Thursday, 25 August 2016

தலித்தியம் கற்பிப்பது தான் என்ன?






இடவொதுக்கீடு பற்றி
இன்றைய தலித்தியவாதிகள் இலங்கையில் புகுத்த நினைப்பது ஒன்றும் புதிதான சிந்தனை ஒன்றுமல்ல. இலங்கையில் தரப்படுத்தல் (Marginalization) என்பதன் ஊடாக நலிந்த மாவட்டங்களாகப் பிரித்து அங்கு பயிலும் மாணவர்களுக்கான பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கான புள்ளியில் முறைகள் மாற்றப்பட்டது.  ஆனால் அரசு தனக்குத் தேவையான உற்பத்திச் சக்தியின் வலுவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள போதிய கலாசாலைகளை உருவாக்கிக் கொண்டிருக்க முடியும்.  இவை மாத்திரம் இல்லை மக்களையே கூறு போட்டு பிரித்ததுஇதனால் கொதிப்படைந்த மாணவர்கள் போராட்ட நடவடிக்கையில் இறங்கினர்ஆனால் மற்றைய தமிழ் மாவட்டங்களான மன்னார், கிளிநொச்சி, வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாணவர்கள் இதன் மூலம் பயன் பெற்றனர். (அதேவேளை வடக்கு மாணவர்கள் பின்தங்கி மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து கல்வி கற்றதுடன் பல்கலைக் கழகமும் நுழைந்தனர்) இந்நிலையானது (உண்மையானது) பேரினவாத அரசின் அடக்கு முறையின் கொடுமையினால் மறைக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது.
தரப்படுத்தல் ( interpret ) பலமாதிரி வியாக்கியானம் செய்யலாம். அது michigan பல்கலைக் கழகத்தில் அல்லது தமிழகத்தில் இருப்பது போன்ற இடவொதுக்கீட்டுக் கொப்ப அரசியல் கொண்டதாக இருந்திருந்தால் ஆனால் அது அவ்வாறு அமையவில்லை. அது தமிழ் தேசத்தின் உருவாக்கத்தினை பின்னடிப்பது அல்லது வளர விடாது தடுப்பதில் இருந்து அமைந்து கொண்டதாகும்.
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற சலுகைகள் (ஜனநாயக உரிமை) மிகவும் கீழ் நிலையில் உள்ள மக்களுக்கு கிடைப்பதில்லை. உரிமைகள் சலுகை இருக்கின்றது என்பதை அறியாமலே பல லட்சக்கணக்காணவர்கள் உள்ளார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான இடவொதுக்கீடு என்பது இந்தியாவில் சட்டரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒடுக்கப்பட்ட சாதிகளில் உள்ள உயர்வர்க்கத்தவர்கள் தமது உயர்விற்காக அமைப்புக்களை உருவாக்கி கொள்கின்றார்கள்.
தமிழ்நாட்டில் பாட்டாளிமக்கள் கட்சி (ராமதாஸ்) புதியதமிழகம் (கிருஸ்ணசாமி)  கொங்கு, முக்குலத்தோர் அமைப்புகள் ஆகியோர் உயர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. இவர்கள் வெவ்வேறு சமூகப் பிரிவை தலைமை தாங்கினாலும் அவர்களுடைய அரசியல் என்பது சாதியச் சிந்தனையை, சாதிய வட்டத்திலான சமூக வட்டத்தில் இருந்து வெளிவராது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கின்றது. எனவே இவர்களின் வித்தியாசமானவர்கள், வர்க்க எதிரிகள் இல்லை என்று கருத முடியாது. ஒடுக்கப்பட்ட (அருந்ததியர், பறையர், பள்ளர் -மல்லர்) பிற்படுத்தப்பட்ட (வன்னியர், கள்ளர், தேவர்) ஆகிய சாதிகளில் உள்ள உயர் வர்க்கத்தவர்களே. இவர்கள் சாதியைக் காட்டி உழைக்கும் மக்களை கூறுபோட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
இலங்கையில தேசிய இனப் போராட்டம் என்பது உழைக்கும் மக்களை பிரிப்பதாக வரையறுப்பவர்களும் உண்டு. ஆனால் நிலப்பிரபுத்துவத்திடம் இருந்து  அடுத்த கட்டத்திற்கு நகர்வதும், தேசிய ஒடுக்குமுறையில் இருந்து தன்னை மீட்பது மாத்திரம் அல்ல ஒடுக்கும் தேசத்தின்  உழைப்பாளிகளின் விடுதலைக்கு உதவுவதும், தன்னை ஏகாதிபத்திய நுகர்த்தடியில் இருந்து விடுவிப்பததையும் நோக்காகக் கொண்டது. கருத்துமுதல்வாதம் என்ற வர்ணாசிரச் சிந்தனை என்பதும் தேசியமும் ஒன்றல்ல.
ஆனால் இவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களான விடுதலைச் சிறுத்தைகள்  பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகம் மற்றும் சக்கிலியர் சமூகத்தின்  அமைப்பு ரீதியாக வெளிப்பாடுகள் ஒன்றுபடுத்த முடியாது எனினும் விடுதலைச் சிறுத்தைகள் என்பதும் அந்த சமூகத்தில் உள்ள உயர் வர்க்கத்தையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
இங்கு மிகவும் ஒடுக்கப்பட்டசமூகமாகிய சக்கிலியர்களுக்கான இடவொதுக்கீட்டை அவர்கள் மேல் உள்ளவர்கள் என்று பிரகடனப்படுத்தும் சமூகங்கள் படிமுறைவளர்ச்சியில்
இலங்கையில் தன்னியல்பு (அடையாள) அரசியல் முன்னெடுக்கும் சக்திகள் தமிழ் பேசும் இஸ்லாமிய, மலையக அரசியல்வாதிகளிடம் இருக்கின்றது.  இவர்களுடன் தற்பொழுது தன்னியல்பு (அடையாள) அரசியலை மேற்கொள்ள முள்ளிவாய்க்காலின் பின்னர் வேகமாக தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுகின்றார்கள். இவர்கள் தமிழ் தேச (nation) அடையாளத்தை அழிக்கும் நிலைப்பாடுகளை மேற்கொள்கின்றார்கள். இந்தச் சக்திகள் சோற்றுடன் அரசியல் உரிமையை ஒப்பிடுகின்றார்கள். ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கின்ற ஜனநாயக உரிமையை மிக மலிந்த நிலைக்கு  இன்றைய அரசியல்வாதிகளை இட்டுச் செல்கின்றனர். தலித்தியவாதிகள் அடையாள அரசியலை மேற்கொள்ளும் அல்லது தலைமை தாக்கும் அரசியல்வாதிகளின் நலன் வேண்டுமென்றால் பூர்த்தி செய்யப்படும். ஒடுக்கப்பட்டவர்களில் உள்ள உழைக்கும் வர்க்கத்தவர்கள் மீளவும் அடக்கியொடுக்கப்பட்டே இருப்பார்கள்.
