பேத்கரியத்தில் இல்லை.
இன்னும் கொஞ்சம் ஆழமாக பேசினால் அம்பேத்கரின் கருத்துகள் ஆளும் வர்க்கத்திற்கு பாதுகாப்பான ஓன்று.அது சட்டவாதத்தில் மூழ்கிப்போனது.கம்யூனிச கருத்துகளை ஒழித்துகட்ட அதை நாடு முழுவதும் கொண்டு சேர்த்ததும் அதே ஆளும் வர்க்கம்தான். என்.ஜீ.வோக்கள், வெளிநாட்டு பவுண்டேஷன்கள்,பின்நவீனத்துவவாதிகள் முதல் காவிகூட்டங்கள் வரை அம்பேத்கரை பயன்படுத்துவதற்கு உண்டான அத்தனை கூறுகளும் அவரிடமே இருகின்றன.
இதுபோல இன்னும் நாம் சாதி ஒழிப்பில் முன்னேறிச் செல்ல தோழர் ரங்கநாயகம்மாவின் நூல் மட்டுமே போதாது என்றாலும்,அதற்கான தொடர் முன்னெடுப்புகளுக்கு இந்நூல் மிகவும் உற்ற துணையாக இருக்கும். அந்த வகையில் நூலாசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் இருவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்.

உலகம் மாயை என்ற தத்துவம் ஒரு புதிய கண்டுபிடிப்பு என்பது நமது அறிவுக்கு ஒரு பெரிய பங்களிப்பாகும். இந்த கண்ணோட்டத்திலிருந்துதான் நான் இந்த புத்தகத்தை பரிந்துரை செய்கிறேன்.” என்கிறார். (தொகுதி 36 பக்123) “பண்டைய காலத்தில் பிரெஞ்சு புரட்சியே ஒரு சுண்டைக்காய் என்று சொல்லுமளவுக்கு இந்தியா ஒரு புரட்சி பூமியாக விளங்கியது.” என்று அதிகபட்ச பெருமையோடும், கொஞ்சம் கூட வரலாற்றுப் பார்வையின்றியும் மாயாவாதம் பேசிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் புரிந்து வைத்திருந்த இந்திய ஆளும் வர்க்கமும், போர்டு பவுண்டசனும் தாங்கள் பெற்றெடுத்த தலித்தியம் என்ற பிள்ளையை வளர்த்தெடுக்க அம்பேத்கரை பயன்படுத்திக்கொண்டது. இதன் பின்னர்தான், குறிப்பாகச் சொன்னால் 9௦களின் ஆரம்பத்தில், தலித்துகளின் சிக்கலை அவர்கள்தான் பேச வேண்டும்,பெண்கள் பிரச்சனை பொதுப் பிரச்சனை அல்ல,அதற்கு மார்க்சியம் தீர்வை முன் வைக்கவில்லை என்பது போன்ற தொடர் தத்துவார்த்த,அரசியல் தாக்குதலை பின்நவீனத்துவவாதிகள் மற்றும் என்.ஜீ.வோக்கள் மூலமாக புரட்சிகர முற்போக்கு இயக்கங்களை உடைப்பதற்கு வீரியமாக முன்னெடுக்கப்பட்டது. இவை அனைத்திற்கும் அம்பேத்கர் மட்டுமே காரணம் இல்லையென்றாலும் அவரின் கோட்பாடுகளும்,கருத்துகளும் அதில் முக்கிய இடத்தை வகித்தது. இதன் வலைப்பின்னல் விரிவானது; ஆழமானது. எனவே இதை குறித்து நாம் இன்னொரு சந்தர்பத்தில் விரிவாக பேசுவோம். இப்போது நாம் மீண்டும் அம்பேத்கரிடம் செல்லலாம்.
