Thursday, 25 August 2016

மார்க்சிய அணுகுமுறையின் அடிப்படைகள்- ‪



மார்க்சிய அணுகுமுறையின் அடிப்படைகள்-
இயக்கவியல் - பொருள்முதல்வாதம்
இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான ஒருதலைப்பட்சமில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கி விவரிக்கும் போதனையாகும். நிரந்தரமாக வளர்ச்சி பெற்ற வண்ணமுள்ள பருப் பொருளை நமக்கு பிரதிபலித்துக் காட்டும் மனித அறிவின்சார்பு நிலையைவலியுறுத்தும் போதனையாகும். ரேடியம், மின்அணுக்கள் தனிமங்களில் ஒன்று மற்றொன்றாக மாறுவது -– இவை போன்ற இயற்கை விஞ்ஞானத்தின் மிக நவீன கண்டுபிடிப்புகளெல்லாம் .மார்க்ஸின் இயக்கவியல் பொருள்முதல் வாதமே சரியானது என்று வியக்கத்தக்க முறையில் உறுதிப்படுத்தியுள்ளன.இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் மார்க்ஸ் விரிவாக்கினார்.
பொருள்முதல் வாதம்தான் மார்க்சியத்தின் தத்துவ ஞானமாகும்.இதுவே முரணற்ற தத்துவ ஞானமாகும்.இயற்கை விஞ்ஞானங்களுடைய எல்லபோதனைகளுக்கும் ஏற்புடயதாகும். பொருள்முதல்வாதத்தை மறுப்பதற்கும்,பலவீனப் படுத்துவதற்கும்,பழிப்பதற்கும் ஜனநாயகத்தின் எதிரிகள் முழு மூச்சுடன் முயன்று பார்த்தார்கள். தத்துவ ஞானக்கருத்து முதல் வாதத்தின் பல்வகை வடிவங்களை இவர்கள் ஆதரித்தனர். கருத்துமுதல்வாதம் எதாவது ஒருவழியில் எப்பொழுதும் மதத்தை பாதுகாக்கவோ, ஆதரிக்கவோ செய்கிறது. மார்க்சின் வரலாற்றுத்துறை பொருள்முதல்வாதம், விஞ்ஞான சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும்,அரசியலையும் பற்றிய கருத்துகளில் குழப்பமும் தான்தோன்றித்தனமும் ஆதிக்கம் செலுத்திவந்தன. இப்போது அவை போய்,வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த முழுமையும்,உள்ளிணக்கமும் கொண்ட விஞ்ஞான தத்துவம் வந்துவிட்டது. ---தோழர் லெனின்
வர்க்கப் போராட்டம் ----
வர்க்கப் போரட்டத்தைப் பற்றிய போதனைதான் மார்க்சினுடைய போதனையின் முடிவாகும். நீதி மதம் அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும். வாக்குறுதிகளுக்கும் பின்னே.ஏதாவது ஒரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதை மக்கள் கண்டு கொள்ள வேண்டும். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும், அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஒரு ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு,அது நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராதவரையில் பழைய அமைப்புமுறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டே இருப்பார்கள். வர்க்கங்களின் எதிர்ப்பை தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன..?  பழமையைத் துடைத்தெறியவும், புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படிப் படைத்து தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றவையுமான சக்திகளை, நம்மை சூழ்ந்துள்ள இதே சமுதாயதிற்குள்ளேயே நாம் கண்டு பிடித்து,அந்தச் சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்து திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. ---தோழர் லெனின்

‘‘இப்போ புகழ்பெற்ற அடித்தளத்திற்கும் அதை விடக்குறையாத புகழ்பெற்ற மேல்கட்டுக்கோப்பிற்கும் இடையிலான உறவைக்குறித்து மார்க்சும் ஏங்கெஸ்சும் கொண்டிருந்த கருத்தைச் சுருக்கமாக வெளிப்படுத்த நாம் விரும்பினால் அது பின்வரும் விதத்திலிருக்கும்.
1.
உற்பத்திசக்திகளின் நிலை
2.
அது நிர்ணயிக்கும் பொருளாதார உறவுகள்
3.
குறிப்பிட்ட பொருளாதாரஅடித்தளத்தில்வளர்ச்சியுற்றிருக்கும் சமூக-அரசியல் அமைப்பு
4.
