Saturday, 27 May 2023

சாதியும் வர்ணமும்

 இதில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரை ஆசிரியரின் கருத்துகளே. தேவைக்கருதி பகிர்ந்துள்ளேன் தோழர்களே....

நான்கு ஆஸ்ரமங்களிலிருந்துநான்காயிரம் ஜாதிகள் உருவானது எப்படி?: ஜாதி என்றாலே இந்தியாவில் தான் உள்ளது என்ற எண்ணம் உருவாக்கப் பட்டுள்ளது. மேலும், “வர்ணாஸ்ரம தர்மம்” என்ற முறையிலிருந்து தான் “ஜாதிய முறை”, ஜாதிகள் தோன்றின என்றும் விளக்கம் கொடுக்கப் படுகிறது. “வர்ணாஸ்ரமம்” முறைப்படி, பிராமணர், சத்திரர், வைசியர் மற்றும் சூத்திரர் என்று தான் இருக்க வேண்டும். ஆனால், அதைத் தவிர ஆயிரக்கணக்கில் ஜாதிகள் உருவாக்கப்பட்டன / உருவாகிக் கொண்டிருந்தன, இருக்கின்றன. ஆகவே, நான்கு ஆஸ்ரம சித்தாந்தத்திற்கும், இப்பொழுதைய “ஜாதி அமைப்பிற்கும்” சம்பந்தம் இல்லை என்பது பலரால் எடுத்துக் காட்டப்பட்டது. “பார்ப்பனீயம்” பேசும் சித்தாந்திகள், சத்திராயிஸம், வைசியாயிஸம் மற்றும் சூத்திராயிஸம் என்றெல்லாம் பேசுயதே, பேசுவது இல்லை. ஆக, நான்கிலிருந்து, நாலாயிரம் எப்படி வந்தது என்று யாரும் விளக்கவில்லை. மேலும் நான்கு வகையான பகுப்பு எகிப்திய, கிரேக்க, ரோமானிய நாகரிகங்களிலும் இருந்தது என்றும் எடுத்துக் காட்டப்படுகிறது.

Origin of human race - momogenous

ஜாதியம்பிறப்பும்மாற்றமும்மாறுதல்களும்: உலகத்தில் மனித தோற்றம் பற்றி ஒரேவொரு சித்தாந்தம் இல்லை. ஒரே மூலத்திலிருந்து பிறப்பு / தோற்றம் [Homogenous] மற்றும் பற்பல மூலங்களிருந்து பிறப்பு / தோற்றம் [Heterogenous] என்று இருவித நம்பிக்கைகள் இருக்கின்றன. எல்லோரும், ஒரே தோற்றம் என்றால், புறத்தோற்ற வித்தியாசங்கள் மற்றும் அக வேறுபாடுகளை விஞ்ஞான ரீதியில். ஏற்றுக் கொள்ளத் தக்க விளக்கம் கொடுக்கப்படவில்லை. ஆக, பற்பல மூலங்களிருந்து பிறப்பு / தோற்றம் ஏற்ருக் கொள்ளப்பட்டது. அப்ப்படியென்றால், மாறுபட்ட மனித குழுமங்கள் இருந்திருப்பது, இருப்பது நிதர்சனமாகிறது. இயற்கையிலேயே, எல்லாமே வேறுபாடுகளுடன் தான் இருந்து வருகின்றன. ஜாதியம் பிறப்பின் மூலமாக கணிக்கப் படுகிறது என்று வாதாடும், ஜாதியத்துவவாதிகள், உடல் நிறத்தை வைத்து, மக்களை வெள்ளையர், கருப்பர், பழுப்பு நிறத்தவர், மஞ்சள் நிறத்தவர் [Skin colour based division of races] என்றெல்லாம் பிரிக்கப்பட்ட போது, அவையும் பிறப்பின் அடிப்படையில் என்பதை அறிந்தும், அவ்வாறு பேசப்படவில்லை. மேலும் அத்தகைய சித்தாந்த உருவாக்கம் c. 300 BCE அளவில், கிரேக்க மூலங்களில் தான் உள்ளன என்று மேனாட்டவரே ஒப்புக் கொண்டுள்ளனர்[1].இன்று குரோமோஸோம் அளவில் [Chromosome studies of races] இதைப்பற்றி விளக்கம் கொடுத்த பிறகும், புருஷசுக்த மந்திர விளக்கத்தைத் தான் ஜாதியவாதிகள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Human races - varieties

பைபிள் மூலமாக உருவான வர்ணபகுப்புஐரோப்பிர இனசித்தாந்தங்களை ஆட்டிப் படைத்தது: பைபிள் மூலங்களில் நோவாவுக்குப் பிறந்தவர்கள் – செம், ஹாம் மற்றும் ஜாபெத் என்ற மூன்று சகோதரர்கள் வர்ண அடிப்படையில் பிரிக்கப்பட்டனர்[2]. ஒரே தந்தைக்குப் பிறந்தவர்கள் எப்படி வெவ்வேறான நிறங்களில் – கருப்பு, பழுப்பு, வெண்மை – பிறந்தனர் அல்லது ஜேஹோவா அவர்களை படைத்தார் என்ற ரகசியத்தை வெளியிடவில்லை. அவை தொடர்ந்து, ஐரோப்பியர்களை சென்றடைந்ததும், பெரிய-பெரிய சித்தாந்திகள், தத்துவவாதிகள் மற்றும் விஞ்ஞானிகளால் ஏற்றுகொள்ளப்பட்டது. பிராங்கோயிஸ் பெர்னியர் 1684ல் அந்த நோவா மூலம் பிறந்த கதையின் படி, மனிதகுலத்தை, புறத்தோற்றங்களினால் பிரித்தார்[3]. கார்ல் லென்னேயிஸ் அதனை விவரித்து,

  1. சிகப்பு கலர் முடி கொண்ட வட-அமெரிக்கர்,
  2. சைகப்பு-பழுப்பு கலர் முடி கொண்ட தென்-அமெரிக்கர்,
  3. வெள்ளை மற்றும் மஞ்சள் முடி கொண்ட ஐரோப்பியர்.
  4. கரி நிறங்கொண்ட கருப்பு முடி ஆப்ப்பிரிக்கர்
  5. பழுப்பு-கருப்பு நிற முடி கொண்ட ஆசியர்.

என்று பிரித்து, அவற்றையே இனமாக மாற்றினார்[4].

