Saturday, 27 May 2023

சாதியை பற்றி விவாதம் -ஆரியர் யார்?

  Palani Chinnasamy

மேலே உள்ள எனது பதிவு மே மாத
#சமரன் இதழில் வந்த கட்டுரையில் இருந்து எடுத்தாளப் பட்டது.
நண்டு, சிண்டுகள் எல்லாம்
இன்று சாதியம் தீண்டாமை பற்றி ஆய்வு செய்து தீர்வை நிறுவி விட்டோம் என குரல் எழுப்பி வருகின்றனர்.
ஆனால்...
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் (ம.ஜ.இ.க), 1990 களிலேயே சாதியம்
தீண்டாமை பற்றி தனது நிலைப்பாட்டை வைத்து விட்டது.
அதன் மீது விவாதங்கள் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
கி.மு 1500-லிருந்து கி.மு.1000 வரையிலான காலத்தில் ஆளும் பழங்குடி அரசின் கீழே தனியுடைமை தோன்றியது. பிறகு தனிச் சொத்துடைமை திடப் பட்டது. கி.மு 1000-த்திலிருந்து கி.மு.500-க்குப் பிறகு நிலத்தில் தனியுடைமை தெளிவாக எல்லை வரையறுக்
கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டது.
நிலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவரே நிலத்தின் உரிமையாளராவார். அதன் பிறகு கி.மு. 322-லிருந்து கி.மு.200 வரை காலகட்டத்தில் மையப்படுத்தப்பட்ட அரசு உருவாகி அடிமைச் சமூகத்தை திடப்படுத்தியது.
சுரண்டலை பாதுகாக்கும் ஒரு வழிமுறையாக வருணாசிரம தர்மம் வடிவமைக்கப்பட்டது. இந்த தர்மங்களும் கௌடில்யர் போன்றோரால் வகுக்கப் பட்ட சட்டங்களும் நிலைபெற்றிருந்த சமூகப் படிநிலை அமைப்பை உயர்த்திப் பிடித்தன.
இதன் பிறகு நகரங்கள் வீழ்ந்தன.
இது உற்பத்தி முறையில் நெருக்கடியை தோற்றுவித்தது. வைசியர்களும் சூத்திரர்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய மறுத்தனர்.
கி.பி 3-ஆம் நூற்றாண்டு, கி.பி. 4-காம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்டத்தில்
(இதுவே கலிகாலம்) உற்பத்தி உறவுகள் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாயின.
குப்தர் காலத்தில் உருவாக்கப்பட்ட நிலமானியமுறை ஒரு புதிய சமூக உருவாக்கத்தை, புதிய தொழில் பிரிவினைகளை, வர்க்கத்தை தோற்றுவித்தது.
இது முந்தைய உற்பத்தி முறைக்கு உரியதான வர்ண முறையை செயல ற்றதாக்கியது. புதிய நிலப்பிரபுத்துவ (நிலமானிய) முறையை தோற்றுவித்தது. அதற்கான சமூக வடிவமாக சாதியை தோற்றுவித்தது.
இப்படி துவக்கத்தில் உருவான சாதியம் தீண்டாமை பிரிட்டிஷ் ஆட்சியில் நிறைய சீர்திருத்தம் கண்டது. 1947 க்குப் பிறகு நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில்
உற்பத்தி உறவுகளில், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஏற்ப நிலப்பிரபுத்துவம் பல மாற்றங்களை கண்டு இன்று அரை நிலப்பிரபுத்துவமாக புதிய காலனிய ஆதிக்கத்திற்கு சாதியம் தீண்டாமை சேவை செய்து வருகிறது.
ம.ஜ.இ.க, நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின் மேற்கட்டுமானம் தான் சாதியம் தீண்டாமை என்று வரையறுத்து அதை (சாதியம் தீண்டாமையை) ஒழிக்க புதிய ஜனநாயகப் புரட்சியை தீர்வாக முன்வைத்துள்ளது. நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த விவசாயப் புரட்சி
