அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார் ஆகியோரின் வரலாற்றுப் பாத்திரம் என்பதை மறுக்க முடியாது. அவர்கள் முதலாளித்துவ சகாப்பத்தில் நுழைந்த போது நிறுவனமயப்பட்ட உரிமைகளை அனைவரும் கிடைக்க இடையறாது குரல் கொடுத்தார்கள். ஆனால் அவர்களை பொதுவுடைமைச் சிந்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகவோ, உற்பத்திமுறையை மாற்றியமைப்பதன் ஊடாக மாற்றம் கொள்ள முடியும் என்று நம்பியவர்கள் அல்ல. --------------------------------------------------------------
1."நான் கம்யூனிஸ்டுகளின் பரம்பரை எதிரி". மேலும் அவர்கள் தங்களது அரசியல் நோக்கத்திற்காக தொழிலாளர்களை சுரண்டுபவர்கள். பொதுவுடமை தத்துவம் பன்றிகளின் தத்துவம். புரட்சி வேலைக்காகது.. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை விட புத்தமே சிறந்தது.. மதம் மக்களுக்கு அபின் இல்லை.. மதம் சமுதாய புத்தெழுச்சிக்கு வழிவகுக்கும்.(அம்பேத்கர் நூல் தொகுப்பு-தொகுதி 7. பக்402-433 மற்றும் தொகுதி:37-பக்212)
2.1929ல் நடைபெற்ற பம்பாய் நெசவாலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தையும், அதை நடத்திய கம்யூனிஸ்டுகளையும் எதிர்த்து சகட்டுமேனிக்கு அவதூறு செய்கிறார்.
3. இந்தியா ஒரே நாடாகத்தான் இருக்க வேண்டும் என்றும், இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக; அதுவும் தேவநாகரி வரிவடிவில்தான் இருக்க வேண்டும் என்கிறார். மொழிவழி மாகாணங்கள் இந்தியாவை உடைத்து விடும் என்கிறார்.
(1948ல் மொழிவாரி மாநில அமைப்பு குழுவில் அம்பேத்கர் அளித்த அறிக்கை)
4. ரஷ்ய கம்யூனிசம் மோசடியானது.. இந்தியா ஒருபோதும் கம்யூனிச நாடாக ஆகக் கூடாது.. நாடாளுமன்ற ஜனநாயகமே உயர்வானது.. இரஷ்ய பூதம் பல நாடுகளை காவு கொள்கிறது.. கம்யூனிச நாடுகளில் ஒழுக்கநெறி என்பதே இல்லை.. ரஷ்யாவில் பொதுவுடைமை தோற்கும்.. சொத்திற்காக மக்கள் அங்கே ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு ரத்தக்களறியில் ஈடுபடுவர்.
(தொகுதி 37-பக் 531-539 மற்றும் 1947 ஏப்ரல் 13 நவயுகம் அம்பேத்கர் சிறப்பு மலர் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகம் தோற்றுப்போனால் கலகம், அராஜகம், கம்யூனிசம் வரும் என்ற அம்பேத்கரின் கட்டுரை )
5. லாலா லஜபதிராய் இந்திய விடுதலை இயக்கத்தில் அம்பேத்கரை பங்கெடுக்க கோரியபோது நான் நியூயார்க்கில் படிக்க மட்டும்தான் வந்துள்ளேன் என மறுக்கிறார். பின்னர் படிக்கும் காலத்தில் மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க கூடாது என்கிறார். (1933 ஏப்ரல் 4ல் ஆகாகான் விடுதி பேச்சு). ஒத்துழையாமை இயக்கம் வன்முறையானது என எதிர்க்கிறார்.
(முன்பு ஒருமுறை கீதையின் தத்துவமே சத்யாகிரககம்தான் என 1927 டிசம்பர் 25, 26ல் நடைபெறும் செளதார் குளத்தில் நீர் எடுக்கும் போராட்டத்தை முன்னிட்டு அம்பேத்கர் பேசியது குறிப்பிடத்தக்கது)
6. அரசியலை விட மதத்தில்தான் நான் அதிக நாட்டம் கொண்டவன். கம்யூனிஸ்டுகள் மார்க்ஸைவிட புத்தரை அதிகம் உள்வாங்க வேண்டும்.
( புத்தரா? கார்ல் மார்க்ஸா? என்ற அம்பேத்கரின் கட்டுரை)
மேலதிக ஆதாரங்களுக்கு தான் வாழுங்காலத்திலே தனது வாழ்க்கை வரலாற்றை தானே மெய்ப்பு பார்த்த அவருடைய வாழ்க்கை வரலாறு. தனஞ்செய்கீர் எழுதிய நூல். தமிழில் பெரியார் அறக்கட்டளை வெளியீடு. அதன் பக்கங்கள்: (41,172,184, 203, 344, 433, 579, 603, 604, 653, 665, 666, 667, 672, 675, 677, 678, 679, 696, 741, 757).
