நமக்கான கோட்பாடு
நமது நாடுகளுக்கான கோட்பாட்டை இயங்கியல் ரீதியாக ஆய்வதன்
ஊடாகவே உருவாக்கிக் கொள்ளமுடியும்.
கல்விசார் நிலையில் பலஅணுகுறைக் கோட்பாடுகள் உள்ளது போல் மார்க்சிய
அணுகுமுறை ஊடாக இந்தச் சமூகத்தை ஆராய்ந்து நமக்கான கோட்பாட்டை உருவாக்கிக் கொள்ள
வேண்டும்.
இங்கு ”மார்க்சின் தத்துவத்தை நாங்கள் முற்றும் முடிவான ஒன்றாய் மீறவொண்ணாத ஒன்றாய்க் கருதவில்லை. மாறாக, அது சோசலிஸ்டுகளுக்குரிய விஞ்ஞானத்தின் அடிக்கல்லை மட்டுமே கொடுத்திருக்கிறது. சோசலிஸ்டுகள் வாழ்க்கையுடன் சேர்ந்து நடைபோட விரும்பினால் இந்த விஞ்ஞானத்தை எல்லாத் திசையிலும் வளர்த்துச் செல்வது அவசியம் என்பதைநாம் ஐயமற அறிவோம். மார்க்ஸின் தத்துவத்தை தன்னிச்சையாக முறையில் அவை விரிவுபட வளர்த்திடுவது முக்கியமாய் ருஷ்ய சோஷலிஸ்டுகளுக்கு மிக்கதொரு தேவையாகுமெனக் கருதுகின்றோம். ஏனெனில் இந்தத் தத்துவம் பொதுவான வழிகாட்டும் கோட்பாடுகளையே அளித்திருக்திடுகிறது, தனிப்பட்ட முறையில் அவை பிரான்சிலிருந்து வேறு விதமாய் இங்கிலாந்திலும், ஜேர்மனியிலிருந்து வேறு விதமாய் பிரான்சிலும், ருஷ்யாவிலிருந்து வேறு விதமாய் ஜேர்மனியிலும் கையாயளப்படுகிறவை.” (பக்54 லெனின் நூல் திரட்டு!)
தலித்தியம் கற்பிப்பது தான் என்ன?
அணுகுமுறை பற்றி!!!
இந்தியாவில் தலித்தியம் என்றும் அறிமுகமாகின்ற கோட்பாட்டினைப் பற்றிய
அறிதலானது சமூக
மாற்றத்தை வேண்டுபவர்களுக்கு அவசியமாகின்றது. இங்கு தன்னியல்புசார்ந்த அரசியல்
வழிமுறைகளை வெவ்வேறு பெயர்களில் புகுத்தப்படுகின்றது. இவ்வாறான புதிய
கோட்பாடுகள் வெவ்வேறு விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்திக் கொள்கின்றன. தலித்தியம் பற்றிய விடயத்தை அறிந்து
கொள்ள தமிழகத்தின் வரலாற்றுப் போக்கோடு பொருத்தி நின்று தான் ஆராய
முடிகின்றது.
சமூகப்
பிரச்சினைக்கான ஒரு
தீர்வை முன்வைக்கும் போது
அப்பிரச்சினை எங்கிருந்து தொடங்குகின்றது, அதன்
தோற்றத்தின் மூலகாரணங்கள் என்ன என்பதை ஆய்வு
செய்து அறிந்து, அப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கும் போது தான் அப்பிரச்சினையை சரியாகக் கையாள
முடியும். அதனை
விடுத்து மேல்
எழுந்த வாரியாக சமூகத்தின் மேற்கட்டுமானத்தில் ஏற்படுகின்ற நிகழ்வுகளைக் கொண்டு
பொதுப்புத்தி கொண்டு
ஒரு முடிவுக்கு வருவது
என்பது விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையாகாது. அணுகுமுறை வெறும் உணர்வுக்கு அடிமைப்பட்ட கதம்பமான நிலையினைத் தான்
தோற்றுவிக்கும்.
மனித வாழ்க்கையில் காணப்படுகின்ற பிரச்சினையை பல கோணங்களில் பார்க்க
முடியும். எனினும்
இரண்டு பெரும் பிரிவாக
பிரித்துப் பார்க்க
முடியும். அன்றாட
வாழ்வியலில் காணப்படும் சிந்தனையைக் கொண்டு
அதாவது சமூக அமைப்பில் காணப்படுகின்ற தன்மைகளைக் கொண்டு அவற்றிற்கு விளக்கம் கொடுக்க முடியும். விஞ்ஞான ரீதியாக
சிந்திக்கின்ற வழிமுறைகள் அறிவுப் பார்வை
என்பதாகும். இந்தப்
பார்வை என்பது அறிவு
வளர்ச்சியின் மையப்
புள்ளியாகும். புறநிலை சார்ந்த
சிந்தனைப் போக்கில் அமைந்த சமூகப் பார்வையே இங்கே கூறப்படுகின்றது.
இரண்டு விதமான (அக-
புற) சிந்தனையோட்டத்தைக் கொண்ட
பதில்களுக்கும் நிறைய
வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த வித்தியாசங்களை இலகுவில் தீர்ப்பதோ அல்லது
ஒன்றை ஒன்று விலக்குவதோ இலகுவானது அல்ல.
ஆனால் முதலில் குறிப்பிடப்படும் சிந்தனையானது பரந்த
ஆதிக்கத்தில் இருக்கின்றது. அகநிலை சார்ந்த சிந்தனை
ஆதிக்கத்தில் இருப்பதனால் பல பிரச்சினைகளை இலகுவாக
தீர்க்க முடிவதில்லை. மாறாக பிரச்சினையானது வளர்ந்து பேரளிவிற்கே சென்று
விடுகின்றது. இதுவே
சமூகத்தின் அனைத்து
அலகுகளிலும் காணப்படும் முக்கிய பிரச்சினையாகும்.