ஓரளவிற்கு நேரடியாகப் பொருளாதாரத்தாலும் ஓரளவிற்கு அதன் அடிப்படையில் எழுந்திருக்கும் சமூக-அரசியல் முறையாலும் நிர்ணயிக்கப்படும் சமூக மனிதனின் மனப்பாங்கு, அந்த மனப்பாங்கின் தன்மைகளைப் பிரதிபலிக்கும் பலவிதமான சித்தாந்தங்கள்.
(பிளெஹனவ், பக். 109 மார்க்சியத்தின் அடிப்படைப் பிரச்சினைகள்)
உற்பத்தி சக்திகளினதும் உற்பத்தி உறவின் மீதுதான் பொருளாதார அடித்தளம் கட்டமைக்கப்படுகின்றது. இதன்மீதுதான் மேற்கட்டுமானங்களான சமயம் (மதங்கள்) குடும்பம், அரசு, சட்டம், அரசியல் எனப்படுகிறது.
உபரி உருவாக்கமானது பின்வருமாறு உருவாக்கம் பெறுகின்றது. ஒரு தொழிலாளி தன்னுடைய உற்பத்தி சக்தியினை விற்கின்றார். (யார் உற்பத்தி சாதனங்களை வைத்துக் கொள்வார்களோ அவர்களிடம்) தொழிலாளி குறிப்பிட்ட மணித்தியால உழைப்பை தன்னுடையதும், தனது குடும்பத்திற்கான பரிபாலனச் செலவிற்குப் பாவிக்கின்றார்கள்;. மீதி நேரத்தை கூலியில்லாமல் தொழிலாளிகள் உற்பத்தியில் ஈடுபடுகின்றார்கள். தொழிலாளியினால் மேலதிக உழைப்புப் பெறப்பட்டதே உபரியாகும். இதனை மிகைவருமானம் என்றும் கூறலாம். இவ்வுபரி மூலமாக தொழிற்சாலையின் ஒருபகுதி ஊழியர்களைத் தன்பக்கம் இழுக்கின்றது. மேலதிக வரும்படி அளித்தல் இதன் மூலம் தொழிற்சாலையின் நிர்வாகம், தலைமையை தன்னகத்தே உள்வாங்கிக் கொள்கிறது. இவர்களே மேட்டுக் குடியினராக உருவாக்கப்படுகின்றனர். உபரியின் வளர்ச்சியினால் ஏற்படுவதே வர்க்க பேதங்களாகும்.
லெனின் வர்க்கங்களைப் பற்றிக் கூறும் போது வர்க்கங்கள் என்பவை வரலாற்று வழியில் நிர்ணயிக்கப்பட்ட சமூகப் பொருளுற்பத்தி அமைப்பில் வகிக்கும் இடத்தாலும் உற்பத்தி சாதனங்களுடன் அவற்றிற்குள்ள உறவாலும் (மிகபெரும்பாலும் இது சட்டத்தால் நிலை நிறுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டிருக்கிறது) உழைப்பின் சமூக ஒருங்கமைப்பில் அவற்றிற்குள்ள பாத்திரத்தாலும், ஆகவே சமூகச் செல்வத்தின் அவற்றின் செயலாட்சிக்கு உட்பட்ட பங்கின் பரிமாணங்களாலும் இந்தப்பங்கை அவை சுவீகரித்துக் கொள்ளும் முறையிலும் ஒன்றுக்கொன்று வேறுபடும் போது மக்கள் பகுதிகளாகும். வர்க்கங்களானவை சமூகப் பொருளாதாரத்தின் குறிப்பிட்ட ஒர் அமைப்பில் தாம் வகிக்கும் வெவ்வேறு இடங்களின் காரணியாய் ஒன்று மற்றொன்றின் உழைப்பைக் கைப்பற்றக் கொள்ள முடியும் படியான மக்கள் பகுதிகளாகும்‘‘  உபரியின் இன்னொரு பகுதி மூலதனத் திரட்சியாகின்றது. மூலதனத் திரட்சியானது உற்பத்தி சாதனங்களை கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. இன்றைய நவீன உலகிலே மனித வலுவிற்குப் பதிலாக இயந்திரங்களை கொள்வனவு செய்யப்படுகின்றது. உபரியை உரிமையாகக் கொள்கின்ற வர்க்கமானது இன்னும் இன்னும் தனது சொத்தைத் திரட்டுகின்றது. இதன் காரணமாக சிறுவுடமையாளர்கள் பெரும் மூலதனத்திற்கு இரையாகின்றனர்.