அம்பேத்கர்:சாதி ஒழிப்பினை நோக்கிய ஓர் கலங்கரை விளக்கம்(AMBETKAR:A BEACON TOWERDS ANNIHILATION OF CASTE)-----இரா.குசேலன்----- (வழக்குறைஞர்)
அன்புடையீர்.,
(1) ஏப்ரல்14 இந்திய சமூக(SOCIAL HISTORY OF INDIA) வரலாற்றில் ஓர் தனியிடம் பதித்த தினம்.1891ம் ஆண்டு ஏப்ரல் 14ல் அம்பேத்கர் பிறந்தார். இந்திய துணைக் கண்டத்தில் நீடித்து நிலவி வரும் "சாதி அடிமைத்தனம்(CASTE SLAVERY)"-தினை ஒழித்துக்கட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் " சாதி ஒழிப்பு" எனும் அறைகூவலை முன்நிறுத்தி தன்னுடைய "பிறப்பு-வாழ்வு-பணி"அனைத்தினையும் தனது கடைசி மூச்சு வரை அர்பணித்துக் கொண்டவர்.ஒருவர் தர்க்கரீதியாக ஒரு கேள்வியினை எழுப்பலாம்.அது எப்படி? ஒருவர் தனது பிறப்பில் இருந்தே சமூக கொடுமைக்கு எதிராக தன்னை அர்பணித்துக் கொள்ளவது? ஆம். சாதி என்பது பிறப்பிலேயே இன்னும் சொல்லப்போனால்,ஒருவரது பிறப்பிற்கு முன்பாகவே நிர்ணயிக்கப்பட்டு விடும் ஒரு விந்தையான சமூகப்பண்பு.சுதந்திர போராட்டத்தில் தலையை எட்டிக்கூட காட்டாத,பொய்யான தேசியம் பேசும் சாதிய சனாதான சக்திகள் "பாரதம் உலத்தின் குருவாகக் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை"எனும் பிரச்சாரத்தினை செய்துவருகிறது.இந்த "பாரதக் குரு" தன்னுடைய சாதியக் கோரமுகத்தினை உலகின் எண்ணுறூ கோடிக் மக்களின் கண்களுக்கு முன்னால் வெளிக்காட்டப் போகும் நாள் வெகுதொலைவில் என இல்லை எனக் கூறும் "சாதியத்தின் மனதின் குரல்" உலகின் காதில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.இந்துத்துவ பாசிசம் குறித்து இன்னும் பல BBC ஆவணப்படங்களை காலம் காட்சிப்படுத்தும். 2001ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் "டர்பன்"நகரில் நடைபெற்ற இனவெறிக்கு எதிரான முதலாவது உச்சிமாநாட்டிலேயே "சாதிய ஒடுக்கு முறையை இனவெறி பாகுபாட்டோடு இணைத்து வகைப்படுத்த வேண்டும்" எனும் குரல் ஒலித்தபோது இந்திய அரசு அதனை மறுத்தது.சாதியத்தின் பாதுகாவலர் "அரசு- அதிகாரம்- தனிச்சொத்து" ஆகியனவே என்பதினை நாம் நினைவில் கொள்ளவேண்டும். (2)இயற்பண்புகள்(NATURAL PROPERTIES) கூட அதாவது ஒருவன் கருப்பா- சிவப்பா? என்பதை தீர்மானிப்பது கூட சமுகம் அல்ல, இயற்கையே! ஆனால்,ஒருவனது சாதியை தீர்மானிப்பது சமுகமே!. அவனது பிறப்பிலிருந்து இறப்பு வரை சாதி அவனை துரத்திக்கொண்டே இருக்கிறது. புதைக்குழிக்குள் அவனது சடலத்தினை தள்ளிவதற்கு முன்புகூட அவனது பிணத்தின் மீது சாதிய அடையாளத்தின் ஆச்சாரங்கள் செய்யப்பட்ட பிறகுதான் அவனது ஜோலியை சாதி முடித்து வைக்கிறது.இப்படிபட்ட விந்தையான சிற்றுலகத்திற்குள் பிறந்தவர்தான் அம்பேத்தகர்.உலகின் நிலப்பரப்போடு ஒப்பிடும் போது சாதி நிலவும் நிலப்பரப்பு மிகச் சிறியது,ஆனால் சாதியத்தின் கொடுமையோ மிகப்பெரியது. சாதியையே தனது அடையாளமாகக் கொண்ட இந்து மதத்தின் பார்வையில் இந்திய துணைக் கண்டம்தான் ஓர் விசித்திரம்!.இந்துமத மும்மூர்த்திகளில் ஒருவரான சிவன் ஒவ்வொரு தடவையும் ருத்திர தாண்டவம்(COSMIC DANCE) ஆடி,அதாவது சிவ நடனம்(DANCE OF SIVA) ஆடி அடுத்தடுத்த யுகங்களை அழித்து மீண்டும் பிரம்மா-வுக்கு வேலையை கொடுக்கிறார். அதாவது,அடுத்த யுகத்தினை படைப்பது. அதாவது,சிவன் ஒவ்வெரு தடவையும் நடத்தும் "பிரபஞ்சப் பிரளயம்". அதன் மூலம் உருவாகும் பிரபஞ்சத்தின் அடுத்த யுகம்.இதன் கண்ணோட்டத்தில், இவர்கள் பார்வையில் இந்திய துணைக்கண்டமே! பிரபஞ்சத்தின் எல்லை. அப்படி இல்லையெனில் , உலகம் முழுவதும் பிரம்மா நால்வர்ணங்களை உருவாக்கியிருக்க வேண்டும்.உலகின் எண்ணுறூ கோடி மக்களும் இந்த நான்கு வர்ணத்திற்குள்ளும் நாலாயிரம் சாதிகளுக்குள்ளும் அடக்கப்பட்டிருக்க வேண்டும்.அவரது படைப்புகள் அனைத்தும் வர்ணாசிரமமும் கூட, அனைத்தும் இந்த துணைக்கண்டத்திற்குள்ளேயே ஒளிந்து கிடக்கிறது என்றால் இந்தியா எவ்வளவு சிறியது ஓர் சிற்றுலகம்!மெக்கலன் உலகை சுற்றிவராவிட்டால் இந்த, சாதியின் மதம்,அதாவது இந்து மதம்,உலகம் என்பது இந்திய மட்டுமே என்று உறுதியான நம்பிக்கையில் இருத்திருக்கும்."வாஸ்கோடகாமா" மட்டும் இந்தியா வராவிட்டால் பிரபஞ்சமே இந்தியாவிற்குள் அடக்கம் என்று சொல்லிருக்கும்! "சாதி-இந்து" ஒருவன், கடல் கடந்தால் அவனோடு சுற்றியுள்ள இந்து மத ஆச்சாரங்கள் அழிந்து போகும் என்பதுதான் பார்பனியத்தின் பழைய நம்பிக்கை,ஐதீகம்.எப்படி ஒரு விசித்திரமான தத்துவம்!.இதில்வேற,இந்த விந்தையான சாதிய-சனாதானம் உருவாகியதே தமிழ் நாடு என்பது தான்,கவர்னர்.,சங்கி ரவி-யின் கண்டுபிடிப்பு!