சீர்திருத்தத்தின் ஊடாக உரிமையைப் பெற்றுக் கொள்வதும் மக்களுக்கான ஜனநாயக உரிமை என்பதையும் கவனத்தில் எடுத்தல் வேண்டும். ஆனால் மானியம், இலவசம் என்றே மக்களை சிந்திக்க வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  மக்கள் நலன்புரி அரசு (welfare state) உறுதி செய்யப்பட வேண்டிய முதலாளித்துவ ஜனநாயகம் என்பதை மக்களுக்கு கொண்டு செல்ல எவரும் தயாராக இல்லை. முதலாளித்து நிறுவனக் கட்டமைப்பில் இரகசியக் காப்பு (confidential - Privacy protection)  ஏற்படுத்திக் கொள்ள முடியாத குறைவிருத்தி முதலாளித்துவ நிறுவனக் கட்டமைப்பில் சாதிகளின் அடையாளம் என்பது தொடர்ச்சியாக பேணப்பட்டு வருகின்றது. இவ்வாறாக மாற்றத்தை கூட இருக்கின்ற சமூக அமைப்பினால் மாற்றத்திற்கு கொண்டு வர முடியாது. இடவொதுக்கீடு, நலிந்தவர்களுக்கான மானியம், கொடுப்பனவுகள் என்பது சாதியக் கட்டமைப்பை தொடர்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டு இயங்குவது என்பது முதலாளித்துவ ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்றது.
உற்பத்தி சக்தி (உழைப்பாளிகள்) யின் தரத்தினை உயர்த்த வேண்டும் என்றால் அதிகாரம் என்பது அவசியமானதாகும். அந்த அதிகாரம் என்பது உற்பத்திச் சக்திகளிடம் இல்லை. முதலாளித்துவம் எப்பவும் மிகை உழைப்பாளிகளை வைத்திருக்கவே விரும்புகின்றது. மிகை உழைப்பாளிகளை வைத்திருப்பதன் ஊடாக கூலி நிர்ணயம், உறுதியான ஊழியர்களின் நடத்தை (தொழிற்சங்க உறுப்பினராவதை மட்டுப்படுத்துவது),  போட்டிச் சந்தை போன்றவற்றை உற்பத்தி சாதனத்தைக் (முதலாளி) உரிமையாக் கொண்டவர்கள் வைத்துள்ளார்கள். இதனால் பெரும்பான்மை உற்பத்தி சக்தியின் வளர்ச்சி என்பது தரப்படுத்தலுக்கு உட்பட்டே இருக்கும். சீர்திருத்தம் (இடவெதுக்கீடு உட்பட)  பின்னால் இருக்கும் கயமைத்தனம் சமூகத்தின் (உற்பத்தி சக்திகள்) வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியாது. இதனால் வறியவர்கள் வறியவர்களாகவும், வசதிபடைத்தவர்கள் மேலும் வசதிபடைத்தவர்களான நிலையே இருக்கின்றது. இதில் வசதிபடைத்தவர்கள் சலுகைகளை மேலும் அனுபவிப்பவர்களாகவே இருக்கின்றனர்.
அரசினால் உறுதிப்படுத்தப்பட்ட (இடவொதுக்கீடு) முதலாளித்துவ ஜனநாயக உரிமையைக் கூட முழுமையாக பெற்றுக்; கொள்ள முடியாது ஒதுக்கப்பட்டவர்கள் உள்ளார்கள். இதற்கு அரச நிறுவனங்கள் (institutions)  போதியளவு முதலாளித்துவ தரத்திற்கு வளர்ச்சிடையாத நிலையும் ஒரு காரணமாகும். இதனை எதிர்த்துப் போராடுவதற்கு  முழுத்தகுதியும் உள்ளவர்கள் பொதுவுடமைவாதிகளேயாகும். இடவொதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை தீர்க்க முடியாத நிலையில் தான்  முதலாளித்துவ அரசு இயந்திரம் உள்ளது.
சலுகை அரசியலை இலங்கையில் புகுத்த முனைபவர்கள் சமூக அமைப்பை  உள்வாங்கவில்லை. ஏற்கனவே தமிழ் தேசம் தனக்கான உரிமை நோக்கி போராடுகின்றது.  தேசியயினத்துவ அடையாளத்தை  முன்னிறுத்தி பௌத்த - பேரிவாத சிந்தனையில் தன்மை முன்னிறுத்தி ஆட்சி செய்யும் அரசமைப்பு யாருக்கும் உரிமை கொடுக்கப்போவதில்லை.
எந்த வகையான முரண்பாடானாலும் அதன் குறித்த தன்மையைப் (தனிஇயல்பு - particurlarity) பற்றி ஆராயும் பொழுது அது பருப்பொருளின் இயக்க வடிவம் ஒவ்வொன்றிலுமுள்ள முரண்பாடு, அதன் வளர்ச்சிப் போக்குகள் ஒவ்வொன்றிலுமுள்ள முரண்பாடு, ஒவ்வொரு வளர்ச்சிப் போக்கிலுமுள்ள முரண்பாட்டின் இரு கூறுகள், வளர்ச்சிப் போக்கின் ஒவ்வொரு கட்டத்திலுள்ள முரண்பாடு, ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள முரண்பாட்ன் இரு கூறுகள் - எனப் பல்வேறு வகையானதாக இருக்கலாம். எந்த வகையான முரண்பாட்டினுடைய தனி இயல்ப்பைப் பற்றி ஆராயும் போதும் இம்முரண்பாடுகள் அனைத்தின் சிறப்பு இயல்புகளைப் பற்றி ஆராயும் போதும். நாம் மனதிற் தோன்றுகிறபடி நடக்கும் அகநிலைப் போக்குடையவர்களாவும் தன்னிச்சைப் போக்குடையவர்களாகவும் இருக்கக் கூடாது. அவற்றை நாம் பருண்மையாக ஆராய்ந்தறிய வேண்டும் பருண்மையான பகுப்பாய்வு இன்றி, எந்தவொரு முரண்பாட்டின் குறிப்பிட்ட தனி  இயல்பு பற்றியும் நாம் அறிந்து கொள்ள முடியாது. லெனினின் சொற்களை எப்போதும் நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும். அவை பருண்மையான நிலைமைகளைப் பருண்மையான முறையில் பகுந்தாய்வு செய்ய வேண்டும் என்பனவாகும். (மாவோ)