ஆனால் விஞ்ஞானப் பூர்வமான ரீதியில் அதாவது
வர்க்க ரீதியாக எல்லாவற்றையும் அணுகி ஆராய்கின்ற போது பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும். அவற்றை விடுத்து வெறும்
தேசிய- மொழிவாத கோசத்தினுள்ளும், போட்டி, பொறாமை,
வஞ்சகம், சூது
என்ற சமூக முதலாளித்துவ சிந்தனையாலும். தாம் தமது
உறவு அல்லது சாதி
என்ற வகுப்புவாதச் சகதிக்குள் எல்லா பிரச்சினைகளையும் அடக்கிவிடுவதனால் எந்தப் பிரச்சினைகளும் மறைந்து விடுவதில்லை ஏனெனில் இவை
விஞ்ஞானப் போக்காக
அமைந்துவிடுவதில்லை. இந்தப்
போக்கை பரந்துபட்ட மக்களிடத்தில் எதிர்பார்ப்பது சிரமமானதே.
மார்க்சியம் - லெனினியம் கற்பிக்கும் உற்பத்தி போராட்டம், வர்க்கப்போராட்டம், விஞ்ஞானப் பரிசோதனை போன்று மூன்று அம்சத்தை விளங்கிக் கொள்வதற்கு இடையே புகுத்தப்படும் சிந்தனை மாறுபாடுகள் பற்றிய விரிவான போதனையை ஜேர்மன் சித்தாந்தம் (லுத்விக்ப்ஃபாயர்க்) டூரிங்குக்கு மறுப்பு, மார்க்சீயத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள், முரண்பாடு பற்றி, நடைமுறைபற்றி போன்றவற்றில் மூலவர்கள். “பொருளுற்பத்திக்கான நடவடிக்கையே மிகவும் அடிப்படையான நடைமுறைச் செயல், அதுதான் அவர்களுடைய பிறநடவடிக்கைகள் அனைத்தையும் தீர்மானிக்கும் செயல் என மூலவர்கள் நிரூபித்தனர். இந்தப் பகுதியில் புலநறிவின் ஊடாக பெறப்படும் அறிவு என்பது புறநிலையான பொருட்களின் உள்முரண்பாடுகளை விரிவாகவும், படிப்படியாகவும் அறிந்து கொள்வது, அதன் விதிகளையும், அதன் நிகழ்ச்சிப் போக்கிற்கும் மற்றொன்றிற்கும் இடையிலான உறவுகளை அறிந்து கொள்வதுமாகும்.
சமூக அமைப்பின் சிந்தனை என்பது உரிமை கோருவது பயங்கரவாதம், வீண்வேலை, நமக்கேன் தேவையில்லாத காரியம் என்று இணைந்து போக வழிநடத்துவம், இன்றைய பொருளியல்வாழ்வை எண்ணி அலையாதே, விண்ணுலக வாழ்வில் அனைத்தும் கிடைக்கும் என்றும், இறையரசு வாழ்வில் நித்திய இளைப்பாற்றி கிடைக்கும் என்று மதங்கள் போதிக்க முடிகின்றது.
சமூக வளர்ச்சிப் போக்கில் முன்னைய சிந்தனையில் இருந்து பெற்றி அறிவு முதிர்ச்சியை நமக்கு கற்றுத் தருகின்றது. மார்க்சியம் மனிதர் தன்னிலையை அறிந்து கொள்ளவும், இந்தச் சமூகத்தை எவ்வாறு மாற்ற முடியும் என்பதையும் கற்பிக்கின்றது. ஒவ்வொருவருடைய உறுதியான முதுகெலும்பைக் கொண்ட மக்களாக உருவாக்கின்றது. மற்றைய தத்துவங்கள் மனிதர்களின் மேல் ஏறி சவாரி செய்ய நித்தம் முயற்சிக்கின்றன. இதுவே மற்றைய தத்துவங்களுக்கும் மார்க்சீயத்திற்கும் உள்ள வித்தியாசமாகும்.
பொருள்முதல்வாதம் அனைத்து
விதமான கருத்துமுதல்வாத குப்பைகளையும், மதம் கற்பிற்கும் புரட்டுகளையும் எதிர்த்து நிற்கும் ஒரே தத்துவம். மூடநம்பிக்கைளை எதிர்த்து நிற்பது
பொருள்முதல்வாதம். விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் மார்க்சியத்தின் தத்துவத்தினை நிரூபிக்கின்றன. இயக்கவியல் என்பது
மிகமிக முழுமையான, ஆழமான,
ஒரு தலைப் பட்சமில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கும் போதனையாகும். நிரந்தரமாக வளர்ச்சியற்ற வண்ணமுள்ள பருப்பொருளை தமக்கு பிரதிபலித்துக் காட்டும் மனித அறிவின் சார்பு
நிலையை வலியுறுத்தும் போதனை
என லெனின் விளக்கின்றார்.
இயற்கை என்பதே வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் பருப்பொருள். சுயமாக
இயங்கிக் கொண்டே
இருக்கின்றது. இந்த
இயற்கையை மனித
அறிவில் பிரதிபலிக்கின்றது. இது பொருளாதார அமைப்பினைப் பொறுத்து பிரதிபலிக்கிக்கின்றது. மனிதர்கள் உருவாகுவதற்கு முன்னரே
உயிரிணங்கள் தோண்றியிருக்கின்றன. இவைகள் ஒவ்வொரு
வளர்ச்சிக் கட்டங்களையும் பல்வேறு பரிமாணங்களையும் போராட்டத்தின் ஊடாக
வளர்ச்சியடைந்து வந்துள்ளது.
அரசியல் பொருளாதாரத்தினை விளங்கிக் கொள்ள
உற்பத்திச் சக்தியின், உற்பத்தி உறவிற்கு மேல் கட்டப்பட்ட பொருளாதார அமைப்பினை பற்றிய போதிய முன்னறிவு
அவசியமானதாகும். பொருளாதார அமைப்புச் சார்ந்து உற்பத்தி முறை, வினியோகம், பரிவர்த்தனை போன்றவற்றை ஆராயும்
முறையை வெளிப்படுத்துகின்றது.