உபரியில் ஒரு பகுதியை தொழிலாளி வர்க்கத்திடம் இருந்து பிரித்து கொஞ்சம் அதிகமாக சம்பளத்தை வழங்கி அதிகார வர்க்கத்தை உருவாக்கிக் கொள்கின்றது. இந்த அதிகார வர்க்கமே உழைக்கும் வர்க்கத்தை அடக்குபவர்களாவும், கண்காணிப்பவர்களாவும் இருக்கின்றார்கள். பாதுகாப்பு நிறுவனத்தை ஆளும் வர்க்கமானது தன்னைப் பாதுகாக்கும் பொருட்டு வேலையில்லா இளைஞர்களை திரட்டி தன்பாதுகாப்பிற்காக இராணுவத்தை உருவாக்கின்றது. அத்துடன் தொழிலாளர் வர்க்கத்தினை சிதைக்கும் பொருட்டு கருத்தியலை உருவாக்கின்றனர்.
உபரியின் விளைவாகத் தோன்றியதே வர்க்க பேதங்கள். வர்க்கத்திற்கு அடி அத்திவாரம் சொத்தாகும், சொத்து இல்லையெனில் வர்க்கம் இல்லை. வரலாறுகளும் வர்க்கத்தினால் உருவாகின்றதேயன்றி தனிமனிதர்களால் அல்ல. இதையே கம்யூனிசக் கட்சி அறிக்கையில் 'இதுநாள் வரையிலான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறேயாகும்  என கூறினார்கள். பழையவை அழிதலும் புதியவை உருவாகலும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்திலும் ஒவ்வொரு வர்க்கத்துக்கு எதிர் வர்க்கம் இருந்து கொண்டே தான் வருகின்றது. சாதியம்-
கருத்தியல்-
கருத்தியலை விதைப்பது என்பது பொருளாதார அமைப்பை அதனைத் தீர்மானிக்கின்றது. மனித வர்க்கத்தின் வளர்ச்சியின் ஊடாக உருவாக்கப்படும் சின்னங்கள், கட்டுக்கதைகள், வரலாற்றுப் புனைவுகள், இயற்கையை கட்டுப்படுத்த முடியாத மனிதர் தனக்கு மேலாக ஒரு சக்தி இருப்பதாக எண்ணுகின்ற எண்ணவோட்டம் போன்றவற்றால் கட்டமைக்கப்படுவதாகும். உழைப்பினை வழங்காது உருவாகும் மூளை உழைப்புப் பிரிவினரின் உருவாக்கம் என்பது அறிவு வர்க்கம் உருவாக்கப்படுகின்றது. முதலில் ஆண்பெண் பிள்ளைபெறும் நிலையே முதல் முதலாக தோன்றிய வேலைப்பிரிவினை என்றார் ஏங்கெல்ஸ்.
சாதியம் என்பது இறைக்கோட்பாடு, சமயக் கோட்பாடுகள் போல் கருத்தியலே அது அந்த பொருளாதார நியதிக்கு ஏற்ப பணிந்து செல் என்று போதிக்கின்றது. அந்தக் சமூகக் கட்டமைப்பினுள் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மற்றவர்களின் உழைப்பை வழங்காமலே மற்றவர்களின் உழைப்பை உறுஞ்சுவது மாத்திரம் அல்ல. மனிதர்களின் உழைப்பை பெறுவதற்காய் ஆண்டான் அடிமைகளாக தமது குடும்ப உற்பத்தி வட்டத்தினுள் சமூக உறுப்பினர்களை வதைக்கின்ற பொருளாதாரச் சிந்தனையைக் கொண்டது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு கூலி கொடுக்காமலே அவர்களின் உழைப்பை உறுஞ்சும் சமூக அமைப்பாகும். ஆண்டைகள் தமது ஒடுக்கப்பட்டவர்களின் உழைப்பின் இருந்து பயன்பாட்டுப் பெறுமானத்தை பெருக்கிக் கொள்கின்றார்கள். இவ்வாறு பயன்பாட்டுப் பெறுமானத்தை பெருக்கிக் கொள்வதன் ஊடாக பரிவர்த்தனைக்கு அந்த உழைப்பை உண்டாக்கி மூலதனத்தினை ஆண்டைகள் பெருக்கிக் கொள்கின்றார்கள்.