Human races - varieties-colour distribution

வெள்ளைர் உயர்ந்தவர் என்றால்அவர்களுக்குள் யுத்தம் உண்டானது ஏன்?: யூதமத மூலம் என்றாலும், கிருத்துவம் மற்றும் இஸ்லாம் இப்புராணகதைகளை நம்பி, ஆதாரமாகக் கொண்டுள்ளன. அதாவது, ஜெர்மனியில் நிறவெறி சித்தாந்தம் வளர்ந்து ஹிட்லர் மூலம் வெளிப்பட்டு, யூதர்களை கொன்றுக் குவித்ததாக சரித்திரம் எழுதப் பட்டுள்ளபோது, இனவெறி சித்தாந்தம் எப்படி வெள்ளையர்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தியது என்பதை, அறிவுஜீவிகள் நினைத்துப் பார்ப்பதில்லை. வெள்ளையர்களிடையே ஜெர்மானியர் உயர்ந்தவர்கள் என்று போர்களை உருவாக்கியது ஹிட்லர் என்றால், இங்கிலாந்து ஏன் தொடர்ந்து பிரெஞ்சு நாட்டுடன் போரிட்டுக் கொண்டிருந்தது என்பதனை அறிவிஜீவி பண்டிதர்கள் விளக்கவில்லை. ஆங்கிலேயர்களை விட, அயர்லாந்துகாரர்கள் வெண்மையாக இருந்ததால், இன்றுவரை, ஆங்கிலேயர் அவர்களைக் கொடுமைப் படுத்தி வருகிறார்களா என்றும் விவரங்களை சொல்லவில்லை. கிருஸ்டோபர் மைனர்ஸ், வெள்ளை காகசஸ் இனத்தவர் தான் உயர்ந்தவர் என்ற புத்தகங்களில் அவற்றைக் காணலாம்[5]. போதுவாக தங்களது உயர்வான நிலை, ஞானம் முதலியவற்றைப் பிரகடனப் படுத்திக் கொள்ள அத்தகைய இனவெறி சித்தாந்தங்களை உருவாக்கினாலும், தங்களது காலனிய ஆதிக்கம், அடிமை வியாபாரம், கொள்ளை முதலியவற்றை நியாயப்படுத்த அவை உபயோகப்படுத்தப் பட்டன[6]. காகசஸ் மலையில் உருவாகி வந்தவர் என்ற எண்ணம், நம்பிக்கை அவர்களிடம் அதிகமாகவே இருந்தன[7]. உலக போர்களுக்குப் பிறகு, இனம் கட்டுக்கதை என்று அறிவிக்கப்பட்டது.

Four division of society - Roman

காலனிய ஆதிக்க சித்தாந்தங்கள் கம்யூனிஸ்டுகளிடம் அடைக்கலமானது: 21வது நூற்றாண்டில் தான் அத்தகைய எண்ணங்கள் பொய் என்ற கருத்துவாக்கம் முடிவானது[8]. ஆனால், இந்தியாவைப் பொறுத்த வரையில், கம்யூனிஸ்டுகள் – எல்லா வகையறாக்களும், இனக் கட்டுக்கதைகளை தங்களது “வர்க்கம், வர்க்க போராட்டம், புரட்சி” போன்ற சித்தாந்தங்களுக்கு, நியாயப் படுத்த, இரட்டை வேடம் போட்டுக் கொண்டு பின்பற்றி வருகின்றனர். ரோமிலா தாபர் போன்ற உயர்நிலை சரித்திர மார்க்சிஸ்ட் ஆட்கள் ஆரிய-திராவிட இனங்கள் எல்லாம் கட்டுக் கதை என்பார்கள், ஆனால், மற்றவர், அச்சித்தாந்தங்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.  முதலாளித்துவ அமெரிக்க-ஐரோப்பிய சுரண்டல்களை எதிர்ப்போம் என்று சொல்லிக் கொண்டு, அதே சுரண்டல் சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு, இந்தியர்களை ஏமாற்றுவதை காணலாம். “தலித்” போர்வையில், இதனை அதிகமாகவே செய்து வருகின்றனர். “அம்பேத்கரிஸ” சித்தாந்தம் உருவாகிய நிலையில், அம்பேட்கரிஸ்டுகளே அவர்களின் முகமூடிகளைக் கிழித்து, தோலுரிக்க ஆரம்பித்து விட்டனர். மஹாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இது வெளிப்பட்டு விட்டது. ஆனால், எஸ்.சிக்களுக்கு இடையே ஏற்படும் போராட்டங்கள், மோதல்கள் மற்றும் உள்-ஒதுக்கீடு அரசியல், பிரமிக்க வைக்கிறது. இந்துமதத்தில் உள்ள புதிர்களைக் கண்ட அம்பேத்கர், இப்புதிர் தென்படாதது, புதிராக உள்ளது.

© வேதபிரகாஷ்

08-04-2018

Four division of society - Egypt-labour

[1] Categorization of racial groups by reference to skin color is common in classical antiquity. It is found in e.g. Physiognomica, a Greek treatise dated to c. 300 BCE.

[2] The transmission of the “color terminology” for race from antiquity to early anthropology in 17th century Europe took place via rabbinical literature. Specifically, Pirke De-Rabbi Eliezer (a medieval rabbinical text dated roughly to between the 7th to 12th centuries) contains the division of mankind into three groups based on the three sons of Noah, viz. Shem, Ham and Japheth: “He [Noah] especially blessed Shem and his sons, (making them) dark but comely [שחורים ונאים], and he gave them the habitable earth. He blessed Ham and his sons, (making them) dark like the raven [שחורים כעורב], and he gave them as an inheritance the coast of the sea. He blessed Japheth and his sons, (making) them entirely white [כלם לבני], and he gave them for an inheritance the desert and its fields” (trans. Gerald Friedlander 1916, p. 172f.)

[3] Anonymous [F. Bernier], “Nouvelle division de la terre par les différentes espèces ou races qui l’habitent”, Journal des Sçavants, 24 April 1684, p. 133–140. See also Charles Frankel, La science face au racisme (1986), 41f.

[4] In the 1730s, Carl Linnaeus in his introduction of systematic taxonomy recognized four main human subspecies, termed Americanus (Americans), Europaeus (Europeans), Asiaticus (Asians) and Afer (Africans). The physical appearance of each type is briefly described, including colour adjectives referring to skin and hair colour: rufus “red” and pilis nigris “black hair” for Americans, albus “white” and pilis flavescentibus “yellowish hair” for Europeans, luridus “yellowish, sallow”, pilis nigricantibus “swarthy hair” for Asians, and niger “black”, pilis atris “coal-black hair” for Africans.

François Bernier in a short article published anonymously in 1684 moves away from the “Noahide” classification, proposes to consider large subgroups of mankind based not on geographical distribution but on physiological differences. Linnaeus, Syst. Nat. ed. 10 Vol. 1. p. 21

[5] Two historical anthropologists favored a binary racial classification system that divided people into a light skin and dark skin categories. 18th-century anthropologist Christoph Meiners, who first defined the Caucasian race, posited a “binary racial scheme” of two races with the Caucasian whose racial purity was exemplified by the “venerated… ancient Germans”, although he considered some Europeans as impure “dirty whites”; and “Mongolians”, who consisted of everyone else.

Painter, Nell Irvin. Yale University. “Why White People are Called Caucasian?” 2003. September 27, 2007.

Keevak, Michael. Becoming Yellow: A Short History of Racial Thinking. Princeton University Press, 2011.

[6] Meiners did not include the Jews as Caucasians and ascribed them a “permanently degenerate nature”.

Eigen, Sara. The German Invention of Race. Suny Press:New York, 2006. p.205.

[7] Hannah Franzieka identified 19th-century writers who believed in the “Caucasian hypothesis” and noted that “Jean-Julien Virey and Louis Antoine Desmoulines were well-known supports of the idea that Europeans came from Mount Caucasus.”