(3)இப்படி, ஒருவனின் பிறப்பிடம், வளர்பிடம் என அனைத்துமே சாதிக்குள் அடக்கம்.பிறந்த ஒவ்வொரு குழந்தையும் படிபடிப்படியாக சாதிய தன்மையை உணரத் தொடங்குகிறது.உயர் சாதியில் பிறப்பு என்றால், சாதிய ஆதிக்கத்தினை பெற்றுக் கொள்கிறது.கீழ் சாதியில் பிறப்பு என்றால், அந்த அளவிலான சமூக ரீதியிலான தாழ்வு மனப்பான்மையை பெற்றுக்கொள்கிறது.தீண்டதகாத பிறப்பாக இருந்தால் பிறப்பிலிருத்து இறப்புவரை அனுதினமும் செத்து-செத்து வாழும் வாழ்கையாக மாறிவிடுகிறது.இப்படி குழந்தைப் பருவத்தில் இருந்து சாதிய கொடுமைகளை கண்ணுற்று அனுபவித்து வரும் இந்திய சமுகத்தில் அம்பேத்தர் வாழ்வு மற்றும் அவரது பணி அனைத்தும் அவரது வாழ்க்கை வரலாறு, நம் கண்முன்னால் ஒரு முன்மாதிரியாக நிழலாடுகிறது.
(4)1913ம் ஆண்டு அமெரிக்க மண்ணில் கால் பதித்தார் அம்பேத்கர்.தனது 22வது வயதில் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மானுடவியல் துறையில் மாணவராக சேர்ந்தார்.சரியாக இருபது ஆண்டுகளுக்கு பிறகு தனது 44வது வயதில் "இந்திய அரசியலமைப்பு சட்டம்-தின் வரைவு குழு"விற்கு தலைமையேற்கும் பொழுது அமெரிக்க மண்ணின் அரசியலமைப்பு பற்றி ஆராய்வதில் தானும் வரும்காலத்தில் இடம் பெறப்போவதை அந்த இளைஞன் நினைத்திருப்பானா?அதுமட்டுமல்ல,அமெரிக்க அரசியலமைப்பின் முன்னோடிகளான ஹிம்மில்டன் மற்றும் ஜெஸ்பர்சன் ஆகிய எதிரும் புதிருமான ஆளுமைகளின் பங்களிப்பினைப் பற்றி அரசியலமைப்பின் வரைவுக்குழுவில் ஒரு ஆய்வாளராக இடம்பெறப் போகிறோம் என்பதினை இந்த இளைஞன் ஒருகணம் யோசித்துருப்பானா? அமெரிக்கா, சமுக-அரசியல் அரங்கில் முற்றிலும் வேறுபட்ட தேசம் அது.ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு முதலாளித்துவம் உருவாக்கிய மனைத்தொழில்(REAL ESTATE ESOCIETY) தேசம் அது! அங்கு நிலவிய,நிலவி வரும் நிறவெறியில் கூட தீண்டாமை என்பது ஒன்று கிடையாது.
(5) ஆனால், இங்கு(இந்தியாவில்) நெருங்கினால் தீட்டு; தொட்டால் தீட்டு; ஏன்? பார்த்தால் கூட தீட்டு(UN-SEEABLE; UN-APROACHABLE AND UN-TOUCHABLE)அப்படி ஒரு!! விந்தையான உலகத்திலிருந்து சென்ற இளைஞனுக்கு அமெரிக்க மண், இந்திய சமூகத்தின் சாதியக் கொடுமைகளை பற்றியும் கருத்தியில் தளத்தில் பல்கலைக் கழகத்தின் அறிவுலக வட்டாரத்தில் சாதியம் குறித்து கொட்டிதீர்க்கும் விதமாக கொலம்பியா பல்கலைக் கழகம் இருந்தது. "இந்தியாவில் சாதிகள்:அதன் தோற்றம்,வளர்ச்சி மற்றும் அமைப்பியக்கம்(THE CASTE IN INDIA: GENESIS,DEVELOPMENT AND DYNAMICS) எனும் தலைப்பிட்ட தனது கட்டுரை-யை பல்கலைக் கழகத்தின் மானுடவியல் துறைத் தலைவர் பேராசிரியர்.,கோலண்டைன் வாசியர் அவர்கள் முன்னிலையில் 1916 மே மாதம் 9ம் நாள் மாலைப் பொழுதில் நடைபெற்ற கருத்தரங்கில் படித்தார்.