சாதியெதிர்ப்புப் போராட்டம்-
பழைய உற்பத்தி முறைக்குப் பொருந்தாத சமூக உறவுகளில் உள்ள ஜனநாயகக் உரிமையை கோரிய இயக்கம் உருவாக்கம் பெறுகின்றது. இதில் சாதியத்திற்கு எதிரான கருத்துக்களை கேரளாவில் நாராயணன், தந்தை பெரியார், அம்பேத்கார், அயோத்திதாஸ் பண்டிதர், எம்;.சி.ராஜா,  இரட்டைமலை சீனிவாசன் போன்ற பலதலைவர்கள் கொலனித்துவ காலத்தில் குரல் கொடுத்து வந்துள்ளனர். நாட்டில் வளர்ந்து வந்த பொருளாதார அமைப்பில் சாதாரண சட்ட, ஜனநாயக உரிமைகள் கிடைக்காத நிலையிலும் எழுந்த குரல்களே.  இவர்களின் குரல்கள் வர்க்க ஒற்றுமை, வர்க்க முரண்பாடு, வர்க்கப் போராட்டம் பற்றிய புரிதல்கள் மார்க்சியத்தினை கொண்டதாக இருந்திருக்க முடியாது.  இதனால் சமூக மாற்றத்தின் மூலமே முடியும் என்ற மார்க்சீய அறிவியல் போதனை அவர்களிடம் இருக்க வில்லை.
வடக்கில் சாதியெதிர்ப்பும் போராட்டத்தை இளைஞர் காங்கிரஸ் நடத்தி வந்துள்ளது. இவர்களின் தொடர்ச்சியாக தனிப்பட்ட மனிதர்களாகவும், பல சமூகத்தவர்களும் அடக்குமுறைக்கு எதிரான தன்னியல்பாக பல போராட்டங்களை நடத்தியிருக்கின்றார்கள்.  வடக்கில் இருந்து இளைஞர் காங்கிரசின்கோரிக்கைகள், முன்னெடுப்புக்கள் என்பது முதலாளித்துவ ஜனநாயக வடிவத்திற்கு அப்பால் இருந்திருக்கப் போவதில்லை. ஏனெனில் ஒரு கட்டத்திற்கான பொருளாதார அமைப்பு வளரவோ அல்லது முற்றாக மாற்றத்திற்கு உள்ளாகியோ இருந்திருக்கவில்லை.  இங்கு இவர்களிடம் தேசிய இனப்பிரச்சனை பற்றிய புரிதல் என்பது இருந்திருக்கவில்லை. இவர்கள் லெனின் கூறுகின்ற தேசிய இயக்கங்கள்  உருவாகும் என்பது ஏகாதிபத்திய காலத்திற்கானது.  -----In these countries the bourgeois-democratic movements have either hardly begun, or are far from having been completed. - இந்த நாடுகளில் முதலாளித்துவ - ஜனநாயக இயக்கங்கள் அநேகமாகத் தொடங்கவில்லை அல்லது அவை இன்னும் நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது.- 1916களில் லெனின் எழுதினாலும் இங்கு தேசிய இனங்கள் தேசங்களாக வளரும் என்பதைத் வெளிப்படுத்துகின்றார்.  அதாவது முதலாளித்துவ - ஜனநாயக இயக்கங்கள் அநேகமாகத் தொடங்கவில்லை அல்லது அவை இன்னும் நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது என்கின்றார். இதனால் இளைஞர் காங்கிரசின் கோரிக்கைகளை முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு அப்பால் இருந்திருக்க முடியாது.
சாதிய அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் சாதிச் சண்டை என்ற வரையறைக்குள் நிகழ்ந்தும் உள்ளது.  இந்தக் காலத்தில் அகதிகளாக இடம்பெயர்ந்த சம்பவங்கள் உண்டு. இவ்வாறான நிகழ்வுகள் பற்றி முழுமையான ஆவணப்படுத்தல்கள் இல்லை எனலாம்.  சாதிய எதிர்ப்புப் போராட்டம் 1966 களின் பின்னான காலத்தில் அமைப்பு வடித்தினுள் வந்துள்ளது.