மற்றும் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை எதிர்த்த தேசிய விடுதலைப் புரட்சி பாட்டாளி வர்க்க தலைமையில் அதன் ஜனநாயக வர்க்கங்களை அணிதிரட்டி புதிய ஜனநாயகப் புரட்சி நடத்தி முடிப்பதன் மூலம் சாதியம் தீண்டாமை நீட்டிப்பதற்கான பொருளியல் அடித்தளம் தகர்க்கப் படும் என்றது.
சாதி தீண்டாமை ஒழிப்புக்கு ம.ஜ.இ.க முன்வைத்த நிலைபாடு இது.
எனது தேடுதல் இவை
 ஜாதியம் என்பது அடிப்படையில் மக்களை பிளவுப் படுத்தி ஒடுக்கும் செயற்பாடுகளுக்கான ஒரு கருத்தியல்.  அதேவேளை பிளவுண்ட குழுக்கள் வேற்றுமைக் கூறுகளைப் பேணியபடி ஒரே சமூக அமைப்பாகச் சேர்ந்து இயங்க வகை செய்வதும் அந்தக் கருத்தியலுக்கான அடிப்படைப் பண்பாகும் .
  சமூக ஏற்றத்தாழ்வுகள் ஒரு சமூகத்தின் உற்பத்தி உறவுகளின் அடிப்படையிலே பெரிதும் முடிவாகின்றன.  எனினும் பிறப்பால் மனிதரை வேறுபடுத்தி அந்த வேறுபாடுகளுக்குள் ஏற்றத்தாழ்வுகளை கொண்ட உற்பத்தி சாராத சமூக ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.  அவற்றின் தோற்றுவாய்களை  அடிமைச் சமுதாய நிலவுடைமை சமுதாய உற்பத்தி உறவுகளின் தொடக்கமே....
    பிளவுபடுத்தலை முறியடித்து அனைத்து மக்களையும் ஒன்று படுத்துவது சாதியத்தை தவிர்ப்பதன்  முன் நிபந்தனையும் முடிவான இலட்சியம் ஆகும்.  சாதிய உணர்வுகளை விட்டொழிந்து புத்துலகம் படைக்கும் உணர்வுடன் அனைத்து ஜாதியினரும் ஒன்றுபட்டு போராடுவது சாத்தியமானதா? சாதியை பேணும் சாதிக்கு எதிராக போராட வேண்டும் என்கிற வகையில் ஆதிக்க சாதி எதுவாயினும்  எதிரி நிலைக்குரியதாக இருக்குமல்லவா?  அத்தகைய ஆதிக்க ஜாதிக்கு எதிராக தானே ஏனைய ஜாதிகளை ஐய்கியப்படுத்தி  போராட முடியும்!!! .
    ஏற்றத்தாழ்வன சமூக அமைப்பில் சுருண்டுவோர்க்கு உரியதாக உள்ள அதிகாரத்தை பேணும் பொருட்டு வடிவமைக்கப்பட்டது ஜாதியம். சாதித் தகர்பில் அதிகார வர்க்கமாக பல்வேறு ஜாதிகளிலிருந்து பிரதிநிதிகள் இருப்பது போல ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களும் அனைத்து ஜாதிகளும் உள்ளனர் அதிகாரத்துவ சமூக அமைப்பு பேணும் ஜாதியத்தை தகர்க்கும் பொருட்டு வர்க்க அடிப்படையிலான பல்வேறு அரசியல் காரணிகள் ஒடுக்கு முறைக்கு ஆட் படுகிற அனைத்து ஜாதிகளையும் சேர்ந்த மக்களை ஓரணியில் ஒன்றிணைத்து போராட வேண்டியுள்ளது.
    சாதியின் வளர்ச்சியை பற்றி பேசுவதை பின் பார்ப்போம் ...
    நிலவுடைமை சமூகத்தில் உறுதியடைந்த சாதியத்தை மனுதர்மம் பகவத் கீதை சங்கரர் அத்வைதம்  ஆகியன பிராமணர்களுக்கான ஆன்மீகத் தலைமையை வலுவடையச் செய்ததோடு, சாதிகள் ஒவ்வொன்றும் தத்தமது தொழில்களை மாறுபாடின்றிச் செய்தொழுகும் வாழ்நிலைக்கு தெய்வ அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தன.
    