பொருளாதார அமைப்புமுறை என்ற அத்திவாரத்தின்[அஸ்திவாரத்தின்] மீதுதான் அரசியல் மேல்கட்டுமானம் கட்டப்படுகின்றது. முதலாளித்துவ பொருளாதாரவாதிகள் மதிப்பு
பற்றிய உழைப்புத் தத்துவத்தை வெளிக்
கொண்டு வந்தார்கள். மார்க்ஸ் ஒவ்வொரு பண்டத்தின் மதிப்பும் அதை
உற்பத்தி செய்வதில் செலவழிக்கப்பட்ட சமுதாய
ரீதியான அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுதாக விளக்கினார் என்கின்றார் லெனின்.
பொருட்களுக்கு இடையேயான பரிமாற்றம் மனிதர்கள் இடையிலான உறவு
நிலவுவதை மார்க்ஸ் விளக்கினார். பணம் தனிப்பட்ட உற்பத்தியளவில் பொருளாதார வாழ்வை இறுகப்பிணைக்கின்றது. மூலதனம் இந்த
பிணைப்பை வளர்ச்சியுறுவதை குறிக்கின்றது. மனிதனின் உழைப்புச் சக்தியே
ஒரு பரிமாற்றப் பண்டமாகி விடுவதை நிறுவினார்.
தொழிலாளி உற்பத்தி சாதனத்தைக் கொண்ட
உரிமையாளனிடம் தனது
உழைப்புச் சக்தியை
விற்கின்றார்கள். அவர்கள்
பெறும் கூலியைக் கொண்டு
தமது வாழ்விற்கான செலவைப்
பெறமுடிகின்றது. மறுபகுதியை ஊதியமின்றியே உழைத்து முதலாளிக்கு உபரிமதிப்பை உண்டாக்குகின்றனர். இந்த உபரிமதிப்புத் தான் இலாபத்துக் தோற்றுவாய் இதுதான் முதலாளியின் செல்வத்திற்கான தோற்றுவாய். உபரி
பற்றி வெளிப்படுத்திய கோட்பாடு மார்க்சீயத்தின் முக்கிய
கண்டுபிடிப்பாகும். மார்க்சீயம் ஒன்றே கூலி அடிமைமுறையை ஈவிரக்கமின்றி எதிர்க்கும் ஒரே தத்துவம் என்று
லெனின் நிரூபித்தார்.
மார்க்சின் மூன்றாவது உள்ளடக்கக் கூறானது
வர்க்கப் போராட்டமாகும். வர்க்கப் போராட்டம் தான்
எல்லா வளர்ச்சிக்கும் ஆதாரமாகவும் உந்து சக்தியாகவும் விளங்குகின்றது. சமூக அமைப்பில் உள்ள முரண்பாடுகளை வர்க்கப் போராட்டத்தின் ஊடாகவே
தீர்த்துக் கொள்ள
முடியும். இதுவரையில் அனைத்துப் போராட்டங்களும் வர்க்கப் போராட்டத்தின் ஊடாக மனித சரித்திரம் கடந்து வந்துள்ளது. மனிதர்களின், இயற்கையின் வளர்ச்சி என்பது முரண்பட்டதாகவும், இரசாயன
மாற்றத்திற்கு உற்பட்டதாகவும் இருந்திருக்கின்றது. பரிணாம
வளர்ச்சி என்பது
கூட ஒன்றையொன்று போராடி
விழுங்கியே வந்திருக்கின்றது. வர்க்கங்களை உள்ளடக்கியதே சாதியச் சிந்தனையும், அதனைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் பொருளாதார அமைப்புமாகும்.
வர்க்கக் கண்ணோட்டத்தைக் கொண்டே தலித்தியம் பற்றி பார்க்கப்படுகின்றது. தலித்தியம் என்பதே சாதியை முன்னிறுத்துகின்றதுயன்றி வர்க்கத்தை முன்னிறுத்துவது இல்லை. ஒரு
நேர் எதிர்மாறான கண்ணோட்டத்திற்கு பதிலாக இன்னொரு
மாற்றுக் கண்ணோட்டம் கொண்டே தலித்தியம் பற்றி
ஆராயப்படுகின்றது.
அகநிலைவாதம்-
ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை ஒடுக்கப்படுவர்களால் தான் உணர முடியும் என்ற வாதம் ஒரு அகவுணர்வு சிந்தனையாகும். ஆனால் ஒடுக்கப்பட்டவர்களின் வலியை புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு உணர்வின் அடிப்படையில் இருந்து ஆய்வை முன்வைக்க முடியாது. அகவுணர்வின் அடிப்படையில் ஆய்வை முன்வைப்பது இயங்கியல் பொருள்முதல்வாத வகைப்பட்ட ஆய்வுமுறையில்லை.
பல ஆய்வு முறைகள் இருக்கின்றன, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சித்தாந்தத்திற்கு சேவகம் செய்கின்றன. அதேபோல் மார்க்சீயத்திற்கு ஆய்வுமுறை என்பது இருக்கின்றது. இதுவே இயங்கியல்-வரலாற்றுப் பொருள்முதல் வாதம் ஆகும். இதற்குள் எவ்வகையான உள்ளடக்கக் கூறுகள் உள்ளடங்கி இருக்கின்றது என்பதைப் பார்ப்போம். இவற்றின் மூலமாக சமூகப் பிரச்சினைகளை விளங்கிக் கொள்வதற்கும் சரியான பாதைக்கு வரவும் இவைகள் துணை செய்கின்றன. சமூகத்தின் பிரச்சினைகளை பொருளாதார உற்பத்தி முறைகளில் இருந்து தான் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் படி வலியுறுத்துகின்றது. ஒவ்வொரு தனிமனிதர்களையும் சமூக அமைப்பிலிருந்து தான் பார்க்கக் கோருகின்றது. ஒரு குறிப்பிட்ட முடிவிலிருந்து அதனை பொதுமைப்படுத்துதலும் முடியாததாகும்.