Franzieka, Hannah. Berghahn Books: 2004. James Cowles Prichard’s Anthropology: Remaking the Science of Man in Early… In his political history of racial identity, Bruce Baum wrote,”Jean-Joseph Virey (1774-1847), a follower of Chistoph Meiners, claimed that “the human races… may divided… into those who are fair and white and those who are dark or black.”

[8] Baum, Bruce David. The Rise and Fall of the Caucasian Race: A Political History of Racial Identity. New York University: 2006.


ஆரியர் குறித்த தேடல்

 இதில் விமர்சனதிற்குறிய பகுதியை என் தேவைகளின் பொழுது திருத்திக் கொள்கிறேன் மற்றபடி தேவை  கருதி அப்படியே பகிர்கிறேன்.

ஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள். -

இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் நீண்ட கால விவாதத்துக்கு உட்பட்ட திராவிட – ஆரிய இனக்குழு வரலாறு, இந்திய அரசியலோடு நெருக்கமான தொடர்புடையது. இந்தோ – ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த, பிற்காலத்தில் ஆரியர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட இனக்குழுக் குடியேற்றம், இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப்பழமையான திராவிட நாகரீகத்தை எவ்வாறு எதிர்கொண்டது என்கிற முதல்நிலை வாதத்தில் இருந்து துவங்கி, சிந்து சமவெளி நிலப்பரப்பில் பெறப்பட்ட சான்றுகளும், தரவுகளும் நீண்ட நெடிய விவாதத்தை உருவாக்கியது.

உலகின் மிகப் பழமையான புதைந்து போன நகரத்தில் இருந்து பெறப்பட்ட சுவடுகள் தோண்டி எடுக்கப்பட்டது, அதன் அதிர்வுகள் நிலையான அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை இந்தியத் துணைக்கண்டத்தில் உருவாக்கியது. திராவிட நாகரீகம் என்று பெயரிடப்பட்ட அந்தப் பெருமைக்குரிய வரலாறு கல்விக்கூடங்களில் நிலைபெற்றபோது, புராணப் புனைவுகளால் நெய்யப்பட்ட மூட நம்பிக்கைகளும், சமூக அநீதிகளும் நிரம்பிய ஆரியம் என்கிற உயரடுக்கு சரியத் துவங்கியது.

17THaryan migrationrevised-1

விடுதலைக்குப் பின்னரான இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ஆரிய உள்ளீடுகள், திராவிட நாகரீகத்தின் வரலாற்று அடையாளங்களை முன்னிறுத்தி கேள்விக்குள்ளாக்கியபோதும், குடியேற்ற இனக்குழுவின் நம்பிக்கைகளும், கலாச்சாரப் பின்புலமும் பழங்குடிகளால் நிராகரிக்கப்பட்டபோதும், ஆரியம் ஒரு நுட்பமான பரப்புரையை முன்னெடுத்தது.

“ஆரியக் குடியேற்றம் என்பதே ஒரு கட்டுக்கதை, அப்படியான ஒரு நிகழ்வு இந்தியத் துணைக்கண்டத்தில் நிகழவே இல்லை என்று பல்வேறு போலியான ஆய்வுகளையும், தரவுகளையும் முன்வைத்து, “சரஸ்வதி நாகரீகம்” என்றொரு புதிய நாகரீகத்தை கட்டமைக்க முயன்றது. DNA ஆய்வுகள் இப்படியான ஒரு ஆரியக் குடியேற்றத்தை உறுதி செய்யவில்லை என்றும், ஆரியர்கள் இந்தியாவின் பழங்குடிகள் என்றும் பிதற்றத் துவங்கின.

கடந்த இருபதாண்டுகளில் தீவிர ஆரிய இனக்குழுவின் உறுப்பாக இயங்கும் பார்ப்பனீயம், பல்வேறு ஊடகங்களின் வாயிலாக, ஆரியக் குடியேற்றத்தைப் பொய்யென்று உறுதி செய்யப் பெருமுயற்சி செய்தது. DNA ஆய்வுகள், தொழில்நுட்ப உதவியோடு மிகத் தீவிரமாக இயங்கத் துவங்கிய கடந்த ஐம்பதாண்டு கால வரலாற்றில், அறிவியல்பூர்வமாக “ஆரியக் குடியேற்றம் நிகழ்ந்தது உண்மைதான்” என்பதைப் பல்வேறு பல்கலைக்கழங்கங்களின் உயிர் மூலக்கூறு ஆய்வுகள் உறுதி செய்யத் துவங்கி இருக்கிறது.

முன்னதாக X க்ரோமோசோம்களின் மூலம் பெறப்பட்ட சான்றுகள் (அதாவது தாய் ——மகள் உறவுமுறையை அடிப்படையாகக் கொண்டது) குறிப்பிட்ட ஆரியக் குடியேற்ற DNA அடையாளங்களை உறுதி செய்ய முடியாமல் இருந்தபோது, புதிய Y குரோமோசோம்களில் (தந்தை – மகன் உறவுமுறை) இருந்து பெறப்பட்ட சான்றுகள், ஆரியக் குடியேற்றம் குறித்த அறிவியல் பூர்வமான தரவுகளை அள்ளித் தெளித்திருக்கிறது. ஆரியக் குடியேற்றம் பெரும்பான்மை ஆண்களை உள்ளடக்கியது என்கிற தொல்லியல் ஆய்வு முடிவுகளோடு புதிய Y க்ரோமோசோம்களின் மூலம் பெறப்பட்ட முடிவுகளை இணைக்கும் போது இதுவரையில் இருட்டறையில் இருந்த ஆரியக் குடியேற்றம் குறித்த மர்ம முடிச்சுகள் விலகித் தெளிவான முடிவுகள் கிடைக்கத் துவங்கி இருக்கிறது.

mtDNA – Data எனக்குறிக்கப்பட்ட முதன்மை ஆய்வுக் குறிப்புகளில் குடியேற்ற ஜீன்களின் பரவல் குறித்த உறுதியான தரவுகள் கிடைக்கப்பெறவில்லை, அல்லது குறைந்த அளவிலான தரவுகளே கிடைக்கப்பெற்றன, ஆனால், YDNA – Data என்றழைக்கப்படும் இரண்டாம் கட்ட ஆய்வுகள் குடியேற்றம் குறித்த ஆய்வு முடிவுகளைத் தலை கீழாகத் திருப்பிப் போட்டன.

“A Genetic Chronology for the Indian Subcontinent points to heavily Sex – Biased Dispersal” என்ற தலைப்பிலான ஆய்வுகள், 16 உயிரியல் ஆய்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டது, பேராசிரியர் மார்ட்டின் ரிச்சர்ட்ஸ் தலைமையிலான ஹட்டர்பீல்டு பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் உறுதி செய்த, “ஆரியக் குடியேற்றத்தில் பெருமளவில் ஆண்களே பங்குபெற்றார்கள்” என்கிற தீர்க்கமான முடிவே இந்தத் தலைகீழ் மாற்றங்களை உருவாக்கியது.