(6)லெனின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-யை பற்றிக் கூறும் பொழுது"ஒரு சிறு நூல் ஆனால் மிகப்பெரும் புத்தகத்திற்கு சமமானது(A SMALL PAMPLET,BUT WORTHWHOLE OF A VOLUME)என்று சொன்னார்.அதைப்போலவே,சாதிய அமைப்பு குறித்து ஒரு சுருக்கமான உருவரையில் அலசி ஆராய்ந்த அம்பேத்கரின் "இந்தியாவில் சாதிகள்"எனும் இச்சிறு நூல் இந்திய சாதிய சமுக அரங்கிலும் அதன் அரசியல் தளத்திலும் சாதிய கட்டுமானத்தினை ஒழித்துக்கட்டப்பட வேண்டிய இலக்கில் அதற்கு கூடுதல் வலுசேர்க்கும் விதமாக "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-க்கு இணையான முக்கியத்துவத்தினைக் கொண்டது.டாக்டர்.,கெட்கர்;சர்.எச். ரிஸ்லி;நெஸ்ஃபீல்டு;செனார்ட் மற்றும் ஹண்டன் இன்ன பிற ஆங்கிலேயே;ஐரோப்பிய மற்றும் இந்திய வரலாற்று மற்றும் சமுகவியல் ஆய்வாளர்களின் சாதியம் குறித்த அவர்களது கண்ணோட்டங்களை அம்பேத்கர் விவாததிற்கு உட்படுத்தினார்.
(7) "இதுநாள் வரை தத்துவஞானிகள் உலகை வியாக்கானம் செய்திருக்கிறார்கள்,ஆனால்,விசயம். எப்படி? உலகை மாற்றுவது என்பதே"இதுவே மார்க்ஸ், மார்க்ஸிஸ்டாக ஆக மாறியதென் தொடக்கப் புள்ளி.அதைப்போன்றே இக்கட்டுரையின் காலகட்டத்திலேயே,"சாதி ஒழிப்பு" எனும் ஆழமான,தெளிவான மற்றும் உறுதியான கருத்தாக்கம் அம்பேத்கரின் சிந்தனை-யில் உருக்கொண்டது.இது ஒன்றும் அம்பேத்கரின் அகநிலை விருப்பம் அல்ல.மாறாக,சாதிய அமைப்பின் மீதான கோட்பாடு மற்றும் நடைமுறை சார்ந்த அம்பேத்கரின் திட்டவட்டமான கண்ணோட்டம்.சரியாக 20 ஆண்டுகளுக்கு பிறகு 1936ல் தன்னுடைய "சாதி ஒழிப்பு" எனும் அரசியல் நடவடிக்கையின் நீட்சி இங்கிருந்துதான் தொடங்கியது.அதுமட்டுமல்ல,நவ-தாராளவாததின் இன்றைய சூழலில் சாதிய-சனாதான கருத்தியில் அதன் நடைமுறை அனைத்தும் பாசிசமயமாக்கபடுகிது.இச்சூழலில்,நூற்றாண்டை கடந்து நிற்கும் அம்பேத்கரின் இக்கட்டுரை எவ்வாறு ஒரு உலகலாவிய பொருத்தப்பாட்டினை கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்க ஒன்றாகும்.
(8)இந்த பொருத்தப்பாடு இரு பெரும் அம்சங்களை கொண்டது. ஓன்று;சாதி குறித்து அம்பேத்கரின் அறிவியியல் கண்ணோட்டக் கற்பனை(SCIENTIFIC IMAGENATION).இதில் அம்பேத்கர் கூறுகிறார்"சாதிய அமைப்பு அமெரிக்கா மண்ணிற்கு வருவதாக வைத்துக்கொள்வோம்..அப்போது தான், அதன் விசித்திரத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்"
தற்பொழுது,இந்துத்துவ பாசிசம் மேலோங்கியுள்ள நிலையில்,அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய முன்னனி பன்னாட்டு கம்பெனிகளில் பார்ப்பனர்களே முதன்மை நிர்வாக அதிகாரிகளாக(CEOs)பதவியில் இருந்து வருகின்றனர்.அமெரிக்காவில் "டெக்சாஸ் மாகாணம்" மற்றும் "சிலிக்கான் பள்ளதாக்கு" பகுதிகளில் மென்பொருள் கார்போரேட் நிறுவனங்களில் தமிழ் பார்பனர்களே கொடிகட்டிப் பறக்கிறார்கள்.இவர்களால்தான் "சாதிய அமைப்பு" அம்பேத்கர் அன்று கூறியது போன்று அமெரிக்க மண்ணிற்கு தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது."சாதி ஒழிப்பு"எனும் கருத்தாக்கதிற்கு அவர் வந்தடைத்த துணிச்சல்,இரண்டாவது அம்சம் ஆகும்.