சாதிய எதிர்ப்புப் போராட்டம் பல வர்க்கங்களை உள்ளடக்கிய சாதிகளைக் கொண்டே சாதிய எதிர்ப்புப் போராட்டம் நடை பெறவேண்டும். சாதிய எதிர்ப்புப் போராட்ட காலத்தில் சாதிய எதிர்ப்புப் போராட்டமே உயர்சாதிகளுக்கு எதிரானதாக காட்டி சாதியச் சக்திகள் போராட்டத்தில் அனைத்து வர்க்கங்களின் ஒற்றுமையை உடைத்தனர். இவ்வகையான பிரிவினை முயற்சிகள் நடை பெறவே தான் செய்தது. ஆதிக்க சாதிகளுக்கு எதிரான போராட்டம் என்பது ஆதிக்க கருத்தியலுக்கும், அது அமைத்துக் கொண்டுள்ள சுரண்டும் பொருளாதாரச் சிந்தாந்தத்திற்கும் எதிரானதாகும். இன்றைக்கு உயர்சாதிகள் எனப்படுபவை எல்லோரும் சுரண்டும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கொள்ள முடியாது. எனவே சுரண்டும் வர்க்கத்தையும், சுரண்டும் வர்க்கத்தின் சந்தர்ப்பவாத சாதியப் பற்றையும் அம்பலப்படுத்தி அனைத்துச் சாதிகளின் ஒடுக்கும் வர்க்கங்களையும் ஒன்று சேர்ந்து சாதிய எதிர்ப்புப் போராட்டங்களை கொண்டு நடத்துதல் வேண்டும்.
பற்பல வர்க்கப் பிரிவினரும் இணைந்து கொண்ட சாதியெதிர்ப்புப் போராட்டம் இலங்கை வரலாற்றிலே பொண் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய காலமது. இது 1966களில் முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய முன்னணி ஊடாக போராட்டம் வழிநடத்தப்பட்டதேயாகும். இந்த தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தினை 1966களில் உயர்ந்த சித்தாந்தம் வழிநடத்தியது.  1980களில் இந்தியாவில் சாதியயொடுக்குமுறைக்கு எதிரான ஜனநாயக் கோரிக்கையை முன்வைத்து சாதிய அமைப்புக்கள் உருவாகிக் கொண்டன. ஆனால் அவ்வாறான பரந்துபட்ட நிலை என்பது இலங்கையில் ஏற்படவில்லை.