719235ஜீன் பரவலாக்கம் ஒரு எளிய பகுப்பு :

719235

R1a———-Europe

R1a———-Central & South Asia

R1a —– Z-282 (Only Europe) ——Z-93 (Only Central & South Asia)

 

இந்த வரிசைக்கிரமத்தில் எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், R1a ——-ஆரிய இனக்குழுப் பரவலுக்கு மாதிரியாகப் பெறப்பட்ட உயிர் மூலக்கூறு, Z-93 என்கிற பகுப்பாக 5800 ஆண்டுகளுக்கு முன்னாள் இந்தியத் துணைக்கண்டப் பகுதியில் பரவலாக்கம் பெறுகிறது, அதன் மூல வேரான R1a —– Z-282 வழியாகப் பகுப்படைந்து ஐரோப்பாவில் மட்டும் நிலைகொள்கிறது, தெற்கு ஆசியா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா தவிர்த்த எந்த நிலப்பரப்பு வரலாற்றிலும் R1a வின் மூலமோ, பகுப்புகளோ அடையாளம் காணப்படவில்லை என்பதுதான் Dr. அண்டர் ஹில்லின்ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் தெளிவான செய்தி.

முன்னதாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியின், ஜெனிட்டிக் துறைப் பேராசிரியர் Dr. டேவிட் ரீச், 2009 இல் வெளியிட்ட “Reconstructing Indian Population History” என்கிற ஆய்வு ஒரு மிக முக்கியமான செய்தியை நமக்குச் சொல்லியது. ANI – Ancestral North Indians, எனக்குறிக்கப்படும், வட இந்தியப் பழங்குடிகள் மத்திய கிழக்குத் தரைப்பகுதி, மத்திய ஆசிய பகுதி மற்றும் ஐரோப்பிய ஜீன்களோடு நெருங்கிய தொடர்புடையது என்றும், ASI – Ancestral South Indians எனக்குறிக்கப்படும் தென்னிந்தியப் பழங்குடிகள் இந்தியாவின் தனித்துவமான ஜீன்களை உள்ளடக்கியவர்கள் என்றும் உறுதி செய்யப்பட்டது.

உயிரியலில் மிகத் துல்லியமாக இனக்குழு வரலாற்று நகர்வுகளை முடிவு செய்யும் DNA – Mapping ஆய்வுகளில் உள்ளீடு செய்யப்பட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளோடு, ஸ்டேன்ஸ் போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜெனிட்டிக் துறைப் பேராசிரியர் பீட்டர் அண்டர் ஹில் தலைமையில் 32 துறை சார் அறிஞர்கள் R1a ஜீன்கள் குறித்த 16,244 ஆண் மாதிரிகளை 126 வெவ்வேறு இடங்களில் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள், முடிவுகள் இரண்டு துணைக்குழுக்களைக் கண்டறிந்தது, (R1a ஜீன் மாதிரி என்பது ஆரியக் குடியேற்றத்துக்குப் பிறகான இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 17.5 % பரவலாகி இருக்கிற மாதிரி), R1a முதன்மை ஜீன்கள் ஐரோப்பாவிலும், இரண்டாம் நிலை ஜீன்களான Z-93 – மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் கண்டறியப்பட்டன.

R1a வின் முதன்மைப் பகுப்பு ஜீனான Z-282, 98 % ஐரோப்பாவிலும், இரண்டாம் நிலைப் பகுப்பு ஜீனான Z-92, 98.4 % மத்திய மற்றும் தெற்கு ஆசியாவிலும் கண்டறியப்பட்டது, R1a வின் இந்தப் பகுப்பு 5800 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கிறது. R1a – வின் பரவலாக்கம் ஐரோப்பா முழுவதும் மட்டுமன்றி மத்திய மற்றும் தெற்கு ஆசியாவிலும் நிகழ்ந்திருக்கிறது, அதே போல R1a வின் முதல் நிலைப் பகுப்பான Z-282 வின் பரவலாக்கம் ஐரோப்பாவில் மட்டும் கண்டறியப்பட்டது, இரண்டாம் நிலை இணை ஜீனான Z-93 இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இமயமலைத் தொடர்களில் கண்டறியப்பட்டது.

ஆரியக் குடியேற்றம் கட்டுக்கதை என்று சொன்னவர்கள், பல்வேறு மாறுபட்ட உயிரியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், குடியேற்ற நிகழ்வுகள் குறித்த உறுதியான தரவுகளை முன்வைக்காததை ஒரு மிகப்பெரிய சான்றாகக் காட்ட முனைந்தார்கள். முதலாவதாக mtDNA மூலமாக X க்ரோமோசோம்களை வைத்துப் பெறப்பட்ட முடிவுகளான, “12,500 ஆண்டுகள் வரை இந்தியத் துணைக்கண்டத்தில் மிகப்பெரிய அளவிலான புதிய ஜீன் பரவலாக்கம் நிகழவில்லை” என்ற வாதம், தற்போதைய Y க்ரோமோசோம்களின் மாதிரிகளை மையமாக வைத்துப் பெறப்பட்ட முடிவுகளால் தகர்க்கப்படுகிறது, 4500 ஆண்டுகளுக்குள் 17.5 % R1a ஜீன்களின் பரவலாக்கம் நிகழ்ந்திருக்கிறது என்கிற உண்மை அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படுகிறது. X முடிவுகள் ஏன் தோல்வியைத் தழுவின என்றால், ஆரியக் குடியேற்றத்தை முன்னின்று நடத்தியது ஆண்கள் என்கிற ஆய்வு முடிவுகள், ஆக X முடிவுகள் அந்தக் குடியேற்ற நிகழ்வுகளை எதிரொலிக்க முடியாது.

Harrapan+cities+had+a+strong+central+government+which+led+to+organized+cities..jpg

 

இரண்டாவதாக “ஆரியக் குடியேற்றம் பொய்” என்று சொல்பவர்களால் இன்னொரு வாதம் முன்வைக்கப்படுகிறது, R1a வின் இருப்பும், வீரியமும் இந்தியத் துணைக்கண்டத்தில் தீவிரமாக நிலைகொண்டிருப்பதால் அது இந்தியாவில் உருவாகி ஏனைய பகுதிகளில் பரவலாக்கம் அடைந்திருக்கலாம் என்பது, ஆனால், 2016 இல் வெளியிடப்பட்ட R1a வின் துணைக்குழுக்களைப் பற்றிய உயிர் மூலக்கூறு ஆய்வுகள் நமக்குச் சொல்வது R1a வின் பகுப்பான Z-93 வெறும் 5000 ஆண்டு வரலாறு மட்டுமே கொண்டது.

மூன்றாவதாக வைக்கப்படும் “ஆரியக் குடியேற்றத்துக்கு முன்பாகவே, இந்தியத் துணைக்கண்டத்தில் இருவேறு பழங்குடி இனக்குழுக்கள் நிலைபெற்றிருந்தன என்கிற வாதம் வரலாற்று உயிரியல் அறிஞர்களால் கண்டிக்கப்படுகிறது. மனித இனத்தின் இடப்பெயர்வு ஒரு இயல்பான நிகழ்வு, கடந்த 15,000 ஆண்டுகளில் மனித இனம் பல்வேறு காரணங்களுக்காகப் பல்வேறு நிலப்பரப்புகளில் குடியேற்றமடைந்திருக்கிறது, இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் எல்லா உயிரியல் தொகுப்பு இனக்குழுக்களை கலப்பின அடையாளங்களோடு தான் வளர்ந்திருக்கிறது, அந்தமான் நிக்கோபாரின் “ஓங்கோ” இனக்குழு மட்டுமே கலப்பற்ற இனமாக இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்தில் அடையாளம் காணப்படுகிறது.