மனஸ்மிருகி  பகவத் கீதை சங்கர அத்வைதம் ஆகியவை அகமணத்தை  இறுக்கமான  கண்காணிப்பு உட்படுத்தும் ஆன்மீக வழிகாட்டலை கொண்ட நிலப்பரப்புத்து அமைப்புக்கு வசதி செய்தனர் தெய்வீக அங்கீகாரம் பெற்ற அரசு வேண்டியபோது வன்முறையினூடாக சாதி கலப்பு ஏற்படாதவாறு கண்காணிப்பை மேற் கொண்டது. வழிவழியாக வரும் வம்சாவளி தொழிற்படையொன்றை தனது மதிநுட்பத்தால் உழைப்பாற்றலை பல நூற்றாண்டுகளாக சாதியத்தின் பேரால் நிலத்துடன் பிணைக்கப்பட்ட மக்களை சுரண்டி அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டனர்.

ஆக பிராமணர், அரசுக்கான ஜாதி ஆகியன மட்டும் இன்றி ஒவ்வொரு பெரு நிலப்பரப்பிலும் நிலப்பரப்புத்துவ சாதிகளும் வேறாக அதிகார நிலைக்கு உரியவனாக இருந்துள்ளன இவ்வாறு அனைத்து பிரதேசங்களிலும் பிராமணர் அரசு சாதிகள் நிலப்பரப்பு சாதிகள் என்பன ஜாதியத்தின் வாய்ப்பை பயன்படுத்தி கைவினைஞர் ஜாதிகளையும் பண்ணையடிமை ஜாதிகளையும் ஒடுக்கி வந்தனர். 
ஆங்கிலேயர் ஆட்சி முழுமையான முதலாளித்துவ மாற்றம் வேண்டி இருக்கவில்லை. அவர்களது சுரண்டல் வெவ்வேறு தளங்களில் மேற்கொள்ளும் பொருட்டு அரைகுறையான நிலப்பிரப்புதுவத்தை  தகர்த்தது அதே வேளையில் மிகுந்த மதிநுட்பத்துடன் சாதிய கட்டமைப்பை தமக்கு வசதியான முறையில் கையளவும் செய்தனர்.
ஆரியர்கள்தான் எல்லாவற்றிக்கும் காரணம் என்று கூறி சமூக வளர்ச்சி விதியை வெறும் மதமாக இனவாதமாக குறுகிக் கொள்வதா? கூறுங்கள் தோழர்களே....

உண்மையில் கற்றது கைமண் அளவு கல்லாதவை கடல் அளவு என்று சும்மா சொலியிருக்க மாட்டர்.

நாம் இங்கே விவாதிக் கொண்டிருக்கும் பலரும் வரலாற்று ஆவணங்கள் மற்றும் தொல்லியல் ஆவணங்கள் படித்தவர்கள் எத்தனை பேர் இருப்பர் என்று தெரியவில்லை. நான் இரண்டு நாளாக வாசித்த நூல்கள் வாயிலாக ஆரியர்கள் வருகை என்பதும் ஆரியர் பற்றி வேதங்கள் கூறும் எல்லாமே ஆங்கிலேயர்களின் புனைவிற்கு துணை போயின மற்றும் நேற்று கேட்ட கேள்விகளுக்கு எனது இணையத்தில் பதில் தேடியுள்ளேன். இந்திய வரலாறு பற்றி, "ஏ.ஏல் பஸ்யம், ரோமிலா தாப்பர், ஆக்ஸ்போர்யூனிவர்சிட்டி, சோசப் இட மருகு" நூல்களிலிருந்து நல்ல புரிதல் அடைந்துள்ளேன். ஆர்.எஸ். சர்மா எழுதிய ஆரியரை தேடி போல ஆரியர்களா அவர்கள் யார் ? என்று சிறு நூல் எழுத கண்டண்ட் உள்ளது என்ன செய்ய தோழர்களே???

சரி சில தேடுதல் இன்று...