ஆண்டாண்டு காலமாக சாதிய ஒடுக்கு முறைக்கு உள்ளானவர்கள் தமது ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடினர். இப்போராட்டம் குறிப்பிட்ட வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. ஆனாலும் குறைவிருத்தி கொண்ட முதலாளித்துவ அமைப்பினுள் இடம்பெற்ற இப்போராட்டமானது முழுமையான வெற்றிக்கு இடமளிக்காது போய்விட்டது. 1966களில் சாதியெதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற வேளையில் தமிழ் (தரகு ) பூர்சுவாக்கட்சிகள் ஆமை தலையைச் சுருக்கி கொள்வது போல் சுருக்கி கொண்டனர். (சிலர் தனிநபர்களாகப் பங்கு கொண்டனர்) தமிழ் பூர்சுவாக் கட்சிகள் முழுமையான சாதிய எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளாது தமது வர்க்க நிலையை பாதுகாத்துக் கொண்டனர். தமிழ் கட்சிகளில் தலைமை வகித்தவர்களில் அதிகமானவர்கள் உயர்சாதி எனக் கருதப்பட்ட நிலப்பிரபுத்துவக் குடும்பங்களில் இருந்தவர்களே. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் உயர்கல்வி பெற்றவர்கள் அதிலும் இவர்கள் வக்கீல்களே. தமிழ் அரசியல் வரலாற்றை எடுத்துக் கொண்டால் வக்கீல் அரசியல் நடைபெற்றது என்பதை அறிந்து கொள்ளலாம். ஒடுக்கும் சாதியத்தின் ஆளும் வர்க்கம் தன்னை  சாதியெதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுப்பதில் இருந்து தவிர்த்துக் கொண்டது. ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரை சில மாற்றங்கள் செய்யப்படுவதை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ ஆளும் வர்க்கத்திற்கு பாதகமானதே. பொருளாதார ஆளும் வர்க்க நலநன பாதுகாக்கும் உபாயத்தின் அடிப்படையிலே நாடாளுமன்ற தேர்தலில் நியமனம் செய்யும் போது கவனத்தில் கொண்டனர். உதாரணமாக திரு. இராசலிங்கம், மன்னார் திரு. சூசைதாசன் ஆகியோரைக் கண்துடைப்புக்காக தேர்தலில் நிறுத்தினர். 1980களில் திரு. கரிகாலன் நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் போட்டியில் திரு. நீலன் திருச்செல்வத்திடம் தோற்றும் கொண்டார். 2013இல் நடந்து முடிந்த வடக்கு மாகாணசபை தேர்தலை நோக்குமிடத்தில் பிரதேசவாரியாக தெரிவு செய்யப்பட்டவர்களில் சாதி, மதம் என்பன வேட்பாளர்களை தெரிவு செய்வதில் நிகழ்ந்தது என்பதை மறுக்க முடியாது.

1966களில் முறைகளை முதன்மைப்படுத்தில் தோழர் சண்முகதாசன் தலைமையில் கொம்யூனிஸ்ட்டுக்கள் போராட்டத்தினை நடத்தினார்கள். கொம்யூனிஸ்ட்டுக்களினால் நடத்தப்பட்ட போராட்டம் என்பது பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது.   இங்கு வர்க்கச் சமூகத்தை தாங்கி நிற்கும் உற்பத்தி முறையை மாற்றியமைக்கப்படாத போராட்டமுறையானது அதன் சிந்தனைத் தளத்தில் முழுமையான மாற்றத்தை கொள்ள வைக்க முடியவில்லை. ஜனநாயகத்திற்கான வேலைமுறைகள் என்பது நீண்ட வெற்றியை கொள்ள வைக்கப் போவதில்லை. இதுவேதான் இலங்கையிலும் நடைபெற்றது. மக்களின் அகநிலை உணர்வுகளை மாற்றத்தைக் கோரி போராடுகின்ற போது புறநிலையை மாற்றும் (உற்பத்தி முறை)சக்தியை நோக்கியதாக இருக்க வேண்டும்.  ஏனெனில் அடிக்கட்டுமானத் தான் தீர்க்கமானதாக இருக்கின்றது. சாதியப் போராட்ட வழிமுறையானது மக்களின் உணர்வையும், வாழ்க்கை முறையையையும் மாற்றக்கோரி போராடப்பட்டது. இவை ஒரு எல்லைக்கு அப்பால் செல்லமுடிவதில்லை. இங்கு தனிமனிதர்கள் மாறவேண்டும் என்று கோருவது கூட நகைப்பிற்கு இடமானதாகும். ஒரு கட்சியில் இருக்கும் உறுப்பினர் அந்த அமைப்பு விதிகளுக்கு கட்டுப்பட வேண்டியவர்கள். ஆனால் அதேபோல மக்களை சிந்தனையில் இருந்து அகற்ற வேண்டுமானால் சிந்தனைத் தளத்தில் போராட்டம் இடம்பெறவேண்டும். சிந்தனை இரண்டு வகையானது சாதி-மதமாகும் ஒன்றை விட்டு ஒன்றை அகற்றமுடியாது. உற்பத்திமுறையை மாற்றியதன் பின்னரே முழுமையாக மாற்றம் சாத்தியமாகும். அதன் பின்னரே உடனடியாகவே அல்லது சிறிது தாமதித்தோ மாற்றங்கள் ஏற்படுகின்றன. அது பழைய சிந்தனையை கடன் தீர்த்துக் கொள்ளவும், வர்க்க உணர்வை ஊட்டி வர்க்கப் போராட்டத்தை ஒழுங்குபடுத்து முகமான வேலை அணுகுமுறைகளையும், நடைமுறை வேலைத்திட்டத்தையும் அமைத்துக் கொள்ளுதல் அவசியமானதாகும். ஆனால் இன்றையக் காலத்தில் இந்தியாவில் தோல்விகண்ட தலித்திய, விழிம்புநிலைக் கோட்பாடுகள் திணிக்கப்படுகின்றது. இதிலும் விரல் விட்டு எண்ணக் கூடிய சில நபர்களுக்காக ஒரு பாழடைந்த கோட்பாட்டுச் சமரசம் செய்யப்படுகின்றது. சாதியெதிர்ப்புப் போராட்டம் என்பது 1966களில் படிப்பினையைக் கொண்டு அதே பாதையில் கட்டியமைப்பது தான் புரட்சிகரமான சாதிய எதிர்ப்புப் போராட்டமாக அமையும். அங்கு ஒடுக்கப்பட்டவர்கள், ஜனநாயக சக்திகள், புரட்சிகர சக்திகள் இணைந்த போராட்டமே சிறந்ததாகும்.