(9) 1930களில் அம்பேத்கரின் "சாதி ஒழிப்புக்கு" அறைகூவல்-க்கு முன்பாகவே சாதியத்தின் சிந்தாந்த அடித்தளத்தினை வழங்கும் "மனுதர்மத்தினை"1927ஆண்டு டிசம்பர் 21ம் நாள் பொதுவெளியில் வைத்துக் கொளுத்தினார்.சாவர்க்கர், இந்துக்கள் யார்? எனும் தனது நூலில் முன்வைத்த "இந்துத்துவா"எனும் பாசிச கருத்தியல்-க்கு எதிராக அதனை மறுதலிக்கும் விதமாக "சாதி ஒழிப்பு" யை முன்நிறுத்தினார்.சாதியத்தோடு ஒர் சமரசமற்ற போராட்டத்தினை இறுதிவரை அவர் முன்னெடுத்தது மட்டுமல்லாமல்,சாதி ஒழிப்பிற்கான செயல்திட்டத்தில் முற்போக்கு சக்திகளை இன்றுவரை அவரது வாழ்வும் பணியும் ஊக்கப்படுத்துவது இதுவேயாகும்.அதுமட்டுமல்லாமல்,சாதிய-சனாதானத்தினை உயர்த்திப் பிடிக்கும் இந்துத்துவ சக்திகளுக்கு சாதி ஒழிப்பு எனும் அறைகூவல் என்பது என்னதான்... இந்துத்துவ சக்திகள் நாங்களும் சாதிக்கு எதிரானவர்கள் எனக் காட்டிக்கொண்டாலும் நயவஞ்சகமாக அம்பேத்கரின் பெயரை உச்சரித்தாலும் "சாதி ஒழிப்பு " எனும் அம்பேத்கரின் அறைகூவல்,முழக்கம் சாதிய-சனாதான சக்திகளின் வயிற்றில் செறிக்கப்படாத கடப்பாரையாகவே இருத்து வருகிறது.
(10)பிரிட்டிஷ்-இந்திய
பேரரசாக மாறிய சமூக பின்னனினானது நவீன கால அரசியல் இயக்கத்திற்கு வழிவகுத்தது.பல இந்திய கவுன்சில்(INDIAN COUNCIL ACTS)சட்டங்கள் மற்றும் இந்திய அரசாங்க சட்டங்கள்(GOVERNMENT OF INDIA ACTS)மற்றும் பல நிர்வாக கட்டுமானங்கள்( EXECUTIVE ESTABLISHMENTS) வழியாக ஓர் புதிய சமுக-அரசியல்(EMERGING SOCIO-POLITICAL SCENARIO) அரங்கம் உருவாகியது.இதற்கு முன்பு மதவழியில் மட்டுமே "மக்கள் திரள்(PEOPLE'S GATHERINGS)கூடுகை இருந்து வந்தது. தற்பொழுதுதான் "அரசியல் வழிப்பட்ட மக்கள் திரள் கூடுகையாக" மாறிய "நவீன அரசியல் முறை"உருவாகியது. இது,பிற்காலத்தில் பிரிட்டிஷ் எதிப்பு அரசியல் தளத்திற்கும் அடிகோலியது.ஏற்கனவே இருந்த காங்கிரஸ் இயக்கத்தோடு கூடவே,சமுக-நீதி இயக்கம்;தொழிற்சங்க இயக்கங்கள்;முஸ்லீம்- இந்து-சீக்கிய மதப்பின்னனி உடைய இயக்கங்கள்;கம்யூனிஸ்ட்-சோசலிஸ்ட்;தலித்;பழங்குடியினர் இயக்கங்கள் என பட்டியல் நீண்டுகொண்டே சென்றது.
(11)ஏற்கனவே,பல சீர்திருத்த பின்னனியுடைய இந்து மத ஆன்மிக நிறுவனங்கள் மற்றும் அதன் முன்னனி ஆன்மீகப் பெரியோர்களை ஐரோப்பாவில் தலையெடுத்த பாசிச-நாஸி கருத்தாக்கங்கள் இந்து மதத்தினை அரசியல் தளத்திற்குள் இழுத்து செல்லும் புதிய பரிமாணத்தினைக் கொடுத்தது."டாக்டர். மூஞ்சே"போன்றர்களின் ஐரோப்பிய பயணம் இந்து ஆன்மீக அரசியலை மதஅடிப்படைவாத தளத்திலிருந்து பாசிச இயக்கங்களாக மாறவழிவகுத்தது.இதற்க்கு ஏதுவாக சாவர்க்கரின் இந்து மதம் என்பது "ஒர் வாழ்வியல் முறை(HINDU WAY OF LIFE) என்ற வியாக்கானம்,இதனை "இந்துத்துவா" எனும் புதிய பரிமாணமெடுத்து "இந்துமதத்தினை அரசியலாக்குங்கள்!அரசியலை ராணுவ மயமாக்குங்கல்"எனும் முழக்கத்துடன் "இந்துத்துவ பாசிசம்" சமுக-அரசியல் அரங்கில் செல்வாக்கு பெறத்தொடங்கியது.