பிறகு எதற்காக “ஆரியக் குடியேற்றம்” குறித்த சமூக, அரசியல் மற்றும் அறிவியல் விவாதங்களில் இத்தனை அக்கறை கொள்ள வேண்டும் என்ற கேள்வி மிக முக்கியமானது, ஏனெனில், இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் அரசியலோடு திராவிட நாகரீகத்தின் சுவடுகளும், ஆரியக் குடியேற்ற நிகழ்வினால் விளைந்த தாக்கங்களும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இந்துத்துவம் அல்லது பார்ப்பனீயச் சிந்தனைகள் ஆரியக் குடியேற்ற நிகழ்வின் மானுட நீதியற்ற பல்வேறு நிலைப்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தாமல் இருந்த காலகட்டத்தில், தாங்கள் ஆரியர்கள், அறிவிற்சிறந்தவர்கள், வரலாற்றுப் பெருமையும், பிறப்புத் தகுதியும் கொண்ட உயர் மானுடக் குழுவினர் என்று எக்காளமிட்டனர்.

பின்பு, குடியேற்றக் குழுவின், சமூக நீதியற்ற, மானுட மேன்மைக்கு எதிரான பல்வேறு புரட்டுக்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டபோது, இல்லை, “நாங்கள் குடியேறியவர்கள் அல்லர் என்றும், இந்திய பழங்குடிகள்” என்றும் நிறுவ முயன்றார்கள். சக மனிதனின் வாழ்வையும், உரிமைகளையும் ஒடுக்கிப், பிறப்பால் நான் உயர்ந்தவன் என்கிற அறிவியலுக்கு முரணான கூற்றை நிறுவி அதன் மூலம் , உழைப்புச் சுரண்டல், அரசியல் அதிகாரக் கைப்பற்றல், சமூக அநீதியிழைத்தல், கலை மற்றும் பண்பாட்டு இருட்டடிப்பு என்று நவீன மானுட நாகரீகத்துக்கு எதிரான மனநிலையைப் பரவலாக்கி அதையே உண்மை என்று நம்ப வைக்கிற வேலையை இந்த அடிப்படை இனக்குழுவாதிகள் தீவிரமாகி செய்வதாலேயே நாம் குடியேற்ற வரலாற்றில் அறிவியல் உண்மைகளைத் தொடர்ந்து பேச வேண்டியிருக்கிறது.

இன்று தம்மைப் பிறப்பால் உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்கிற, ஆரியன் என்று பெருமையாகப் பேசுகிற பார்ப்பனீயத்தின் அரசியல் அதிகாரத்தில் இருக்கிறது, இந்த அரசியல் அதிகாரம், மதம், சாதி, புனிதப் பெருமைகள், முதலாளித்துவ – ஊடக முட்டுக் கொடுப்பு என்று பல்வேறு காரணிகளால் பெறப்பட்டது, தொடர்ந்து உழைப்புச் சுரண்டல் செய்து வர்ண அமைப்பை அதிகார பூர்வமாக்கி இந்தியத் துணைக்கண்டத்தை உலகின் நாகரிக வளர்ச்சிப் பயணத்திலிருந்து விலக்கமடைய வைக்கும் ஒரு பின்னடைவாகவே இந்தப் பார்ப்பனீயத்தின் அரசியல் வளர்ச்சியை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

உழைக்கும் எளிய மக்களின் வாழ்வாதாரங்களை முதலாளிகளிடம் விற்று, எளிய மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றி, அவசர அலங்கோலத் திட்டங்களால் ஏழை மக்களின் வாழ்வை அலைக்கழிக்கும் காவிகளின் உண்மையான முகத்தை உணர்ந்து கொள்ளவும், மனித நேயமற்ற சமூக நீதிக்கு எதிரான அவர்களின் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றையும் நாம் அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்ள முனைவது வெறுப்பைக் கக்கி அவர்களோடு போர் புரிய அல்ல, மாறாக இன்னும் அழகிய உலகத்தை உருவாக்கும் ஒரு புதிய தலைமுறையை உருவாக்க.

அண்ணல் அம்பேத்கர் சொன்னதைப் போல, “சமூக நீதிக்கான இந்தப் பழங்குடிகளின் போராட்டம், நாகரீக உலகின் மேன்மைக்கான தன்னியல்பான இயக்கம், இதன் பலன் ஒட்டுமொத்த மானுட குலத்தின் மீது அணையாத விளக்காய் சுடர் விட்டெரியும்”.

 

Reference: “How Genetic is settling the Aryan Migration Debate” by Tony Joseph’s (Former Editor Business World) Article on The Hindu dated 16th June 2017.

கை.அறிவழகன்

https://tamizharivu.wordpress.com/2017/10/31/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5/

ஆரியர் யார்?

 விவாததிற்கு ...................

ஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1

ஏன் இதனை எழுதுகிறோம்?

சமகால சமூக அரசியல் நிகழ்வுகள் பெரும்பாலான வரலாற்று நிகழ்வுகளை திரும்பிப் பார்க்கத் தூண்டுகிறது. நிகழ்கால வினைகளின் நல்லது கெட்டதுகளை கடந்த காலத்தின்மீது ஏற்றி பார்ப்பதும், அதோடு நிகழ்காலத்தின் தேவைகளை வரலாற்றில் தேடியடைவதும் சமூகத்தின் இயல்பே. இந்த நிர்பந்தத்தை பெரும்பாலும் ஆளும்வர்க்கம் நம் மீது திணிக்கிறது.   

கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக அரசு 12,000 ஆண்டு இந்திய வரலாற்றை திரும்பவும் தொகுப்பதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளது. ஏன் ஆளும் வர்க்கத்திற்கு இந்த நிர்பந்தம் வருகிறது? சர்வேதச சந்தையில் இந்தியா எனும் பெரும் மக்கள்தொகை கொண்ட நிலப்பரப்பு பொருளாதாரத்தில் மிக முக்கியமானது. நுகர்வுப் பண்பாட்டின் உச்சத்தில் இருக்கும் இன்றைய சந்தைப் பொருளாதாரத்திற்கு இந்தியா என்ற நிலப்பரப்பு  ஒற்றை ஆட்சி அதிகாரத்தின் கீழ் வரவேண்டிய தேவை எழுகிறது. 

அதிகாரக் குவிப்பு என்பது மூலதன திரட்சிக்கு மிக முக்கியமான அம்சமாக அமைகிறது. எனவே பல்வேறு மொழி, பண்பாடு, வரலாறு, பழக்க வழக்கங்களைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தை இந்தி, இந்து, வேதம், சமஸ்கிருதம் என்ற ஒற்றைத் தன்மைக்குள் கொண்டுவர எல்லா முயற்சிகளும் நடைபெறுகிறது. இந்த முயற்சியானது வேத மரபை மட்டுமே ஒற்றை இந்திய மரபாக மாற்றுவதற்காக மட்டுமல்ல. வட இந்தியாவின் ’பனியா’ மூலதனத்தை பெருக்குவதற்காகவும்தான். 