இதற்கு நம்மூர் பழமொழியை இங்கு பார்ப்பது பொருந்தும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது எவ்வகையிலும் பொருந்தாது. இது ஒரு குறிப்பிட்ட ஒரு தேற்றத்தில் இருந்து ஒரு கணக்கை தீர்ப்பதைப் போன்றதாகும். ஆனால் ஒரு தேற்றத்திலிருந்து ஒரு விடைபெற முயல்வது சமூக விஞ்ஞானத்திற்கு பொருந்தாது. புறத்திலிருந்து அகத்தை நோக்கிச் செல்லல் வேண்டும் மாறாக அகத்திலிருந்து புறத்தை நோக்கியல்ல மார்க்சியம் கூறுகின்றார் சமூகம் எவ்வாறு உள்ளதோ, அதற்கு ஏற்றவாறாகவே தனிமனிதர்களும் படைக்கப்படுகின்றார்கள். மார்க்சிய ஆய்வாளர்களின் அணுகுமுறையானது புறவயத்தை அடிப்படையாகக் கொண்டே ஆய்வினை மேற்கொள்வதாகும், அதாவது பொதுமையான -பொருளில் இருந்து ஆகும்.
சாதிய உணர்வும், சாதியை வைத்து அரசியல் செய்யும் போக்கும் என்பது சாதிய அடையாளத்தைக் கொண்ட கட்சிகளை உருவாக்கிவிடுகின்றது. இன்றைய சாதிகளான தேவர், நாடார், வன்னியர், வெள்ளாள கவுண்டர், நாயுடு, ரெட்டி, முதலியார், நாட்டுக்கோட்டை செட்டி, பிள்ளை, கோனார் முதலியனவும் இன்ன பிற 'ஆண்ட பரம்பரை’ கனவில் மிதக்கின்றார்கள். இந்தச் சாதிகள் அனைத்தும் ஆண்ட பரம்பரையாக நிறுவன எண்ணுவது சமூக விஞ்ஞானப் பார்வைக்கு முரணானது. காரணம் சாதிகளாக இருக்கின்ற போதிலும் வர்க்க ரீதியாக பிரிந்தே உள்ளார்கள். இவர்கள் வர்க்க ரீதியாக பிரிந்திருக்கின்ற சாதிகளில் உள்ள அனைவரும் அந்தஸ்தினை ஒரே அளவில் சமூகத்தில் கொண்டிருக்க முடியாது.
இங்கு சாதியக் கட்டமைப்பு என்ன? இனக்குழுமம் எவ்வாறு தேசிய இனமாகின்றது? தேசிய இனம் எவ்வாறு தேசமாகின்றது என்ற புரிதல் தேவை என்றால் சமூக விஞ்ஞானப் பார்வை அவசியாகும்.
சமூகத்தினை ஆராயும் போக்கினை அறிந்து கொள்ள சாதியக் கட்டமைப்பு என்பதை விஞ்ஞானப் பார்வைக்கு உட்படுத்த வேண்டும். குறிப்பான பின்னவீனத்துவ அரசியல் போக்கு என்பது 1984களில் பின்னரும், சோவியத் வீழ்ச்சியின் பின்னாரான காலம் என்பது சமூக விஞ்ஞான அறிவு என்பது படுபிற்போக்கு நிலையை அடைந்துள்ளது. சமூக ஆய்வில் புதிய புதிய கண்ணோட்டங்கள் - ஆய்வுக் கண்ணோட்டங்கள் என்ற முறையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதில் சாதியந்தன் புத்தி குலமந்தன் ஆசாராசம் என்று சாதியே எல்லாவற்றையும் தீர்மானிப்பதாக முன்னிறுத்தியது. சாதியப்புத்தியே அனைத்துக் காரணம் என்று சாதியைச் சுற்றியே கேள்விகளை தொடுத்தது. இங்கு இயங்கியல் பொருள்முதல்வாதம் நுண்ணிய ரீதியில் அகற்றப்பட்டது. இன்று பெரும் பேச்சாளப் பெருமக்களாக முற்போக்கு முகமூடி அணிந்து வலம்வருபவர்களின் போக்கு இருக்கின்றது. அனைத்தையும் சாதிய அடிப்படையில் விளங்கிக் கொள்ள வைப்பதற்கான ஆழக்கிடங்கை உருவாக்கியவர்கள் இவர்களும் பொறுப்பானவர்கள் தான்.
பாரதியின் படைப்புகள் அவரின் வெளிப்பாடுகளை சாதியை உணர்வை நிறுவதன் ஊடாக அணுகுமுறை முன்னிறுத்தப்பட்டது அதுபோல வாஞ்சிநாதனின் பார்ப்பண சிந்தனையே அவரை ஆஸை கொல்ல துணைநின்றது போன்று சாதியைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்த இயங்கியல் மறுப்பு போக்கு என்பது சிந்தனை என்பதே வாழ்நிலை தான் உணர்வுகளை தீர்மானிப்பது என்பதை மறுத்து உணர்வு- பிறப்புத் தான் சிந்தனையை தீர்மானிக்கின்றது என்ற மார்க்சிய எதிர்நிலைக் கருத்து முன்னிறுத்தப்பட்டது.
அன்றைய கொலனித்துவ அதிகாரியாக இருந்த ஆஸ் என்பவனர் முதலாளித்துவ சமூகப் பொருளாதார உற்பத்திற்கேற்ப முதலாளித்துவ ஜனநாயகத்தை ஏற்படுத்தினார் என்பதால் ஆஸ் ஆக்கிரமிப்புச் செய்திருந்த கொலணித்துவத்தின் அதிகார வர்க்கம் என்பதை மறுத்து விட்டு தியாகியாக்குவது அபர்த்தமான பார்வையாகும். இவ்வாறான பார்வைக்கு மாற்றாக சமூக விஞ்ஞானப் பார்வை என்பது அவசியமானதாகும். சாதியமே நிர்ணயிக்கும் காரணியாக கொள்வது சாதியவாதத்திற்கு உட்பட்டதேயாகும்.