பஞ்சாப் அரியான ,ஜம்மு, ராஜஸ்தான் பகுதிகளில் செய்யப்பட்ட ஆய்வில் ரிக்வேதத்தில் கூறபடுவதுபோல் தேர் சக்கரங்களோ இரும்போ,விவசாயம் செய்யப் பட்டதற்கான அறிகுறியோ காணப்பட்டவில்லை போதுமான அளவில் தாமிரக்கருவிகளோ கிடைக்க வில்லை. இங்கு ஆரியர்கள் குடியேறிய காலம் கிமு 1300,இந்த காலத்துக்கு பின்னால் 300 ஆண்டுகள் கழித்துதான் ரிக்வேதம் காலமாக உள்ளது.
இங்கே காலத்திற்கும் களத்திற்கும் அப்பாற்பட்டு வரலாற்றை பேசுகின்றனர் நமது ஆங்கிலேய எழுத்துகளை பின்பற்றுவோர்.

அன்று ஆரியர்களின் வருகையானது மேய்ச்சல் குடிகளாக அதிக பட்சம் நூறு பேருக்கு மேல் ஒரு இடத்தில் சேர்ந்து வாழ்வது கடினமான காரியம். அந்த காலப் பகுதியில் பல்வேறு கட்டங்களில் தங்களின் கால்நடைகளின் மேச்சலுக்காக இடம்பெயர்ந்தாவர்களே அந்த மேச்சல் குடிகள். அவர்களைதான் ஆரியர்கள் இங்கு வந்து இந்த நாட்டை அடிமை படுத்திவிட்டனர் என்று கூச்சலிடுகின்றனர்.
அவர்கள் இங்கே நுழையும் பொழுது  சிந்து சமவெளி நாகரிகமானது நகர நாகரிகமாகவும் உயர்ந்த சமூக வளர்சியையும் அடைந்து இருந்தது என்பது தொல்பொருள் ஆராய்சி கூறுகிறது. அப்படியெனும் பொழுது, வேளாண் வளர்ச்சியும், நீர்ப்பாசன வசதிகளையும், சுரங்கத் தொழில்களும் மேம்பட்டில்லாமல் எப்படி இந்த வளர்சியை அச் சமூக அமைப்பு கொண்டிருக்க முடியும்??? .
இதற்கு பெரும்மனித ஆற்றல் தேவை கூட்டு சமூக வாழ்வும் அவசியமானது அல்லவா? (பின்னர் காலமாற்றம் அல்லது இயற்கை பேரிடரால் இந்த பகுதி அழிந்திருக்கும் என்கின்றனர்).

நைல்நதிநாகரீகமும், மெசடோமிய,சிந்து சமவெளி நாகரிகங்களும் பெரும் வேலைப் பிரிவினையாகக் கொண்டிருந்தது அல்லது கொண்டிருக்கவேண்டும். அங்கே அரசு உருவாகியிருந்தது இதனை கருத்தில் கொள்ள வேண்டும் நாம்.

மனிதகுல வளர்ச்சியில் திறமையுள்ள குலங்கள் மற்ற குலங்களை அபகரித்து இணைப்பது மூலம் குல சமூகங்களாக மாறுகின்றன.
இவையே அடிமைசமுகமாகவும் பரிணமிக்கின்றன. இதற்கான திறமை இல்லாத குலங்கள் காலப்போக்கில்
அழிந்து விடும். இல்லை யெனில், அக்கம் பக்கமாக உள்ள குலங்கள் இயல்பாக இணைந்து குல சமூகங்களாக  மாறுகின்றன. இவை மேச்சல் குடிகளான ஆரியர்களுக்கும் பொருந்தும், அவர்கள் இங்கிருந்த மக்களோடு மக்களாகி விட்டனர். அவர்களின் எண்ணிக்கை இங்கிருந்தவர்களை விட மிகக் குறைவு இதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

இந்திய துணைக்கண்டம் பெரும் நிலப்பரப்பையும் பல்வேறு இயற்கை பௌதீக பூகோள காரணங்களால் பல்வேறு பகுதிகளாக பிரிந்து கிடந்தது. அவை ஏன் மொகலாயர்கள் ஆண்ட அத்துனை ஆண்டுகளில் கூட ஒன்று பட்ட இந்திய பகுதி உருவாகவில்லை இதனை பற்றி உங்களின் வரலாற்று அறிவை பயன்படுத்தினால் புரிந்துக் கொள்ள எளிதாகும்.