முடிவாக...
இனவாதம் தொடர்பான மாநாடு தென்னாபீரிக்காவில் நடைபெற்ற போது 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிக் கொண்டனர். இதில் குறிப்பிடத்தக்கவர்களாக பிடல் காஸ்ரோ, ஜெசி ஜக்சன், கோபி அன்னன், மக்காபே போன்றோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் இறுதி அறிக்கை தொடர்பாக இழுபறிப்பட்டிருந்த வேளையிலும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்திருந்த பிரேரனை பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநாடும் முடிவுற்றது. இந்த மாநாடு தன்னார்வம் கொண்ட நிலையில் அமைந்து கொண்டிருந்த போதும் இதன் உள்ளடக்கத்தினை அறிந்து கொள்வது முக்கியமானதாக அமைந்துள்ளது.
1975ம்  ஆண்டு பலஸ்தீனத்தில் இஸ்ரேல் அரசை உருவாக்குவது என்ற யூதக் கொள்கையை இனவாதத்திற்கு ஈடான சிந்தனை என்று தீர்மானத்தில் நிறைவேற்றியிருந்தனர். 1990ம் ஆண்டு  .நாவின் சாசனத்தில் இருந்து மேற்கூறிய தீர்மானமானது நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவில் இருக்கும் சாதியானது இனவாதத்திற்கு சமமானது என தீர்மானம் கொண்டு வரும்படி கோரிக்கை விடப்பட்டன.

சியோனிசத்தை இனவாதத்திற்கு சமமாக இணைத்துப் பார்ப்பதை எதிர்த்தும், இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிரான பிரேரனை நிறைவேற்றப்படுதை எதிர்த்துக் கொண்டு வெளியேறினர். இந்த வெளியேற்றத்திற்கு ஒரு வரலாற்று ரீதியான விளக்கம் இருக்கத்தான் செய்கின்றது. அமெரிக்க தேசம் என்பது மதச்சார்பற்ற ஒரு தேசம் என்றாலும் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவ மார்க்கத்தை பின்பற்றுபவர்கள். அவர்களுக்கு விலிலியம் ஒரு புனித நூலாகும். இதனால் அதில் உள்ளவை எல்லாம் உண்மையானவையாகும். விவிலியத்தின் அடிப்படையில் கொண்ட உலகக் கண்ணோட்டம் என்பது ஆளும் வர்க்கத்தின் உலகக் கண்ணோட்டமாக அமைந்து கொண்டதினால் தமது உலகக் கண்ணோட்டத்தையே எதிர்த்துக் கொள்வார்களா?

2001 இல்நடைபெற்ற மாநாட்டில் இந்தியாவில் இருக்கும் சாதியானது இனவாதத்திற்கு சமமானது என தீர்மானம் கொண்டு வரும்படி கோரிக்கை விடப்பட்டன. இந்தக் கோரிக்கை இந்தியாவினால் எதிர்க்கப்பட்டது. இவ்வாறான கோரிக்கைகள் மனிதவுரிமை என்ற நிலைப்பாட்டில் ஊக்குவிக்கப்படுகினறது. இத்தகைய கருத்தை முன்னிறுத்தில் 2013 லண்டனின் சாதியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இங்கு கவனத்தில் எடுத்தல் நன்று. (இவர்களை குற்றம் சுமத்தவில்லை, ஆனால் இவ்வாறே தன்னியல்பான போராட்டங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.)