இதில் நகர்ப்புறமயமாதலில், முதலாளித்துவ உற்பத்தியில் சுதந்திரமான தொழிலாளர்களை உருவாக்கிக் கொள்கின்ற போதும் சாதியச் சிந்தனை தொடர்வதும் நடைபெறுகின்றது.
இது கலாச்சாரப் புரட்சியுடனேயே சாத்தியமாகும். கலாச்சாரப் புரட்சிக்கு சாத்தியமான உற்பத்தி உறவுதான் உள்ளதா?
சாதியம் என்பது உற்பத்தி சக்திக்கும் உற்பத்தி உறவு என்ற அடிக்கட்டுமாத்தின்  மேல் கட்டப்பட்டதே அனைத்து வடிவங்களாகும். சாதியச் சிந்தனையான பொருளாதார அமைப்புச் சார்ந்த சிந்தனை வடிவம் என்பது அன்றைய கால கட்டத்தின் பொருளாதார கட்டமைப்பிற்கு துணைசெய்கின்றது. ஆனால் சிந்தனை வடிவம் அடிக்கட்டுமானமாக காண்பது என்பது தவறானாகும்.  அவ்வாறு சிந்திப்பது அல்லது விளக்கம் கொடுப்பது மார்க்சியத்தினை விளங்கிக் கொள்வதில் உள்ள குறைபாடாகும். இவ்வாறே இரட்டைத்தேசியம் என்பதும் அடிக்கட்டுமானமாக  பார்ப்பது என்பது மார்க்சியத்தின் புரிதல் மீதான குறைபாடே அன்றி மார்க்சியத்தின் மீதான குறைபாடு அல்ல. இதில் தலித்தியம்- சாதியம் என்பதை தேசியமாக பார்ப்பது என்பது கூட தவறான அரசியல் பார்வையாகும். அதனை மார்க்சியமான நிரூபிக்க முயற்சி எடுக்கப்படும் அவல நிலை என்பது தொடரத் தான் செய்கின்றது.
சாதிய அடையாளம், மதத்தின் அடையாளத்தினைக் கொண்டு சமூகத்தின் வளர்ச்சிப் போக்கை கணிப்பது மார்க்சியப் பார்வையல்ல. இது குறிப்பான தன்னியல்பான - அடையாள அரசியல் ஊடாக உருவாக்கப்பட்ட சிதைப்பு அரசியல் சிந்தனைவடிவமாகும்.

கீழைத்தேயவாதம்- Orientalism
மார்க்சிற்கு எதிராக கீழைத்தேயவாதம் முன்வைக்கப்பட்டது. அதாவது மார்க்ஸ் கீழத்தேசத்து மக்களை கீழானவர்களாக பார்த்தாக கலாசாலை ஆய்வுமுறை படிப்பாளர்களால் முன்வைக்கப்பட்டது. இவர்கள் மார்க்சிய பின்னணி கொண்டவர்கள் அல்ல.
‘‘
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி‘ ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் விளைவுகள்‘‘மார்க்ஸ் . 201 மார்க்ஸ்- ஏங்கெல்ஸ் நூல் திரட்டு தொகுதி 3) என்ற பகுதிகளில் ஒர் நேர்மையான வரலாற்று ஆய்வாளரின் செயற்பாடே மிதமிஞ்சிக் கிடக்கின்றது. இந்தப் பகுதிகளில் மார்க்ஸ் நவீனமயமாதல், நகர்ப்புறமயமாதல், தொழிற்சாலையில் உழைப்பை விற்கும் நிலை ஏற்படல், உள்கட்டுமான (infrastructure) வளர்ச்சி, சுதந்திரமான தொழிலாளர்களை எவ்வாறு உருவாக்குகின்றது, இப்படி பல விடயங்களை எடுத்துக் கூறுகின்றார். இந்த நோக்கில் வரலாற்றில் எவ்வாறான சமூகத் தன்மை கொண்ட மக்கள் அங்கு இருக்கின்றனர் என்பது பற்றிய நிலையில் இருந்து ஆய்வை முன்வைக்கின்றார். சமூகம் என்பது அதற்கே உரித்தான உலகப் பார்வையை, சமூக நீதி நெறியைக் கொண்டு இருந்ததே காரணமாகும். இதன் காரணமாக அவர்களுடைய சிந்தனையும் அவர்கள் சமூக உறவும் உறவு முறைக்கு உள்ளடங்கப்பட்டதேயாகும்.