(12) ஹிட்லரின் ஜெர்மனி-யை பாசிசமயமாக்கும் போக்கு 1930களுக்கு முன்பாகவே தொடங்கியது. அதிகாரத்திற்கு வந்த நாஸிக் கட்சி "ஆரிய இன மேன்மை(ARIYAN-SUPERMACY)"எனும் இனவாத அறிவியியல்(RACIAL SCIENCE)எனும் பெயரில் பல "நியூரம்பர்க் மாநாடு"களை நடத்தியது. பாசிசத்தின் தாக்கம் இந்தியாவிலும் கூட சாதிய-சானதான சமூக கட்டமைப்பை பாசிசமயமாக்குவதற்கு இதுவே, முன்னோடியாக இருந்தது.இதனைப் பற்றி "கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆறாவது காங்கிரஸ்" தெளிவாக சுட்டிக்காட்டியது.பிரிட்டிஷ் அரசின் "பிரித்தாளும் சூழ்ச்சி(DIVIDE AND RULE)" இதற்கு மேலும் வலு சேர்த்தது.நாடுமுழுவதும் கொழுந்துவிட்டு எரிந்த மதக்கலவரங்கள் எரியும் தீயில் எண்ணையை ஊற்று விதமாக இருந்தது.இது நாட்டை பல கூறுகளாக துண்டாடவும் பலப் பிரிவினைகளுக்கும் இட்டுச்சென்றது.அதிகார மாற்றத்திற்கு முன்பாக தயாரிக்கப்படயிருந்த "அரசியலைப்பு சட்ட உருவாக்கத்தில்" மனு-தர்மத்தினையே பிரிட்டனை ஒத்த ஓர் எழுதப்படாத அரசியலமைப்பாக இருப்பதற்கு RSS முன்மொழிந்தது, முயற்சித்தது.இதற்கு முன்பாகவே காந்தி-யை படுகொலை செய்து அரசியல் போக்கில் தனக்கு சாதகமான திருப்பங்களை ஏற்படுத்த முயற்ச்சித்தது."அதிகார மாற்றம்"த்தின் பிந்தைய சூழல்,இந்துத்துவ சக்திகளின் வளர்ச்சிக்கு "பிரிட்டிஷ் இந்திய"சூழலைப்போல் மிகக் இலகுவான பாதையாக இல்லையென்றாலும் "பெயரளவிலான அரசியல் சுதந்திரம்" ஆளும் வர்க்கவட்டாரத்தின் ஆட்சி-மாற்ற சதுரங்க விளையாட்டில் காங்கிரஸ் கட்சியானது மத அடிப்படைவாததின் மென்மையான சக்தியாக வலம்வரத் தொடங்கியது.ஆட்சி மாற்றத்திற்கு பிந்தைய ஆண்டுகளில் அதாவது ஐம்பதுகளின் நடுப்படுதியிலேயே RSS தன்னுடைய அரசியல் பிரிவான ஜனசங்கம்-னையும் நிறுவிக்கொண்டது.எழுபதுகளின் தொடக்கம் ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டு அரசியலில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள்,போராட்டங்கள்,நக்சல்பரி எழுர்ச்சி ஆகியன இந்திரா தலைமையிலான காங்கிரஸ் கட்சியை ஒரு விபரிதமான விளையாட்டில் இறக்கியது. அரசியலமைப்பின் அவசரக்கால பிரிவினை பயன்படுத்தி அரசியலமைப்பு சட்டத்தினை முடக்கி ஓர் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது.மிசா(MISA)"உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம்"எனப்படும் தனிச்சட்டம் இயற்றப்பட்டு அரசியலமைப்பு அமுலாக்கத்தினையே ரத்து செய்தது.நாடுதழுவிய அளவில் ஜனநாயசக்திகளின் போராட்டங்களின் ஊடாகவே காந்தி கொலை-க்கு பிறகு சரியான சந்தர்பத்திற்கு காத்துகிடந்த RSS இந்நிலைமையினை பயன்படுத்தி புதிதாக உருவான "ஜனதா கட்சி"யோடு கைகோர்த்து தன்னை மீட்டுறுவாக்கம் செய்துக்கொண்டது.
(13) இப்படி,காந்தி படுகொலையிலிருந்து முடங்கி கிடந்த இந்துத்துவா சக்திகள் ஆளுவர்க்க அரசியலில் பிரவேசம் செய்வதற்கான தார்மீக உரிமையை உருவாக்கிக்கொண்டது. அது மட்டுமல்லாமல் பிரதான நீரோட்ட அரசியலில் அடைக்கலம் தேடி அவசரக் காலம்(EMERGENCY) உருவாக்கிய ஜனதா கட்சி-யில் ஐக்கியமானது.அதற்கு அடுத்து...என்ன?!அன்று தொடங்கிய ஆட்டம்...! இன்று வரை நின்றபாடில்லை....!ஜனதா கட்சி, ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் உகந்த ஒரு புதிய அடிப்படையை RSS-ஜனசங்க வகையாவிற்கு உருவாக்கிக்கொடுத்தது.பின்னர் தனக்கு சாதகமான சூழ்நிலையில்,இந்துத்துவ சக்திகள் அனைத்தும் ஜனதா-வினை கைகழுவியது.தன்னை "பாரதிய ஜனதா"-வாக புதிய அவதாரம் எடுத்ததுக் கொண்டது.பின்னர் வந்த தேர்தல்களில் ஓரிரு சீட்டுகளில் தொடங்கி இன்று நாடுமுழுவதும் பார்தீனிய நச்சு செடியினைப் போன்று பரவிக்கிடக்கிறது.தொன்னுறுகளின் தொடக்கம், உலகளாவிய மாறுதல்களுடன் தொடங்கியது.எதிரெதிர் திசையினை நோக்கிய செயல்களின்-போக்கு தொடங்கியது.ஒன்று;சோவியத் வீழ்ச்சி விரைவு படுத்திய சோசலிச சக்திகளுக்கு ஒர் பின்னடைவை தொடங்கி வைத்தது.மற்றொன்று:உலகமயமாக்கல்.இந்த இரண்டு போக்குகளும் RSS ன் அரசியல் பிரிவான பாரதிய ஜனதாவிற்கு கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக இந்தியாவின் பிரதான நீரோட்ட அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக தொடர்வதற்கான தேசிய மற்றும் சர்வதேசிய சூழலினை உருவாக்கி கொடுத்துள்ளது.