இவர்கள் நவீன தேசிய இனங்கள், நவீன தேசங்கள் பற்றிய விஞ்ஞானப் பார்வை இல்லாத அவலத்தை அவதானிக்க முடிகின்றது. தேசிய இனங்கள், தேசங்களாக வளரும் என்ற சிந்தனைப் போக்கினையும் முதலாளித்துவ ஜனநாயக இயக்கங்கள் வளரும் என்ற புரிதல் என்பது (taboo) தவிர்த்தலுக்கு உள்ளாகின்றது. இன்றைய சாதி- தேசியவாதிகள் சாதியம் என்பது தந்தை பெரியார், மு.கருணாநிதி போன்றோரின் சாதிப் பின்புலத்தை கிளறி எடுத்து தமிழரை வேற்று மானிலத்தவர்கள் தமிழர்களை ஆள்கின்றார்கள் என்ற சிந்தனை வடிவத்தை ஏற்படுத்தி தமிழ் தேசிய இனத்தினுள் தூய தமிழ் சாதிகளைத் தேடுகின்றார்கள். தூய தமிழ் தேசியம் என்பதை தமிழ் சாதிகளைக் கொண்டு கட்டமைக்க முற்படுகின்றார்கள்.
தலித்தாக இருந்தால் தான் தலித்துக்களின் உணர்வை அறியமுடியும், ஒடுக்கப்பட்ட சாதியாக இருந்தால் தான் ஒடுக்கப்பட்ட சாதியில் வலியை புரிந்து கொள்ள முடியும் என்று எதற்கும் சாதியமே அளவு கோளாக நிறுத்தப்பட்டது. சாதியத்திலும் ஒடுக்கப்பட்டவர்களின் சாதியைச் சேர்ந்தவர்களால் தான் முழுமையான இலக்கியம் படைக்க முடியும் என்ற கருத்து விதைக்கப்பட்டு மற்றைய கருத்துக்களை பலவீனமாக்கப்பட்டது.
தனிமனிதர்களுக்குள்ளேயே பிரச்சனைக்கான தீர்வைக் காணும் உச்சமே ‘‘'தன்னைச் சாதிவெறியன் அல்ல என மறுபடியும் மறுபடியும் நிரூபிக்காதவரை ஒவ்வொரு வெள்ளாளனும் சாதி வெறியனே' என்பதாகும். இது தலித்தியவாதத்தின் உச்சமான அடையாளக் கோட்பாடாக முன்னிறுத்தப்படுகின்றது. பார்ப்பணியம், யாழ்சைவவேளாளம் என்ற நிலமானியம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மாத்திரம் உரித்தானதாக இட்டுக்கட்டுகின்றது.
தமிழகத்தில்
பொதுவுடமைக்கட்சிகளில் உள்ள பதவிகளில் இடவொதுக்கீடு கோரும் அவலம் என்பது
தமிழகத்தில் அடையாள அரசியல் ஊடாக கோரப்படுகின்றது. பொதுவுடமைக் கட்சியில்
சேர்வதற்கும், அடிப்படை உறுப்பினராக சேர்வதற்கும் விதிகள் உண்டு. ஊழியர்களின்
பயிற்சிக் காலம் எவ்வளவு முக்கியமோ அதேபோல உறுப்பினரின் (பால், சாதிக்கு அப்பால்)
அரசியல் முதிர்ச்சியும், அரசியல்மயப்படுத்தப்பட்ட நிலை என்பது முக்கியமானதாகும்.
இங்கு ஒரு தோழர் போதிய அரசியல்அறிவைப் பெருக்கும் வகையில் கட்சி துணை நிற்க
வேண்டும். ஒவ்வொரு தோழர்களையும் உயர்ந்த சிந்தனைதளத்திற்கு வளர்த்து விடுவதான்
கட்சியின் கடமையாகும்.
அரசியல்மயப்படுத்தல் ஊடாக கட்சியில் பொறுப்புக்கள் கொடுக்கப்படுகின்றன.
இங்கு அரசியல் உள்ளடக்கத்தை மறுத்த அராஜகப் போக்கே அடையாள அரசியல் ஊடாக தாராளவாத
முதலாளித்துவக் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
இந்த மேலான்மை கருத்தியல்
கொண்ட சமூகமே தன்னை சுற்றியும் வரலாற்றை எழுதியுள்ளது. சமூக ஒழுங்கு ஆதிக்க வர்க்கதின் சமூக ஒழுங்காக
பேணப்பட்டு வந்துள்ளது. தாழ்ந்தவர்கள் உயர்ந்தவர்கள் என்ற கருத்தோட்டம்
கொடுப்பவர்கள் யார்? இந்தியப் பத்திரிகை இந்துவில் பாடல்வேறு-ராகம் ஒன்றுதான் என்ற
தலைப்பில் “மாமன்னர் மருது பாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், மாமன்னர்
பூலித்தேவன், மாவீரன் சுந்தரலிங்கம், மாவீரன் வௌ்ளையத் தேவன், தீரன் சின்னமலை,
மாவீரன் கோபால் நாயக்கர், ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த வீரநங்கை குயிலி,
மாவீரன் ஊமத்துரை உள்ளிட்டவர்கள் அப்படித்தான் அழித்தொழிக்கப் பட்டனர்.”
http://tamil.thehindu.com/opinion/columns/பாடல்-வேறு-%25E ( பாடல் வேறு - ராகம் ஒன்றுதான்!)
http://tamil.thehindu.com/opinion/columns/பாடல்-வேறு-%25E ( பாடல் வேறு - ராகம் ஒன்றுதான்!)