இங்கு மரபை மீட்டெடுத்தல் என்ற போக்கும், மூலதனத்தை திரட்டுதல் என்ற போக்கும் ஒன்றை ஒன்று சார்ந்து பாய வேண்டிய  முனையில் நிற்கிறது. இந்த பாய்ச்சலுக்காகத்தான் ஒரு பக்கம் 12,000 ஆண்டு வரலாறு திருத்தி தொகுக்கப்படுகிறது. மறுபக்கம் அரசியலமைப்புச் சட்டம் திருத்தியமைக்கப்படுகிறது. 

முன்னது வேதமரபை பறைசாற்றவும், பின்னது மூலதனத்தை பெருக்கவும் வகை செய்கிறது. இந்த இரு போக்குகளும் பல்வேறு  மொழிகள், கலாச்சாரங்கள், வரலாறுகள், மெய்யியல் சிந்தனைகள், அரசியல் உரிமைகள் என அனைத்தையும் அழித்து வருகிறது. ஆரிய தன்னின உயர்வாதம் கொண்டவர்கள்  “இந்துத்துவா“ சித்தாந்தம் என்ற ஜனரஞ்சக வழிமுறையில் தங்கள் வரலாற்றினை பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஏற்றத்தாழ அந்த வேலையை சிறப்பாக செய்து முடித்துவிட்டார்கள். 

  • இந்தியத் துணைகண்டத்தின் பூர்விக வரலாறு என்ன? 
  • சிந்து வெளியில் வாழ்ந்தவர்கள் யார்? 
  • எப்படி அந்த நாகரிகம் வீழ்ச்சியடைந்தது? 
  • ஆரியர்கள் யார்? 
  • எப்போது இந்தியவிற்குள் வந்தார்கள்? 
  • எங்கு ரிக்வேதம் தொகுக்கப்பட்டது? 
  • இந்திய வைதீக மரபு அவர்களிடம் இருந்து துவங்கியதுதானா?
  • ஆரியர்களுக்கு முன் இந்தியத் துணைக்கண்டத்தில் வாழ்ந்தவர்கள் யார்? 
  • அவர்களின் பண்பாடு என்ன? 
  • அவர்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் என்ன தொடர்பு? 
  • பாஜகவின் இந்துத்துவா சிந்தாந்தத்திற்கு எப்படி ஆரிய சிந்தாந்தம் ஒத்துப்போகிறது? 
  • ஏன் ஆரிய மேலாண்மை இந்தியாவில் பார்ப்பன எச்சமாக இன்னும் நிலைத்து நிற்கிறது?

போன்ற பல்வேறு கேள்விகளுக்கு கடந்த காலத்தில் வின்சென்ட் ஸ்மித்(Vincent Smith), ஆர்.சி.மஜூம்தார் (R.C.Majumdar), டி.டி.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா, ரொமிலா தாப்பர், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, ஏ.எல்.பாசம், எ.பி.கீத், இர்பான் ஹபீப் (Ifran Habib), வெண்டி டோனிகர்,  டோனி ஜோசப் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் போதிய ஆதாரங்களை திரட்டித் தந்துள்ளனர். 

இன்றைய சூழ்நிலையில் மரபணு ஆய்வுகள் முடிக்கப்பட்டு உறுதியான முடிவுகளை நெருங்கிவிட்டனர். இவை அனைத்தும் ஒரு சில ஆய்வாளர்கள் மத்தியில் சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்துத்துவா சிந்தாந்தவாதிகள் தங்களுடைய வரலாற்று தகவல்களை ஜனரஞ்சகப்படுத்தும் போக்கிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அதனால்தான் மக்கள் ஆதரவில் இன்றைய ஆட்சி அதிகாரம் அவர்களிடம் மண்டியிட்டு இருக்கிறது. 

எனவே நாமும் ஆரியர்கள் குறித்தும், வேத காலம் குறித்தும் ஒரு ஜனரஞ்சகமான உரையாடலை வெகுசன மக்கள் மத்தியில் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக பாஜக அரசு வரலாற்றுக் குழுவை அமைத்ததற்குப் பிறகு இதுபோன்ற உரையாடல்கள் அனைத்து தரப்பினருக்கும் எளிமையாக சென்றடைய வேண்டும். அதுவே நம்மையும் நமது வரலாற்றையும் பாதுகாக்கும். 

அதற்கு கீழடி ஆய்வு ஒரு எடுத்துக்காட்டு. பல்வேறு ஆரிய இந்துத்துவ சித்தாந்தம் கொண்டவர்கள் கீழடியை இருட்டடிப்பு செய்ய முயற்சித்தபோது அது மக்கள்மயமாக்கப்பட்டு, ஜனரஞ்சக அரசியல் விவாதமாக மாறியதால் பாதுகாக்கப்பட்டது. எனவே ஆரியர் வருகை குறித்தும், ரிக்வேத கால ஆரியர் குறித்தும் இணையதளத்தில் இந்த தகவல்களை தொகுக்க வேண்டியுள்ளது. எனவேதான் இத்தொகுப்பினை நாங்கள் எழுதுகிறோம்.


ஆரியர் வருகை

வடமேற்கு இந்தியத் துணைக் கண்டத்திற்குள் ஆரியர்கள் கி.மு 1500-களுக்குப் பிறகுதான் வந்துள்ளனர். மிக உறுதியாகச் சொன்னால் அதிகப்படியாக கி.மு 1300-களில்தான் வரத்தொடங்கியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியடைந்து 500 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆரியர் இங்கு வந்தனர் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். மத்திய ஆசியாவில் இருந்து தங்கள் கால்நடைகளை ஓட்டிக்கொண்டு மெசபடோமியா வந்தடைந்து, அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் இந்தியத் துணைக்கண்டத்திற்கும் பரவிச் சென்றனர். 

இந்த இடப்பெயர்வு ஒரே காலகட்டத்தில் நடக்கவில்லை. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெயர்ந்துள்ளனர். ஒரு கால்நடை சமூகமாகவே வாழ்ந்து வந்தள்ளனர். ஆடு, மாடு மேய்த்தலே அவர்களின் பிரதான தொழில். நாடோடி சமூகமாக இருந்ததால் வேளாண்மையில் அவர்களுக்கு போதிய  பரிட்சயம் இல்லை.

குதிரை பூட்டிய ரதங்களின் பயன்பாடு அவர்களுக்கு இடம்விட்டு இடம் நகர்வதற்கு பலமாக இருந்துள்ளது. குதிரையும், வெண்கல ஆயுதங்களும் அவர்களின் ஆக்கிரமிப்பிற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. 

தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டே இருந்ததால் அவர்கள் குறித்தான சான்றுகள் குறைவு. அவர்கள் பேசிய மொழி இந்தோ ஐரோப்பிய மொழி. முற்காலத்திய ஈரானியர்களின் மத நூலான அவெஸ்தாவின் மொழியுடன் (பழைய ஈரானி மொழி) ஒத்துள்ளது. அந்த இரு மொழிகளும் ஒற்றை மூல மொழியில் இருந்து வந்தவை. அம்மொழி பேசியவர்கள் ’அய்ரியர்’ என்று அழைக்கப்பட்டதாக அவெஸ்தாவில்  கூறப்படுகிறது. 