1946 டிசம்பர் 17 அரசியல் நிர்ணய சபை விவாதத்தில் இப்படி பேசுகிறார்: “காலமும் சூழ்நிலையும் நன்கு அமையுமாயின் இந்த நாடு ஒரே நாடாக பரிணமிப்பதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது... நம்மிடையே எத்தனை எத்தனையோ ஜாதிகளும் சமயக் கோட்பாடுகளும் இருப்பினும் நாம் ஐக்கியப்பட்ட மக்களாக ஆவோம் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.இந்தியாவை பிரிக்க வேண்டுமென்ற முஸ்லிம் லீகின் கிளர்ச்சி இருந்தபோதிலும்,ஒருநாள் முஸ்லீம்களிடையிலே போதுமான தெளிவு ஏற்பட்டு ஐக்கியப்பட்ட இந்தியாவே தங்களுக்கும் நல்லது என்று அவர்கள் சிந்திக்க துவங்குவர் என்று கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் மயக்கமும் இல்லை.” (தொகுதி 26 பக் 13)
இந்துக்களை விட தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு முஸ்லீம்கள் ஒன்றும் பெரிய நண்பர்களல்ல என்பது எனது கருத்து.” (தொகுதி 35 பக் 468) “அரிஜன வகுப்பினரின் நியாயமான கோரிக்கைகளை இந்து மகாசபா ஏற்றுக்கொள்வதாக இருந்தால் தானும் இந்து மகாசபாவில் சேர்ந்து கொள்ள தயார்” (தொகுதி 37 பக் 392). 

இந்திய இராணுவத்தில் முஸ்லீம்களின் செல்வாக்கை குறைத்து, விரோத சக்திகளை வெளியேற்றிவிட வேண்டும்.நமது பூமியை நாம் காப்பாற்றுவோம்.இந்தியாவில் முஸ்லிம் சாம்ராஜ்யத்தை பாகிஸ்தான் விரிவுபடுத்தி விடும் என்று தவறான கருத்துக் கொண்டிருக்க வேண்டாம். இந்துக்கள் அதை மண்ணை கவ்வச் செய்வார்கள்.  சாதி இந்துக்களிடம் நான் சண்டையிடுகிறேன் என்பது உண்மைதான்ஆனால் நமது பூமியைக் காப்பற்றுவதற்காக நான் எனது உயிரையும் கொடுப்பேன் என்று உங்கள் முன் சத்தியம் செய்கிறேன்” (தொகுதி 37 பக் 294). “பாகிஸ்தானில் அவர்கள் (தாழ்த்தப்பட்ட மக்கள்) இந்தியாவிற்கு வர அனுமதிக்கபடுவதில்லைஅவர்கள் பலவந்தமாக இஸ்லாமிற்கு மாற்றப்படுகிறார்கள்.ஹைதராபாத்தில் அங்குள்ள முஸ்லிம் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கத்தோடு அவர்கள் பலவந்தமாக முஸ்லீம்களாக மாற்றப்படுகிறார்கள்.” (தொகுதி 35 பக் 473) தொடர்ந்து அடுத்தடுத்த பக்கங்களில் (474, 475)
முஸ்லீம்கள் நண்பர்களல்லஎன்ற தலைப்பில் அம்பேத்கர் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியர் போலவே அவ்வளவு முஸ்லீம் விரோத்ததுடன் பேசிச் செல்கிறார்இந்துமதமும் புத்தமதமும் ஒன்றுதான்அது முஸ்லிம்கள் படையெடுப்பால் தனது பரிசுத்த தன்மையை இழந்துவிட்டது என அந்த தொகுதி முழுவதும் இப்படியேதான் போகிறது. இந்து மதம் போல கொடுமையான மதத்தில் இருந்து எவ்வளவு தீண்டாமை கொடுமையை அனுபவித்தாலும் இஸ்லாமிற்கு மட்டும் மாறிவிடக்கூடாது என்ற அம்பேத்கரின் இதுபோன்ற பேச்சுகளைத்தான் காவிக்கூட்டங்கள் இன்று பயன்படுத்திக்கொள்கின்றனஇதற்கிடையில் ஆங்காங்கே மத பிடிப்பு பற்றிய கருத்துகள் நிரம்பி வழிகின்றன.