இவர்களில் குயிலியின் பெயரை மாத்திரம் எழுதுகின்ற போது சாதியை
வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இந்த சமூகம் இருக்கின்றது. சாதியச் சிந்தனை
மறுவுற்பத்தி செய்யும் இடமாக பொருளாதார அமைப்பும் அதுசார்ந்த நிறுவனங்கள்,
தொலைத்தொடர்பு, கலாசாலையும் முக்கிய பாத்திரத்தினை வகிக்கின்றது. அனைத்து
சமூகத்தளத்தில் உள்ளது போலவே கலாசாலை ஆய்வுமுறை, அது கற்பிக்கும் வரலாறு பற்றியும்
ஒரு மாறுதலைக் கொண்டு வரவேண்டும்.
மேலாதிக்கத்திற்கும்
ஒடுக்குமுறைக்கும் உள்ளாகின்ற போது அடையாளங்கள் புதுப்பிக்கப்படுகின்றதையும்
கவனத்தில் கொள்ளல் வேண்டும். இன்னுமொரு செய்தி ‘‘பகத்சிங் உடன்
தூக்கிலிடப்பட்ட அஸ்வகுல்லா கானை
எத்தனை
பேருக்கு தெரியும்...?
இசுலாமியர்களின் தியாகங்கள் மறைக்கப்படுவதையும், மறக்கடிக்கப்படுவதையும் நினைவுகூர்வோம்‘‘ இங்கு வரலாறுகள்
என்பது பொது இலட்சியத்தின் அடிப்படையில்
தான் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பின்னால் உருவாகின்ற பிரித்துப் பார்க்கின்ற
சிந்தனை என்பது தத்தம் அடையாளங்களுடன் இணைத்துக் கொள்வதாகும். மனிதர்களின் சிந்தனைகளை வரலாற்றோட்டத்துடன்
இணைத்துப் பார்க்காத விளைவுகளின் வெளிப்பாடாவும் கொள்ள முடியும்.
கருப்பொருள் பற்றி
இந்த சமூக அமைப்பில் உழைக்கும் மக்களை
தீண்டத்தகாதவர்கள் என்ற
ரீதியில் நொடுங்காலமாக ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றனர். உழைக்கும் வர்க்கம் ஒடுக்குமுறைக்கு முகம்
கொடுக்க முடியாது பல துன்பங்களை அனுபவித்து வந்திருக்கின்றனர். ஒடுக்குமுறைக்கு எதிர்ப்புகள் காட்டப்பட்டாலும் அவை மிருகத்தனமாக அடக்கப்பட்டன. அவர்கள்
எதிர்ப்புக் காட்டுவதை தவிர்த்து பணிந்து
சென்றிருக்கின்றனர். உழைக்கும் மக்களைச் சுரண்டுவதற்குரிய தத்துவத்தையும், அவர்களை
அடக்கிக் கொள்ள
படை பலத்தைக் கொண்ட
அதிகாரத்தையும் கொண்டு
வந்திருக்கின்றனர். ஒடுக்குமுறைச் சமுதாயத்தில் இருந்தாலும் தாழ்த்தப்பட்ட மக்கள்
தாம் ஏன் ஒடுக்கப்படுகின்றோம் என்பதற்கு முழுமையான விளக்கம் அவர்களுக்கே தெரிவதில்லை. அவர்களுக்கு தெரிவதெல்லாம் அவர்
பெற்றோர் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்திருக்கின்றனர், பாட்டன்,
முப்பாட்டன்களும் அவ்வாறே
இருந்திருக்கின்றனர். பரம்பரை
பரம்பரையாக ஐதீகத்தின் அடிப்படையில் என
விளக்கம் கொடுக்கப்பட்டு வந்திருக்கின்றது.
பெண்கள் மாதவிடாய் காலங்களிலும், ஒடுக்கப்பட்டவர்களும் கோயில்களுக்குச் செல்வது
தடை செய்யப்பட்டு இருக்கின்றது. ஒடுக்கப்பட்டோர் என்போர்
முற்பிறப்பில் செய்த
பாவத்திற்காக உயர்
சாதியினருக்கு ஊழியம்
செய்து முற்பிறப்பின் பாவங்களை போக்க வேண்டும் என்கின்றனர். குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்கள் சமூக நடவடிக்கைகளில் இருந்து அகற்றப்பட்டனர். ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பதற்கு பல தந்திரங்கள் கையாளப்பட்டன. தீட்டு என்பது பல
சமூக அம்சங்களில் பார்க்கப்படுகின்றது எனினும் இதில்
பாதிக்கப்படுவது ஒடுக்கப்பட்ட மக்களே. இந்த விடயத்தில் ஒடுக்கப்பட்டவர்களும் (சூத்திரரும்), பெண்களும் ஒரே வகையென பகவத்
கீதை போதிக்கின்றது.
தவிர்த்தல் (taboo) என்பது
துடக்காக சமூக
வளக்கத்தில் சமூகத்தில் இருந்து வந்திருக்கின்றது. தவிர்த்தல் என்பது
இயற்கையை ஒட்டிய
நிலையில் இருந்த
பொழுது அவை இயற்கை
விதிகளுக்குள் அடங்கியிருந்தது வரைக்கும் அவை
அடக்குமுறைக்கு உரியதாக
இருக்கவில்லை. தவித்தலுக்கு பொருளாதார நலன்,
பொருளாதார நலனுக்காக தெய்வத்தன்மை கொடுக்கின்ற போது ஒடுக்கு முறைக்குரிய ஒன்றான மாற்றம் பெறுகின்றது.