பழைய பெர்சிய இனத்தவர்களின் மதமான சோராஸ்ட்ரியத்தின் (Zoroastrianism) புனித நூலான அவெஸ்தாவில் சொல்லப்பட்டுள்ள சமூக அமைப்பு முறையும், கடவுள் வழிபாட்டு முறையும் ரிக் வேதத்துடன் ஒத்துள்ளது. அவெஸ்தாவில் உள்ள ஒவ்வொரு விடயமும் ரிக் வேதத்துடன் நேரடியாகவே தொடர்புடையதாக இருக்கிறது. அதேபோல் அய்ரியர்கள் தொடர்ச்சியாக கிழக்கு நோக்கி சென்றதற்கான ஆதாரம் கல்வெட்டுக்களில் உள்ளது. (கி.மு 1600-ல் ஈராக்கில் கிடைத்த காசைட் கல்வெட்டு மற்றும் கி.மு 1800 சார்ந்த மித்தானி கல்வெட்டு). 

அய்ரியர்கள் வெண்கல குத்துவால்கள் மற்றும் மரக் கைப்பிடியுடன் கூடிய கருவிகளும் பயன்படுத்தியதற்கான சான்றுகள் வடமேற்கு இந்தியாவில் நடந்த தொல்பொருள் ஆய்வில் கிடைத்துள்ளது. ஆப்கனிஸ்தானின் குபா நதியும், ராஜஸ்தானில் இருந்ததாக சொல்லப்படும் சரஸ்வதி நதி, சிந்து மற்றும் அதன் கிளை ஆறுகளைப் பற்றியும் ரிக் வேதத்தில் குறிப்புகள் உள்ளது. இடம்பெயர்ந்து இந்தியத் துணைக் கண்டத்திற்குள் வந்த பிறகு, அவர்கள் இந்த பகுதியில் தங்கி இருந்திருந்தார்கள். ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்குள் வந்து சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ரிக் வேதம் தொகுக்கப்பட்டுள்ளது. எனவேதான் ரிக் வேதத்தில் இந்த நதிகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. 

ஆரியர்கள் முதன்முதலாக இந்தியத் துணைக் கண்டத்தில் குடியமர்ந்த இடம் ஏழு நதிகள் நாடு (சப்தநதி) என்றழைக்கப்படுகிறது. அவர்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்குள் வந்தபோது இங்கு வாழ்ந்து கொண்டிருந்த கருப்பான, சிவலிங்கத்தை வழிபடும் தாசர்களையும் தஸ்யூக்களையும் எதிர்த்து சண்டை போட்டுள்ளனர். குறிப்பாக தஸ்யுஹத்ய என்ற பதம் (தஸ்யூக்கள் படுகொலை) திரும்பத் திரும்ப வருகிறது. பூர்வீக இந்தியர்களான தஸ்யூக்களை அழித்தொழிப்பது குறித்து நிறைய தகவல்கள் ரிக் வேதத்தில் இருப்பதாக வரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ்.சர்மா தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.

இனம் / குலம் / குடும்பம்

ஆரியர்கள் குலங்களாகப் பிரிந்திருந்தனர். குறிப்பாக அவர்கள் ஐந்து வம்சத்தினராக தங்களைப் பிரித்துக் கொண்டதாக பஞ்சஜனம் என ரிக் வேதம் குறிப்பிடுகிறது. இவர்களுக்குள் நிலையான சண்டை இருந்து வந்தது. அத்தோடு தாசர்களுடனும் குறிப்பாக தஸ்யூக்களுடனும் தொடர்ந்து சண்டை போட்டு வந்தனர். அந்த பஞ்சஜனத்தில் உள்ள குலத்தில் பரதர்களும், திருத்சுக்களும் ஆள்கிற குலங்களாக விளங்கினர். 

பரத குலத்தை எதிர்த்து 10 குலங்கள் ஒன்று சேர்ந்து எதிர்தது பருஷனீ (ரவி) நதிக்கரையில் சண்டை போட்டுள்ளனர். அதில் சுதாசன் தலைமையிலான பரதர்கள் வெற்றியடைந்தார்கள். அதற்குப்பிறகு பரதகுலம் மிகப்பெரிய ஆளும் வம்சமாக மாறுகிறது. இதை மையமாக வைத்துதான் இந்தியத் துணைக் கண்டம் பாரத வர்ஷம் என்று அழைக்கப்படுகிறது. 

ஜன எனப்படும் சொல் ரிக் வேதத்தில் 275 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜன என்ற பதம் ரத்தத் தொடர்புடைய இனத்தைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ரத்தத் தொடர்புடைய உறவே ரிக் வேத சமூக உருவாக்கத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது. இரத்த உறவே ஒருவரை அடையாளப்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது. இரத்த உறவுக் குழுக்களுக்கு விஸ்வாசமாக இருப்பது தலையாயக் கடமையாக கருதப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

ஜனபதம் (பிரதேசம்) என்ற சொல் ரிக் வேத சமூகத்தில் பயன்படுத்தப்படவில்லை. அவர்களுக்கு நிலையான பிரேதேசம் இல்லாததால் நிலத்தை அடிப்படையாக வைத்து தங்களை அடையாளப்படுத்த முடியாததால், ரத்த உறவுக் குழுவையே தங்கள் பாரம்பரிய அடையாளமாக கடைபிடித்துள்ளனர். தந்தையை தலைமையாகக் கொண்ட கிரிஹ என்ற குடும்ப அமைப்பு முறை அவர்களிடம் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான நபர்களை உள்ளடக்கிய மிகப்பெரிய அமைப்பாக கிரிஹம் செயல்பட்டுள்ளது. குழுந்தைகளும் கால்நடைகளும் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வழிபடும் பாசுரங்கள் அதிகமாக ரிக் வேதத்தில் உள்ளது.  

C:\Users\Admin\Desktop\Aryans_entering_India.jpg

ஆட்சி முறை

ரிக் வேத ஆரியர்கள் இனமரபுக் குழுத் தலைமையை மையமாக கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். ராஜன் என்றழைக்கப்படும் தலைமையின் கீழ் போர்கள் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. சபா, சமிதி என்று அழைக்கப்படும் இனமரபு குழுக்களைக் கொண்ட மன்றத்தால் தலைவன் தேர்வு செய்யப்பட்டதற்கான குறிப்புகள் ரிக் வேதத்தில் உள்ளன. 

அவனே கால்நடைகளைப் பாதுகாப்பவனாகவும், இனத்தின் சார்பாக தெய்வங்களுக்கு பிரார்த்தனை செய்பவனாவும் இருந்துள்ளான். தலைவனுக்கு துணையாக புரோகிதர்கள் இருந்துள்ளனர். வசிஷ்டர், விசுவாமித்திரர் போன்றவர்கள் மன்னனுக்கு துணையாக இருந்துள்ளனர். அதற்காக பாசுக்களையும் அடிமைப் பெண்களையும் பரிசாகப் பெற்றுள்ளனர். பலி என்றலைக்கப்படும் காணிக்கையை மன்னன் பெற்றுள்ளான். 