அரசியல் நகர்வுகள் கட்டமைப்பில் சீரமைப்புத் திட்ட (structural adjustment programs)   நிகழ்ச்சிக்கு உட்பட்டவையாகவே இருக்கின்றது. இங்கு கட்டமைப்பில் சீரமைப்புத் திட்ட (structural adjustment programs) நிகழ்ச்சிக்கு ஒப்ப குறைந்த வட்டியின் கடன் கொடுப்பது,  வறுமைக் கோட்டைக் குறைப்பது, சந்தைப் பொருளாதாரம், சந்தைக்கான பொருட்களை உற்பத்தி செய்வது என்பது மாத்திரம் அல்ல. சிந்தனையை ஓட்டத்தினை அதற்கொப்ப வளர்த்தெடுப்பதும் ஆகும். இவ்வாறான மனிதஉரிமை மீறல் தொடர்பான ஆதாரங்களை வைத்துக் கொண்டு அரசியல் எழுச்சியை தடுத்து நிறுத்தம் வேலைகளையே வல்லரசுகள் செய்கின்றது.
முதலாளித்துவத்தினை பாதுகாக்கும் பொருட்டு உலக வர்த்தக வலையத்தினால் கட்டமைப்பில் சீரமைப்புத் திட்ட (structural adjustment programs) நிகழ்ச்சிக்கு ஒப்ப வேலைப்பிரிவினையில் செயற்படுகின்றது. அதாவது முதலாளித்துவ பொருளாதார அமைப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு பற்பல நிறுவனங்கள் பல்வேறு வகையான வேலைப்பிரிவினையை கொண்டு செயற்படுகின்றார்கள்.
பொருளாதாரத்தை மாற்றியமைக்கக் கூடிய புரட்சிகள் வெடிப்பதை தவிர்ப்பதும் அதன் நிபந்தனையில் இருந்து பல வழிகளிலும் செயற்பட்டுக் கொண்டுள்ளனர், ஆகவே சமூகமாற்றத்தையும், வர்க்க விடுதலையையும் வேண்டி நிற்பவர்கள் வெகுநிதானமாக கற்பதும் கற்பித்தலிலும் ஈடுபடுதல் அவசியமானதாகும். இலங்கையில் தொலைக்காட்சியில்உரிமைகளும் வளங்களும் அனைத்து இனங்களுக்கும் சமமாக கிடைப்பதை உறுதிப்படுத்தப்படுவதே சகவாழ்விற்கு அடித்தளமிடும்.” சமரசம் என்ற தொனிப்பொருளில் கலந்துரையாடல் நடைபெற்றது. இது கூட ஒரு பயிற்சிப் பட்டறைதான். இவ்வாறான செயற்பாடுகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், ஊடகங்களும் அதன் பங்கிற்கு செயலாற்றுகின்றன.
அரசியல் நீங்கம் செய்யப்படும் ஒரு வேலைமுறையின் கீழ் நடத்தப்படும் ஒரு சிந்தனை வெளிப்பாடு. இங்குதான் ஏக போக முதலாளித்துவத்தையும், வளங்களையும், சந்தையையும் பாதுகாத்துக் கொள்ள பலாத்கார (ஆக்கிரமிப்பு), மென்மை தன்மை என இரண்டு வழிகளிலும் செயற்படுகின்றது. மென்மைப் போக்கினை தன்னுடைய சர்வதேச நிறுவனங்கள் ஊடாக செயற்படுத்துகின்றது.
வரலாற்றில் சமயம் கூட பொருளாதார உற்பத்தி முறைக்கு துணைபுரிந்துள்ளதை இங்கு கவனிப்போம். 'ஆனால் ஒப்ந்தங்களைச் செய்து முடிக்க வேண்டும் என்றால் தம்மையும் தமது செய்கைகளையும் உடமைகளையும் சுதந்திரமாகக் கையாளக் கூடிய நபர்கள் ஒருவருக்கு ஒருவர் சமத்துவ நிலையில் உள்ள நபர்கள் முதலில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சுதந்திரமான” 'சமத்துவமானமனிதர்களைப் படைப்பதே முதலாளித்துவ உற்பத்தியின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஆரம்பத்தில் இது அரை உணர்வுள்ள முறையில்,  மதவேடத்தில் நடைபெற்றாலும் லூதர் மற்றும் கால்வினுடைய மதச் சீர்திருத்த காலத்தில் இருந்து இது கோட்பாடாக உறுதிப்பட்டது.”