தென் இந்திய பகுதிகளை திராவிடம்,என்றும். வட இந்திய பகுதிகளை ஆரிய வர்த்தம் என்றும் கருத்துகான நூல் ஆதாரம் தேடுங்கள்....

இக்கருத்து பரவிய காலத்தில் ஆரியர் என்ற இனமோ திராவிடர் என்ற இனமோ இந்திய துணைக்கண்டத்தில் இல்லை.
ஆரியர்களே கிபி 400 பின் இந்தியாவில் ஒரு இனமாக நிலை நிறுத்த முயற்சிக்கின்றனர் அவை எல்லாவற்றின் கலப்பில் விளைந்தது என்னும் பொழுது அவற்றை ஒரு இனமாக எப்படி ஏற்பது??? திராவிடர் என்ற இனம் எப்போதும் கிடையாது திராவிடம் என்ற வார்த்தை வெறும் நிலப்பகுதியை குறிக்கும் அடையாளம் ஆகும்.

 இன்னும் தேடுவோம் விவாதிப்போம் தெளிவடைவோம் தோழர்களே....
ஜாதியம் பற்றி தேடுதலில் ஆரியர்கள் அதாவது பார்ப்பனர்கள்இவர்களைப் பற்றி பேசாமல்ஜாதியை பற்றி பேசுவதுஅபத்தம்ஏற்க முடியாது என்று பலரும் கூறுகின்றனர். ஆக ஜாதியைப் பற்றி தேடும் முன் ஆரியர்கள் யார் அவர்களுடைய வரலாற்று பின்னணி ஒரு தெளிவடைவோமே அங்கு பிறகு செல்வோம் ஜாதியை பற்றி தேர்தலில் .

சரி ஆரியர்கள் யார்?
வரலாற்று ஆசிரியர்கள் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை சொல்லி இருந்தாலும் ஆரியர்கள் என்பவர்கள் கி.மு 1500 வாக்கில் கைபர் போலன் கணவாய் வழியாக மேச்சல் குடிகளான சில குழுக்கள் பல சமயங்களில் அந்தப் பகுதிகளில் குடியேறியது. 
கிமு 2000 ஆண்டுகளில் ரஷ்யாவில் அரான் கடற்கரை பிரதேசங்களில்  இருந்து ஒரு மேச்சல் குழுவானது தெற்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் செல்லலானர். அதில் ஒரு பிரிவினரே இந்திய தீபகற்பத்தில் தங்களின் கால்நடைகளை மேய்ப்பதற்காக வந்தன ஆரம்பத்தில் பல பகுதியில் அலைந்து திரிந்த இவர்கள் இங்குள்ள குழுக்களுடன் அக்கம் பக்கத்தில் சேர்ந்து வாழலானர். இவர்களை நமது வசதிக்காக ஆரியர்கள் என்று அழைப்போம். இவர்கள் இங்கே வரும் சமயத்தில் மிக உயரிய நகர நாகரிகம் படைத்த மக்கள் வாழ்ந்திருந்தனர் அவர்களை திராவிடர்கள் என்று அழைப்போம் நமது வசதிக்காக.