என்னிடமிருக்கும் நல்ல பண்புகளுக்கும்என் கல்வியால் சமுதாயத்திற்கு கிடைத்த நல்ல பயன்களுக்கும் என் மத உணர்வுகளே காரணம்” (தொகுதி 37 பக் 248). “சோசலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் சொல்வதுபோல மதமே தேவையில்லை என்று நான் நம்பவில்லைமனிதனுக்கு மதம் கண்டிப்பாக தேவைநீதிதர்ம சாசஸ்திரங்களைப்போல மனித குலத்தை எந்த அரசாங்கமும் பாதுகாக்கவோ, ஒழுங்குபடுத்தவோ இயலாது” (தொகுதி 37 பக் 58). “மறுபிறப்பில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. மறுபிறப்பு என்பது தடுக்க முடியாது என்பதை விஞ்ஞானிகளுக்கு என்னால் நிரூபித்துக் காட்ட முடியும்” (தொகுதி 37 பக் 656). “சடங்குகள் என்பவை மதத்தின் ஒரு முக்கி அங்கம். பகுத்தறிவுவாதிகள் என்னதான் சொன்னபோதிலும் மதத்தில் சடங்குகள் முக்கிய அங்கம்.” (தொகுதி 37 பக் 59).

என்னை பொறுத்தவரை நாடாளுமன்ற முறை அரசாங்கத்திற்கு நான் பெரும் முக்கியத்துவம் தருகிறேன்.... நாடாளுமன்ற ஆட்சி முறையில் வாரிசு ஆட்சிக்கு இடமில்லை... (சே! இப்போதிருக்கும் வாரிசுகள் என்ன நினைப்பார்கள்?) இந்நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகம் தோற்றுப்போனால் நான் குறிப்பிட்ட காரணங்களினால்தான் அது தோற்றுப்போகும். அதன் விளைவாக கலகம், அராஜகம், கம்யூனிசம் தோன்றும்... ரஷ்யா நமது நாட்டில் மேலாண்மை பெற்று தனிமனித சுத்தந்திரத்தை நசுக்கி, நமது சுத்தந்திரத்தையும் ஒழித்துவிடும். (தொகுதி 37 பக் 531-539). என்றும்..
“...உண்மையைக் கூறுவதானால் இது பாதி உலகை தன் பிடியில் வைத்துக் கொண்டுள்ள விஷயம்.பௌத்த நாடுகளில் ஏராளமான மாணவர்கள் இதன் பிடியில் சிக்கி உள்ளனர்.இந்த விசயத்தின் பிந்திய அம்சத்தை நான் மிகுந்த கவலையோடு நோக்குகிறேன்.”என்று ஆரம்பித்து கம்யூனிஸ்டுகளின் வெற்றிகளை கண்டு மயங்கி விடாதீர்கள்என்பது வரை அவ்வளவும் கம்யூனிச வெறுப்பு. -(புத்தரா அல்லது காரல் மார்க்ஸா (தொகுதி 37 பக் 75-717) என்றும்.. கம்யூனிச நாடுகளில் ஒழுக்கநெறி என்பதே இல்லை எனவும், அது எதிர்படும் எல்லாவற்றையும் எரித்து அழித்துவிடும் என்றும் கடுமையாக பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தார்.
கம்யூனிசத்தை கடுமையாக எதிர்த்தவரின் இந்துத்துவ கரிசனை
அவரின் எழுத்துகள் பேச்சுகள் அனைத்தும் இந்துத்துவ இயக்கங்கள் அவரை பயன்படுத்துவதற்கு ஏதுவாகவும்,மிகவும் பயனுள்ளவையாகவும் இருப்பதற்கு ஏற்ற வகையில் உதவி செய்து கொண்டிருந்தது. இந்துமதம் அழிய வேண்டும் என்று அவர் பேசியதை விட இந்துமதத்தில் சீர்திருத்தங்கள் வேண்டும் என அவர் பேசியது,ஒன்றுபட்ட இந்தியாவை கோரியது,மொழிவாரி மாநிலங்களை எதிர்த்தது,இந்திமொழியை மட்டுமே ஆட்சி மொழியாக்க வேண்டும் என சொன்னது,அதுவும் தேவநாகரி வடிவில்தான் இருக்க வேண்டும் என்றது,சமஸ்கிருத்தத்தை அலுவலக மொழியாக்க சம்மதம் தெரிவித்து அந்த மொழியை ஆதரித்து உயர்வாக பேசியது,முஸ்லிம்களுக்கு எதிராக பேசியது,காஷ்மீர் விவகாரம்பொது சிவில் சட்டம் என அந்த பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.