இந்தச் சமூக அமைப்பில் தன்னார்வ, அடையாளப் போராட்டம், மனித உரிமைப் போராட்டம் என்று தன்னியல்பு சார்ந்த அமைப்புகள் குறிப்பிட்ட விடயங்களில் ஆர்வம் கொள்ளும் அமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றது. குறிப்பாக வெளிநாடுகளின் உதவியைப் பெற்று உருவாகும் அமைப்புக்களும் இருக்கின்றன. தலித்தியம் கட்டமைப்பில் மாற்றத்தையோ அல்லது கட்டமைக்கப்படும் கருத்தியல் தளத்தினையோ மாற்றத்தினைக் கோரி நிற்பதில்லை. தலித்தியம் இருக்கின்ற சமூகக் கட்டுமாணத்தில் இருந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உயர்வர்க்கத்திற்கான ஜனநாயகத்தைக் கோருகின்றது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் உள்ள உழைக்கும் வர்க்கத்தவர்களை சாதியின் பேரால் அழைப்புவிடுத்து வர்க்க பேதத்தினை மறைத்துக் கொண்டு சாதியினை முன்னிலைப்படுத்தி சாதிவாரியாக அணிதிரட்டிக் கொள்கின்றது. சமூகத்தின் உளவியல் கருத்தாக்கத்தை அறிவது எவ்வளவு முக்கியமோ அதே போல அடிப்படை கட்டமைப்பில் இருந்து நோக்குதல் வேண்டும்.

கொம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டலில் இருந்து வழிதவறிய அமைப்புக்கள் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டதினால் பெற்றுக் கொண்ட ஜனநாயக உரிமையுடன் திருப்தி கொண்டனர். ஆனால் சாதியச் சிந்தனை என்பது பொருளாதார உற்பத்தி முறையில் முழுமையாக மாற்றம் கொள்ளவைப்பதன் ஊடாகவே நிரந்தரமாக வெற்றி கொள்ள முடியும் என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அரசியல் நீங்கம் செய்யப்படும் செயற்பாடுகளை முறியடிப்பது இடதுசாரிகளுக்கு உள்ள பெரும் சவாலாகும். சமூக மாற்றம் என்பது பொருளாதார அமைப்பை மாற்றியமைப்பதை இலக்காகக் கொண்டது. மக்களை அரசியல்மயப்படுத்துவது, புதிய கலாச்சார விழுமியங்களை போதிப்பது என்பது  சமூக கட்டமைப்பில் சீரமைப்பு முறைக்கு ஒத்ததாக இல்லாது உற்பத்தி சாதனத்தை கைப்பற்றுவதற்கான போராட்ட இலக்காகும். இதுவே இடதுசாரிகளின் முன்னால் உள்ள பெரும்சவாலாகும்.
லெனின்தன்னியல்பான அம்சம் என்பது கருவடிவத்திலே இருக்கும் உணர்வைத் தவிர வேறில்லை.” ( 47 என்ன செய்யவேண்டும்- லெனின்) எமது உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகளைச் செயற்படுத்தும் செயல் வடிவமாகும். இது சமூகத்தின் கட்டுமானம்  எதையும் அசைக்காது. (கட்டுமானம் என்றால் என்ன) மாறாக வெறும் சீர்திருத்தத்தைக் கோருவதாகத் தான் இருக்கும். இதற்கு மாறாக தன்னியல்பைத் தவிர்த்த சரியான அரசியல் வழியில் இந்த போலிச் சமூகத்தை ஈடாட்டம் கொள்வைக்கக் கூடிய அனைத்து மக்கள் போராட்டங்களையும் தலைமைப் பாத்திரம் எடுத்து நடத்துவதும், தன்னியல்பாக எழுகின்ற போராட்ட வடிவங்களுக்கு சரியான அரசியல் வழிகாட்டியாக வேண்டியதுடன் அதனை புரட்சிகர அமைப்பிற்குள் உள்வாங்குவதும் ஆகும். அதேவேளை எமது எதிரியை அரசியல் ரீதியாக எந்தெந்தச் சந்தர்ப்பங்களில் ஈடாட்டம் கொள் வைக்க முடியுமோ அந்த அனைத்து சந்தர்ப்பங்களையும் அமைப்புப் பயன்படுத்தும் பிரச்சாரம் கிளர்ச்சி நடத்துவது முதன்மையான விடையமாகும். எப்போ ஒரு நடவடிக்கை ஒரு புரட்சிகர ஸ்தாபனக் கோட்பாட்டைக் கொண்டு, மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு நடைபெறாவிடின் தன்னியல்பாகவே இருக்கும். அதே வேளை ஒரு ஸ்தாபனம் புரட்சிகரக் கோட்பாட்டில் அமைந்து தனது இறுதி நோக்கை அடிப்படையாகக் கொண்டு தனது செயற்பாட்டினை செய்யும் போது அது  சரியான  பாதை கொண்ட வடிவத்தைப் பெறுகிறது.



உசாத்துணை:
பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1994ம் ஆண்டு 'தமிழ்நிலம்' இதழில் 'ஆதிதிராவிடன் என்பது வரலாற்று பிழை!' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி.  'சாதி ஒழிப்பு' என்னும் நூலில் தொகுக்கப்பட்டது பாவலரேறு பெருஞ்சித்தனார்

http://velanவேலன்.blogspot.no/2016/01/blog-post_28.html சாதியம் பற்றி மேலும் வாசிக்க

No comments:

Post a Comment