நாடோடி சமூகம் என்பதால் நிலையான பிரேதச நிர்வாக அமைப்பு அவர்களிடம்  இல்லை. ஆனால் வ்ரதா, கணா, கிரமா, சார்தா போன்ற இன மரபுக் குழுக்களை உள்ளடக்கிய போர்வீரர் அமைப்பு இருந்துள்ளது. 

பொருளாதார வாழ்க்கை

ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்த பிறகு வேளாண்மையைப் பற்றிய அறிமுகம் கிடைத்துள்ளது. ஏர்முனை, விதை அறுவடை, நடவு, கதிரடித்தல் மற்றும் பல்வேறு பருவநிலை பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்தில் காணப்படுகிறது. இவையனைத்தும் பிற்காலத்திய இடைச்செருகலாக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆரியர்கள் வருவதற்கு முன் பூர்விக இந்தியர்கள் நீரைத் தேக்கி, நிலத்தைப் பண்படுத்தி வேளாண்மையில் நல்ல பரிச்சயம் உள்ளவர்களாக இருந்துள்ளனர். 

ரிக் வேதத்தில் அதிகமான குறிப்புகள் பசுவைப் பற்றி உள்ளது. பசுக்களுக்குகான போர்கள் ரிக் வேதத்தில் காவிஷ்தி என்றழைக்கப்படுகிறது. பசுக்களைத் தான் அவர்களின் முக்கியமான செல்வமாகக் கருதியுள்ளனர். நிலத்தைப் பற்றிய எந்த சிறப்பு முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. மேய்ச்சலுக்காக மட்டுமே நிலங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நிலம் தனிச் சொத்துடமையாகக் கருதப்படவில்லை. 

பல்வேறு கைவினைஞர்களைப் பற்றிய குறிப்புகளும் ரிக் வேதத்தில் உள்ளது. தாமிரம் மற்றும் வெண்கலத்தைக் குறிப்பதற்கு அயஸ் என்று ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறது. எனவே இந்த உலோகங்களை அவர்கள் பயன்படுத்தியதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

மேய்ச்சல் தொழிலை மையமாகக் கொண்ட மக்களிடம் வரி வருமானம் பெரிய பங்காற்றவில்லை. நிலத்தையோ தானியங்களையோ பரிசாக மன்னன் பெறமுடியவில்லை. அதேபோல் வீட்டு அடிமைகள் கணிசமாக இருந்துள்ளனர். உற்பத்தி செய்யும் உணவு முறை பிரதானமாக இல்லை. எனவே அடிமைகள் வேளாண்மையில் பெரிய பங்காற்றவில்லை. கூலியாட்களும் இடம் பெறவில்லை.

சமூகப் பிரிவினைகள்

இந்தியத் துணைக் கண்டத்திற்குள் வந்த ஆரியர்கள் செவ்விய நிறமுடையவர்களாக இருந்தனர். பூர்வீக இந்திய மக்கள் கருப்பு நிறமாக இருந்துள்ளனர். பூர்வீக மக்களை வென்று அடிமைப்படுத்திய பிறகே சமூகப் பிரிவினைகள் தோற்றம் பெற்றுள்ளது. ரிக் வேதத்தில் வருணம் என்றழைக்கப்படும் நிறம் சமூகப் படிநிலையை இனம்காண ஒரு குறியூடாக இருந்திருக்க வேண்டும். 

ஆரியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட பூர்வீக கருப்பு மக்களான தாசர்களும் தஸ்யூக்களும் சூத்திரர்களாக நடத்தப்பட்டுள்ளனர்.  இனத் தலைவர்களும் புரோகிதர்களும் இந்த நடைமுறையில் பெரும் ஆதாயம் அடைந்தனர். இனமரபு சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இவ்வாறுதான் உருவானது. படை வீரர்கள், புரோகிதர்கள், சாமானியர்கள் என மூன்று பிரிவுகள் உருவானது. பின் சூத்திரர் எனப்படும் நான்காவது பிரிவு ரிக் வேத காலத்தின் இறுதியில் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது. இந்த பிரிவு வகை ரிக் வேதத்தில பத்தாவது தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பிற்சேர்க்கையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

தொழில் அடிப்படையிலான பிரிவினையின் ஆரம்ப கட்டமாக ரிக் வேத காலம் அமைந்துள்ளது. புரோகிதர்கள் வீட்டு அடிமைகளையும் பசுக்களையும் மன்னனிடம் இருந்து பரிசுகளாகப் பெற்று வந்த குறிப்புகள் உள்ளன. 

கடவுள் / சமயம்

ரிக் வேதத்தில் பல தெய்வங்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை இந்திரன், அக்னி, வருணன், சோமன். இந்திரன் எனும் கடவுளின் பெயர் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திரனை  புரந்தரன் என்றும் ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறது. புரந்தரன் என்றால் கோட்டையை இடிப்பவன் என்று பொருள். ஆரியர்களுக்கு முந்தைய மக்களின் கட்டிடங்களையும் நீர்நிலைகளையும் இடித்ததால் இந்த பெயர் பெற்றான் என கூறப்படுகிறது. 

தேவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் தூதுவனாக விளங்குவது அக்னி என்று கருதப்படுகிறது. தேவர்களிடம் ஒரு வேண்டுதலை முன்வைக்கும்போது அவர்களுக்கு செலுத்த வேண்டிய காணிக்கையான அனைத்து பரிசுகளையும் நெருப்பில் போட்டு சுட்டால் அது புகையாக வானத்தில் உள்ள தேவர்களை அடையும் என்பது ஆரிய மரபு. எனவேதான் வேள்வி, யாகம் செய்வது ரிக் வேத சமூகத்தில் மிக முக்கியமான பங்காற்றியது

வருணன் என்றழைக்கப்டும் நீரை உருவாக்கும் கடவுள் மூன்றாவது முக்கியமான கடவுளாக பார்க்கப்படுகிறது. இயற்கை ஒழுங்குகளை முறைப்படுத்துபவன் என்றும் உலகில் என்ன நடந்தாலும் வருணனின்  செயல்தான் என்றும் கருதப்படுகிறது. 

அதனைத் தொடர்ந்து சோமன் மிக முக்கியமான கடவுள். குறிப்பிட்ட ஒரு தாவரத்தில் இருந்து செய்யப்படும் மதுவகையே சோமம். குடிவெறியூட்டும் இந்த பானம் கடவுளாகக் கருதப்படுகிறது. இந்த மதுவை தயாரிக்கும் வழிமுறை குறித்து விளக்க ரிக் வேதத்தில் பல பாசுரங்கள் இடம் பெற்றுள்ளன. 

அதிதி, உஷை போன்ற சில பெண் கடவுள்களையும் வழிபட்டுள்ளனர்.  ரிக் வேத கால ஆரியர்களின் வழிபாட்டின் மையம் குழந்தைகள், கால்நடைகள், உணவு, செல்வம் போன்றவற்றை வேண்டுவதாகவே அமைந்துள்ளது.

தொடரும்…

ஆதாரம்:- https://madrasreview.com/research/aryan-migration-and-rig-vedic-period/