சுவாமி வேதாநந்தா தீர்த்தா எழுதிய ராஷ்ட்ர ரக்க்ஷ கி வைதிக் சதன் நூலுக்கு எழுதிய முன்னுரையில் கொஞ்சம் இந்தியாவின் பண்டைய வேத காலத்தை புகழ்ந்து விட்டு உலகம் மாயை என்ற தத்துவம் ஒரு புதிய கண்டுபிடிப்பு என்பது நமது அறிவுக்கு ஒரு பெரிய பங்களிப்பாகும். இந்த கண்ணோட்டத்திலிருந்துதான் நான் இந்த புத்தகத்தை பரிந்துரை செய்கிறேன்.” என்கிறார். (தொகுதி 36 பக்123) “பண்டைய காலத்தில் பிரெஞ்சு புரட்சியே ஒரு சுண்டைக்காய் என்று சொல்லுமளவுக்கு இந்தியா ஒரு புரட்சி பூமியாக விளங்கியது.” என்று அதிகபட்ச பெருமையோடும்,கொஞ்சம் கூட வரலாற்றுப் பார்வையின்றியும் மாயாவாதம் பேசிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் புரிந்து வைத்திருந்த இந்திய ஆளும் வர்க்கமும், போர்டு பவுண்டசனும் தாங்கள் பெற்றெடுத்த தலித்தியம் என்ற பிள்ளையை வளர்த்தெடுக்க அம்பேத்கரை பயன்படுத்திக்கொண்டது. இதன் பின்னர்தான், குறிப்பாகச் சொன்னால் 9௦களின் ஆரம்பத்தில், தலித்துகளின் சிக்கலை அவர்கள்தான் பேச வேண்டும்,பெண்கள் பிரச்சனை பொதுப் பிரச்சனை அல்ல,அதற்கு மார்க்சியம் தீர்வை முன் வைக்கவில்லை என்பது போன்ற தொடர் தத்துவார்த்த,அரசியல் தாக்குதலை பின்நவீனத்துவவாதிகள் மற்றும் என்.ஜீ.வோக்கள் மூலமாக புரட்சிகர முற்போக்கு இயக்கங்களை உடைப்பதற்கு வீரியமாக முன்னெடுக்கப்பட்டது. இவை அனைத்திற்கும் அம்பேத்கர் மட்டுமே காரணம் இல்லையென்றாலும் அவரின் கோட்பாடுகளும்,கருத்துகளும் அதில் முக்கிய இடத்தை வகித்தது. இதன் வலைப்பின்னல் விரிவானது; ஆழமானது. எனவே இதை குறித்து நாம் இன்னொரு சந்தர்பத்தில் விரிவாக பேசுவோம். இப்போது நாம் மீண்டும் அம்பேத்கரிடம் செல்லலாம்.
1946 டிசம்பர் 17 அரசியல் நிர்ணய சபை விவாதத்தில் இப்படி பேசுகிறார்: “காலமும் சூழ்நிலையும் நன்கு அமையுமாயின் இந்த நாடு ஒரே நாடாக பரிணமிப்பதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது... நம்மிடையே எத்தனை எத்தனையோ ஜாதிகளும் சமயக் கோட்பாடுகளும் இருப்பினும் நாம் ஐக்கியப்பட்ட மக்களாக ஆவோம் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. இந்தியாவை பிரிக்க வேண்டுமென்ற முஸ்லிம் லீகின் கிளர்ச்சி இருந்தபோதிலும்,ஒருநாள் முஸ்லீம்களிடையிலே போதுமான தெளிவு ஏற்பட்டு ஐக்கியப்பட்ட இந்தியாவே தங்களுக்கும் நல்லது என்று அவர்கள் சிந்திக்க துவங்குவர் என்று கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் மயக்கமும் இல்லை.” (தொகுதி 26 பக் 13)
இந்துக்களை விட தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு முஸ்லீம்கள் ஒன்றும் பெரிய நண்பர்களல்ல என்பது எனது கருத்து.” (தொகுதி 35 பக் 468) “அரிஜன வகுப்பினரின் நியாயமான கோரிக்கைகளை இந்து மகாசபா ஏற்றுக்கொள்வதாக இருந்தால் தானும் இந்து மகாசபாவில் சேர்ந்து கொள்ள தயார்” (தொகுதி 37 பக் 392). இன்னொரு இடத்தில் அந்த அமைப்பை விமர்சிக்கிறார். இப்படி தொடர்ச்சியாக மாறி மாறி பேசுவது மட்டும்தான் அம்பேத்கரிடம் மாறாத ஒன்றாக இருக்கிறது.