இந்த ஒடுக்கப்பட்ட சாதிகள்
நாளாந்த வாழ்வில் இருந்து ஒதுக்கப்பட்டு வந்திருக்கின்றனர். அரைமுதலாளித்துவ வளர்ச்சிக் காலகட்டத்தில் அமைந்து கொண்ட
உணவு விடுதிகளில் உணவு
உண்ண, கோவில்களுக்குச் செல்வது,
பொதுபாதையை பயன்படுத்துவது, கிணறுகளை பயன்படுத்துவன தடைசெய்யப்பட்டு இருந்தது. இலங்கை நிலவரத்தைப் பொறுத்தவரை ஒப்பிட்ட ரீதியில் தீண்டாமை கறுமையான இறுக்கமானதாக இருந்திருக்கவில்லை. இலங்கையில் பார்ப்பனிய ஆதிக்கம் இல்லை,
ஆனால் வடக்கில் வேளாளர்
ஆதிக்கமும் கிழக்கில் முக்குவர்களின் ஆதிக்கமும் இருந்திருக்கின்றது. நிலப்பிரபுத்துவச் (முதலாளித்துவ ஜனநாயகமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இதனை அரைநிலமானியம் எனலாம்) சிந்தனையான பார்ப்பணியம், சைவவேளாளம் (சைவம்- தமிழ்- வேளாளம்) என நிலமானியச் சிந்தனை அழைக்கப்படுகின்றது.
பிராமணர்- பிராமணியம் இரண்டும் வேறானவை. ஒன்று மக்கள் கூட்டத்தை குறிப்பதுடன் தம்மை உயர்ந்தவர்களாக கருதிக் கொள்ளும் மேலான்மை குடிகளாக தங்களை நிலைநிறுத்திக் கொள்பவர்கள். இங்கு பிராமணியம் என்பது சிந்தனை தன்னை உயர் குடியாக வைத்திருப்பது மாத்திரம் அல்ல சமூகத்தை வர்ணங்களாக பிரித்து வைத்து தாழ்ந்த உற்பத்தி சக்தியாக தொடர்ந்து வைத்திருப்பதன் ஊடாக தன்இருப்பை நிலைகொள்ள வைக்கின்றது. இவ்வாறான சிந்தனையை அனைத்து சமூகத்தின் படிமுறை எங்கும் விதைத்துள்ளது. சைவவேளாளம் (சைவம்- தமிழ்- வேளாளம்). பிராமணியம் என்ற சிந்தனை நிலப்பிரபுத்துத்தின் கடுமையானது வக்கிரத்தன்மை கொண்டதாகவும் இருக்கின்றது . மற்றைய நாடுகளில் இருந்த நிலப்பிரபுத்துவம் உழைப்பை வழங்குவதற்கான சுதந்திரத்தைக் கொண்டிருந்தது. இது வக்கிர சிந்தனையை தொடர்ந்து வைத்து தனிமனிதர்களின் தெரிவை மறுத்துள்ளது. இந்தச் சிந்தனையின் உதவியுடன் பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கத்தினர் திட்டமிட்டவகையில் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் காலங்காலமாக வதைபட்டு வந்துள்ளனர்.
வரலாற்றில் பார்ப்பான் என்பது பிராமணர்களை குறித்து நிற்கவில்லை. சங்க காலத்தில் சங்கறுக்கும் பார்ப்பான் என்று வருகின்றது. ஆக பார்ப்பான் என்பது Shaman- Shamanism - பேயாட்டி, வள்ளுவர், பரியாரி, வைத்தியர், குரு என்ற குலத் தலைவனுடன் சம்பந்தப்பட்டது. இங்கு பார்பணியத்தினையும் சாதியைக் கட்டமைப்பையும் தொன்மையாக்க புனையப்பட்டவைகளை எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை.
இங்கு சைவவேளாளம் என்பதற்குப் பதிலாக அரைநிலமானியம் என்பதுதான் பொருத்தமானதாக இருக்கின்றது. காரணம் பிறப்பின் அடிப்படையில் இருந்து மனிதர்களின் சிந்தனை தீர்மானிக்கப்படுவதில்லை. அது சமூகத்தின் வெளிப்பாடுகளில் இருந்துதான் சிந்தனைகள் தீர்மானிக்கப்படுகின்றது. குறிப்பாக கிழக்கு இலங்கையில் வேளாளர்கள் மட்டும் அங்கு ஆதிக்கச் சாதியாக இல்லை.
அங்கு முக்குவர் சமூகமும் இருக்கின்றது. ஆகவே
முக்குவ சமூகத்தின் சிந்தனையை எவ்வாறு
வரையறுத்துக் கொள்வது?
ஆக சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு என்பது
அரைநிலமானிய சிந்தனைக் கட்டமைப்பினுள் இருக்கின்ற போதும்
வலிந்தெடுத்த முதலாளித்துவ உற்பத்தி கூறுகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இன்றைக்கு ஆதிக்கச் சாதிகளாக இருந்தவர்கள் வரலாற்று ஓட்டத்தில் பொருளாதார வளர்ச்சின் ஊடாக ஆதிக்கத்தில் வந்தவர்கள். ஆதிக்கச் சக்திகளிடம் உழைப்பை விற்றவர்கள் அரைமுதலாளித்துவ பொருளாதார அமைப்பில் ஒடுக்கப்பட்டவர்கள் பொருளாதார நடவடிக்கைகளில் பங்கெடுக்கும் உரிமை
கொண்ட போதும் சாதியச்
சிந்தனை சமூகத்தின் அனைத்து தளத்திலும் உயிர் வாழ்ந்து கொண்டு
இருக்கின்றது. சாதிய
ஒடுக்குமுறையில் இருந்து
விடுதலை பெற
தலித்தியம் என்ற
கோட்பாட்டை இலங்கையில் அறிமுகப்படுத்த முனைகின்றனர். தலித்தியவாதிகள் சமூக
பொருளாதார அமைப்பினை விளங்கிக் கொண்டுள்ளார்களா என்று கீழே
பார்க்கப்பட இருக்கின்றது.