(14)1990கள் முழுவதும் ஒன்றிய அரசியல் அரங்கில் நிலையற்ற, நிச்சயற்ற அரசியல் நிலைமை இருந்து வந்தது."வி.பி.சிங்-சந்திரசேகர்-நரசிம்ம ராவ்-தேவ் கவுடா-வாஜ்பய்-குஜரால்-வாஜ்பய்"என பத்தாண்டுகளில் ஏழு பிரதமர்கள் வந்து போனர்கள். இதனால் தேர்தலில் "பிரதமர் வேட்பாளர்"எனும் போக்கு தலைதூக்க தொடங்கியது.நாடாளுமன்ற வடிவிலான அரசியலமைப்பு-க்கான அச்சுறுத்தலின் அடித்தளம் இயல்பாகவே இந்துத்துவ சக்திகளுக்கு கிடைத்தது.இங்குதான் பிரதமர் வேட்பாளர் எனும் வாய்ப்பினை மோடி பெற்றதன் பின்னனி ஆகும். அந்நிய முலதன விசயத்தில் தொண்ணுறுகளின் தொடக்கத்தில் சுதேசி பேசிய பிஜேபி,1999ல் வாஜ்பாய் நிரந்தர ஐந்தாண்டு கால ஆட்சி ஆட்சியமைத்த உடனேயே" ராவ்-மன்மோகன் இணையர்கள் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தம் முதலாவது தலைமுறை என்றால் எனது ஆட்சியில் அது இரண்டாம் தலைமுறை சீர்திருத்தம்"என அறிவித்தார்.இதன் தொடச்சியில் கோத்ரா இரயில் எரிப்பு கலவரத்தில் மூலம் மாநிலத்தில் பத்தாண்டுகாலம் அதிகாரத்தினை உறுதிபடுத்திய மோடியினை குஜராத்தினை தாண்டி பிஜேபி-யின் சார்பில் பிரதமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டு தற்போது பத்தாண்டு காலத்தினை மத்தியிலும் நிறைவு செய்துள்ளார்.
(15)மோடி-யின் பத்தாண்டுகால ஆட்சி என்பதுஆளும் வர்க்க அரசியல் அரங்கில் நிலவிய வெற்றிடத்தினை நிரப்ப வலதுசாரி இந்துத்துவா-விற்கு அளிக்கபட்ட வாய்ப்பு ஆகும்.சோவியத் வீழ்ச்சி யினால் சோசலிசத்திற்கு ஏற்பட்டுள்ள தற்காலிக பின்னடைவு துரிதப்படுத்திய போக்கே உலகம் முழுவதும் தலைதூக்கியுள்ள பாசிச அச்சுறுத்தல் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் அதன் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.இந்தியாவின் பங்கு இந்துத்துவா.மோடி-யின் அதிகாரம் மத்தியில் நிறுவப்படும் என்று 2013 ம் ஆண்டு அரசியல் நிலைமையில் ஒரு சிறு அடையாளம் கூட கிடையாது.அப்போது, பாரதிய ஜனதா-வில் கூட உள் முரண்டாடுகள் நீடித்தது.சுஸ்மா;ஜெட்லி போன்றோர்கள் ஓரங்கட்டபட்டார்கள். அத்வானி போன்றோர்கள் கூட, நேரடியாகவே மோடி-யின் நாடாளுமன்ற வருகையை எதிர்த்தார்.எல்லாவற்றையும் சரிசெய்து RSS மோடியை முன்நிறுத்தியது. இருப்பினும் இந்துவத்தின் அச்சறுத்தல் ஒன்றும் தற்செயலாதும் அல்ல.மாறாக அதன் வரலாற்று வேர்கள் பதினெட்டு-பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஆர்ய-சமாஜ்;பிரம்ம- சமாஜ் போன்ற ஆசிரமங்கள் மற்றும் தயானந்த சரஸ்வதி சாமிகள்;ராமகிருஷ்ணர்;விவேகானந்தர்;அரவிந்தர் ஆகிய ஆன்மீகவாதிகள் தொடங்கப்பட்ட இந்துசமய சீர்திருத்த இயக்கங்கள் வழியாக தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருமாற்றம் அடைந்து(METAMORPHOSIS OF HINDUISM INTO HINDUTVA) இன்றை சூழலில், நிதிமுலதனமயம் (FINANCIALISATION)உருக்கிய நவ-தாராளவாதம்-தின் பின்னனியில் மேற்கொள்ளும் அரசியல் வடிவமே "இந்துத்துவா பாசிச"-மாக உக்கிரமடைத்துள்ளது.இதுவே,அதானி-கிதானி என அனைத்தும் அடக்கம்.இதன் வளர்ச்சிப் போக்கு, சனாதான சாதிய கட்டமைப்பினை அதாவது இந்துத்துவா சக்திகளை அன்றாட அரசியலின் நிகழ்ச்சி நிரலில் முன்வைக்கிறது."ஒரு கருத்து வெகுமக்களைப் பற்றிக் கொள்ளும் போது அது ஒர் இயற்பண்பு சக்தியாக மாறிவிடுகிறது"என்பது மார்க்ஸசத்தின் அரிச்சுவடி.இது,பிற்போக்கான கருத்துக்கும் கூட பொறுந்தும்.