ஆரியர்கள் ஆடு மாடு மேய்ப்பவர்களாகவும் நிரந்தரமாக எங்கே தங்காமல் தங்கள் மேச்சலுக்காக இடம் மாறி கொண்டே இருந்தனர். இங்கிருந்து பூர்வ குடிகள் நகரங்களை அமைக்கவும் கோட்டைகளை கட்டவும் பழகி இருந்தனர்.
ஆரியர்கள் வருகைக்கு முன் இங்கிருந்த வழிபாட்டு முறைகள்.
ஆரியர்களின் மூல நூலான ரிக்கு வேதத்தில் இங்கிருந்த வழிகாட்டு முறையையும் அவர்களின் பெயரின் குறிப்பிட்டுள்ளனர். ஆரியர்களின் வருகைக்கு முன் இங்கு வணக்கத்திற்குரிய கடவுள்களை ஆரியர்களும் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டனர். இந்தப் பகுதியில் இருந்த கடவுள்கள் பலவற்றை ஆரியர்கள் ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள் அதேபோல் அவர்களின் கடவுள்களையும் வரிசையில் பின்னுக்குத் தள்ளப்பட்டன.
ஆரியர்களின் கடவுள்கள் 
வேதங்கள் கூறும் வழிபாட்டு மூர்த்தி களான தேவர்கள் இந்திரன் வருணன் அக்னி மித்திரன் ஆகியோர்தான் ..... பகவதி பெருமாள் விஷ்ணு சிவன் கிருஷ்ணன் ராமன் சுப்பிரமணிய கணபதி அனுமான் எனக்கு இன்று வழங்கப்படுகிற கடவுள் ஆரியர்கள் கடவுளாக  இல்லை ...
இந்தியாவில் குடியேறுகின்ற காலத்தில் ஆரியர்களுடைய புரோகிதர்கள் என ஒரு தனி  தொழில் பிரிவினை கொண்டிருக்கவில்லை. 
அன்றும் இன்றும் ஒன்றா
ஆரியர்கள் ஒரே தடவையாக குடியேறவில்லை   ஒன்றன்பின் ஒன்றாக பல குழுக்களாக பல காலகட்டங்களில் குடியேறியுள்ளனர். இவ்வாறு குடியேறியவர்கள் ஒரே கோத்திரத்தையோ ஒரே குழுவையே சார்ந்தவர்களோ ஒரே பகுதியை சார்ந்தவர்களும் அல்ல. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு எடுத்துக் கொள்ளவும்.  அமெரிக்காவிற்கு குடியேறும் ஒரு தமிழ் எஞ்சினியரை கணக்கில் எடுத்துக் கொள்ளவும். நாட்டால் இந்தியராகவும் மொழியால் தமிழராகவும் மதத்தால் ஒன்றாகவும் இருப்பதில்லை. இப்படி பல பிரிவுகளில் உள்ளது. அன்று நாடோடிக் குடிகளுக்கு எந்த அடையாளமும் நிரந்தரம் இல்லை என்பதை புரிந்து கொள்வதற்கு இவை ...
இந்தியாவை அடைந்த ஆரியர்கள் அனைவரும் ஒரே மதத்தினராக இருந்தார் என்று சொல்வது சரியல்ல மதங்கள் எதுவும் அன்று தோன்றி இருக்கவில்லை பல சிறு சிறு கோத்திரங்கள் மட்டுமே அன்று இருந்தன பல கோத்திரங்களும் அவர்கள் கூடிய கடவுளும் ஆச்சாரங்களும் இருந்தன. பழைய காலத்தில் கோத்திர தலைவருக்கு தெய்வீகத்தன்மை அளித்தோ இயற்கைக்கு மனித வடிவம் அளித்தோ அவர்கள் வழிபாடு நடத்தினர்.     ஆரிய கோத்திரங்களில் பலவும் இயற்கை பிரதிபலிப்புக்கு மனித வடிவம் கொடுத்தது வழிபடுவையாக இருந்தன. சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் ஆகாயம் பூமி ஆகியவற்றிற்கு கடவுள் வடிவம் கொடுத்து வழிபட்டனர். காலை மாலை இரவு பகல் இடி மின்னல் முதலியவற்றிற்கும் கடவுள் வடிவம் கொடுத்தனர். மனித கற்பனை அந்த ஆரம்ப காலத்தில் இவ்வாறாக இருந்தது.( நன்றி ஜோசப் இடமருகு பிராமண மதம் தோற்றம் வளர்ச்சி ). ஆதாரம் கேம்பிரிட் ஹிஸ்டரி  ஆப் இந்தியா Vol I (1992).
Menen Aubrey, The New Mystics and the true Indian Tradition ( London. 1974).
Thaper Romila "A History of India " vol I .

No comments:

Post a Comment