சமூகத்தின் உற்பத்தியான பிற்போக்குத் கருத்தியலே மக்களை அடிமை கொள்கின்றது. சாதியக் கருத்தியல் தொடர்ச்சியாக உயிர்வாழ்வது மதம், சாதி, குடும்ப
உறவுகள் முக்கிய
பாத்திரம் வகிக்கின்றது. முதலாளித்துவ பொருளுற்பத்திக்கான பாதுகாப்புக் கருத்தியல் பாதுகாக்கப்பட்டுக் கொண்டு
வருவதும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாளித்துவ உற்பத்தி முறை
உற்பத்தி செய்யும் ஊழியர்களும் தேவையான
வகையில் மறுவுற்பத்தி செய்யப்படுகின்றனர்.
ஆளும் அதிகார, உயர்வர்க்கத்தின் எப்பவும் குறிப்பிட்டளவு விகிதத்தினரே இருப்பார்கள். இன்று ஐரோப்பிய நாடுகளில் அரசபரம்பரைகள் இருக்கின்றன. அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்களில் ஒரு
பெரும் பகுதியினர் தம்மை
அரசவம்சத்தைச் சேர்ந்தவர்கள் என வரையறுத்துக் கொள்வதில்லை. அரச வம்சத்தில் இருப்பவர்கள் (பிரித்தானியா உதாரணமாக) பிரபுவம்சத்தில் திருமண
உறவு ஏற்படுகின்றது. ஆனாலும்
அவர்கள் தாம்
அரசவம்சம் என்று
கருதிக் கொள்வதில்லை. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரசவம்சத்தினர் இரத்த
உறவினராக இருக்கின்றனர். மரபுமாறாது இருப்பதற்காக அரச
வம்சத்தில் திருமணவுறவுகள் நடைபெற்றுக் கொண்டு
வந்திருக்கின்றது. அரச, அல்லது
குலச்சமுதாய காலத்து
தேவராளர், வேலன், கோடாங்கி, வள்ளுவர் (shaman) விரல்விட்டு எண்ணக்
கூடியவர்களே. இது
பெரும் தொகையாக இருக்க
மாட்டாது. ஆனால்
தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும் மன்னர்களான சேர,
சோழ,
பாண்டியர்கள் என்போரின் கொடிகளில் உள்ள
சின்னங்களை தங்கள்
சாதிக்குரியவர்களின் சின்னங்கள் என்று
உரிமை கொண்டாடும் நிலை
இருக்கின்றது. ஆளும்
அரசவர்க்கமும் இலட்சக்கணக்கான வெகுசனங்களும் ஒன்றல்ல. வரலாறு எங்கும்
ஆளும் ஆட்சியாளர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே.
இதே போல இலக்கியத்திற்குள் தமது குலத்தினைக் குறிக்கின்ற சொல்லாடால் இருக்கின்றதா என்பதையும் முன்வைத்து தமது பின்னணியைப் பற்றிய கருத்துக்களை புனைகின்றனர். இவ்வாறான புனைதல்கள் சாதியப்பிளவற்ற தமிழ் (nation) தேசத்தின் உருவாக்கத்திற்கு தடையாக இருக்கின்றார்கள். இங்கு வகுப்புவாதம் என்பது தேசத்தின் உருவாக்கத்திற்கு தடையானதே. ஆனால் இலங்கையில் தேசத்தின் உருவாக்கம் பெற்றிருக்கின்ற போதிலும், அதில்
இருந்து பின்னோக்கிய வளர்ச்சி கொண்ட
கோட்பாடான தலித்தியமும், இரட்டைத் தேசியம்
என்று சாதியவாதமும் முன்வைக்கப்படுகின்றது.
இனக்குழுமங்கள் தேசிய இனமாக
பரிணமிக்கின்றது இது சமூக வளர்ச்சிப் போக்கில் கருத்தியல்வாதம் என்பது இருக்க
முடியாது. இனக்குழுமங்கள் வர்ணாசிரமச் சிந்தனைக்கு அப்பாற்பட்டவையாகும். ஆனால்
வளர்ச்சிப் போக்கில் அவர்களும் பலியாவது
நடைபெற்றிருக்கின்றது.
தமிழகத்தில் தூய தமிழ் சாதிகளில் இருந்து தமிழ் தேசியம் உருவாக்க முடியும் என்று கற்பனாவாத, பிற்போக்குச் சிந்தனை முன்னிறுத்தப்படுகின்றது. ஒரு எல்லைகளில் ஒன்றுக்கு மேற்கட்ட தேசிய இனங்கள், இனக்குழுமங்கள் இருக்க முடியும். அந்த எல்லைப் பிரதேசத்தில் உள்ளவர்கள் ஒன்றுகலக்க முடியும். பல நூற்றாண்டுகளாக வாழும் மக்கள் தமிழ் நாட்டில் தமிழ் தேசிய இனத்துடன் பின்னிப் பிணைந்துள்ளார்கள். ஆனால் அவர்களின் சாதிய அடையாளத்தை தோண்டியெடுத்து அவர்களை நீங்கள் மற்றவர்கள் தாம் தான் தூய தமிழர் என்று பிரிவினை உண்டாக்கப்படுகின்றது. அதேவேளை ஒன்று கலக்க முடியாதவர்கள் தொடர்ச்சியாக தமது தாய்மொழியை பின்பற்றுபவர்களா இருக்கின்றார்கள். அவர்கள் குறிப்பிட்ட பிரதேசத்தில் மொழிச் சிறுபான்மையினராக இருக்கின்றார்கள். இது புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்கள் மொழிச் சிறுபான்மையினருக்கான உரிமையை பெற்று வாழ்கின்றது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறே தமிழகத்தில் தமிழ் தேசிய இனத்தினுள் உள்ளவாங்க முடியாதவர்கள் மொழிச் சிறுபான்மையினராக இருக்க முடிகின்ற என்ற ஜனநாயகப் போக்கை சாதிய- தேசியம் பேசுபவர்கள் அறிந்து கொள்ளாத நிலை ஒரு ஆபத்தான போக்காகும்.
No comments:
Post a Comment