(16)இந்துத்துவா, பாசிசதின் ஐரோப்பிய வடிவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது.இங்கு நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசியல் மற்றும் நீதித்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனது வளர்ச்சிக்கும் இருத்தலுக்கு இணக்கமாகவே உள்ளது.அதனால்தான்,2024 ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே ராகுல் காந்தி-க்கு ஓர் நிரந்தர தகுதியிழப்பினை உருவாக்கி தனது தற்போதய நிலமையினை தக்கவைத்துக்கொள்ள எல்லா வகையான பின்பக்க வழிகளையும் செய்யத் தொடங்கிவிட்டது. பாசிசத்தின் பிடி மெல்லமெல்ல இருகிக்கொண்டிருக்கிறது.ஜனநாயகத்தின் இடைவெளியை சனாதன சாதிய சக்திகளைக் கொண்டு நிரப்பி அதன் எல்லை சுருக்கப்பட்டுவருகிறது.இந்துத்துவ பாசிசம் தீவிரமாக அமுலில் இருந்துவருகிறது.பழைய பாணியில் அரசியல் நிறுவனங்கள் முடக்கபடும் போதுதான் பாசிச தனது கோரமுகத்தினைக் வெளிக்காட்டும் என காத்திருப்பது இயந்திரகதியான பார்வையாகும்.அதுமட்டுமல்ல,சாதிய-சனாதன கருத்தியலினை அடிப்படையாக் கொண்ட இந்துத்துவ பாசிசத்தின் கோரத் தாண்டவம் தலைவிரித்து ஆடுகிற பொழுது,சாதியத்தினை "தீண்டாமை ஒழிப்பாக முன்நிறுத்துவது" வர்க்கப் போராட்ட அரசியல் தளத்தில் ஓர்(PHILISTINISM) அர்ப்பவாதம் ஆகும்.சாதியத்தின் இருத்தல் குறித்த விசயத்தில் இது ஓர் இடதுசாரி கண்ணோட்டம் அற்ற அணுகுமுறை-யும் கூட.இங்கு இந்துத்துவ அரசியல் இருத்தலின் ஆன்மாவே சாதியத்தில் தான் இருந்து வருகிறது. இயற்கை-சமூக முறையினங்களின் வெளிப்பாடுகள் இயந்திரகதியில் பிரதியெடுப்பதில்லை.நிலவும் நிலைமைகளுக்கு ஏற்ப வடிவம் எடுப்பதுதான் சமூக முறையினங்களின் எதார்தமாகும்.இப்படி, இந்துத்துவ பாசிசத்தின் கருத்தியியல் அடித்தளம் என்பது சாதிய-சனாதான அடித்தளமே.புத்தரில் தொடங்கிய சாதியத்திற்கு எதிரான ஈராயிரம் ஆண்டுகாலப் போராட்டத்தில் அம்பேத்கரால் அறைகூவல் விடுக்கப்பட்ட இன்றைய "சாதி ஒழிப்பு" வரை இந்திய சமூகம் பயணித்து வருகிறது. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் சாதிய சனாதான கட்டமைப்புக்கு எதிராக இது அம்பேத்கரின் துணிச்சல் மிக்க அறைகூவல்.இவ்வியக்கத்தின் முன்னோடி அம்பேத்கர்."சாதி ஒழிப்பு"-க்கான கோட்பாடும் நடைமுறையும் பலதளங்களை அடக்கிய,அடக்கிகொள்ள வேண்டிய ஓர் ஜனநாயக இயக்கம்.இது ஒரு வழிப்பாதை அல்ல.இன்றைய சூழலில், உறுதியாக அது இந்துத்துவ சக்திகளால் முன்னிலை வகிக்கும் சாதிய-சனாதான சக்திகளை உடனடியாக அரசியல் அரங்கில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான பரந்துபட்ட அளவில் ஒன்றுபட்ட ஜனநாயக சத்திகளின் அரசியல் இயக்கமே,"சாதி ஒழிப்பு"-க்கான முன்தேவையாக உள்ளது.இக்கட்டுரை முடிக்கும் தறுவாயில் கூட சாதிய சனாதான சக்திகள் எவ்வளவு ஓர் அச்சுறுத்தலான சக்திகளாக அரசியில் தளத்தில் உருவெடுத்துள்ளது என்பதற்கான உதாரணமாக, "சாதிய அமைப்பு(CASTE SYSTEM)"குறித்த பகுதி மற்றும் காந்தி படுகொலைக்கு பிறகு,1948ல் RSS தடைசெய்யப்பட்ட வரலாற்றுப் பகுதிகளை மோடி அரசு, புதிய NCRT பாடதிட்டத்திலிருந்து நீக்கியுள்ளது. தற்போதையச் சூழலில் இதுதான் எதார்த்தம். எனவே,இன்றைய அரசியல் தளத்தில் "சாதி ஒழிப்பு"க்கான அரசியல் மற்றும் கருத்தியில் தளத்தில் ஒர் விரிவானப் போராட்டமே, இந்த நொடிப் பொழுதின் தேவையும் கூட.
ஏப்ரல்14 அம்பேத்கர்
பிறந்த நாளில் சூழுரைப்போம்!
இந்துத்துவ பாசிசத்தினை வீழ்த்த ஓரணியில் திரள்வோம்!!
-------இவன்------
சாதி ஒழிப்பு இயக்கம்.CAM.
CASTE ANNIHILATION MOVEMENT
----தமிழ் நாடு---
9751890322������9344272411
No comments:
Post a Comment