மார்க்ஸ் வரலாற்று ஓட்டத்தை சிறு கட்டுரை வடிவத்தில் எழுதியதால் எழுகின்ற புரிதல் பற்றிய பிரச்சினையும் முக்கியமாகும். எழுதியவற்றை புரிந்து கொள்ளுவதில் உள்ள சிரமத்தைப் பார்க்கின்ற போது மார்க்ஸ் என்ன உண்மையில் விளக்குகின்றார் என்பதை விளங்கிக் கொள்வதற்கு நீண்ட தேடலின் அவசியமாகின்றது.
கொலனித்துவத்தின் மாற்றம் என்பது எமது தேசங்களில் சுதந்திரமான வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியது என ஏங்கெல்ஸ் கூறுகின்றார். மார்க்சின் இச்சிந்தனைக்கு முனைப்பாக இருந்த சிந்தனைக்கு வித்தாக பல உதாரணங்களைக் காணமுடியும். மார்க்ஸ் முதலாளித்துவ வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே புரட்சி ஏற்படும் என கூறினார். ஆனால் லெனின் முதலாளித்துவ புரட்சிக் கட்டத்தை பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் நிறைவேற்றிக் கொண்டு முதலாளித்துவம் வளர்ச்சியடையாத நாட்டில் புரட்சியை நிறைவேற்றினார். எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படவில்லை என்ற மார்க்சின் சிந்தனையோட்டமே அடிப்படையாக இருந்தது. இவைகள் அறிந்து கொள் முடியாமல் எடுத்த எடுப்பிலேயே முடிவுக்கு வரும் அணுகுமுறை எவ்வித பிரயோசனத்தையும் தர மாட்டாது.
மார்க்ஸ் கருத்துக் கூறுவதற்கு முன்னர் 350 வருடங்களுக்கு முன்பாகவே கொலனித்துவதின் சுரண்டல் ஆரம்பிக்கப்பட்ட மிருகத்தனமாக கொள்ளைகளில் ஈடுபடதொடங்கி விட்டார்கள். சுரண்டலின் மூலம் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, எமது நாடுகளில் சுதந்திரமான வளர்ச்சி ஏற்படுவதற்கு முன்னரே கொலனித்துவ வாதிகளினால் நிர்ப்பந்தமாக மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. மாற்றம் ஏற்படுத்தப்பட்ட பின்னராக மக்களுக்கு விடுதலை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆராய்ச்சியில் இடையறாது மேற் கொண்டிருந்தார். அந்த ஆராய்ச்சியல் எழுந்தவைகள் தான் இந்தக் கோட்பாடுகள். மாறாக தற்போதைய ஆய்வாளர்கள் போல் சடங்கு, சம்பிரதாயத்திற்காக அதன் வழி இருந்து எழுத்தில் ஈடுபட்டவர்கள் அல்ல.
ஆக இவ்வாறு கொலனித்துவத்தின் மிருகத்தனமான சுரண்டலின் ஊடாக மூலதனத்தை பெருக்கிக் கொண்ட கொலத்துவ நாடுகளை அம்பலப்படுத்தும் சிந்தனை சக்தி மார்க்சியத்திற்கு இருந்திருக்கின்றது. மார்க்ஸ் எந்த அடிமைப்பட்டிருந்த நாட்டிற்கும் செல்லவில்லை. ஆகவே அடிமைகளின் வாழ்க்கையை எவ்வாறு உணர்ந்திருப்பார்? மார்க்ஸ் அடிமைச் சமூகத்தில் வாழவில்லை எவ்வாறு அடிமைச் சமூகத்தைப் பற்றி எழுதமுடியும் என்று கேட்பது அறிவொணாவாதமாகும்.
கலாச்சாரப்புரட்சி
சிந்தனைமாற்றம் என்பது பொருளாதார அடித்தளத்தினைக் கொண்டே தீர்மானிக்கின்றது. முதலாளித்துவம் நிலமானியச் எச்சங்களையும் உள்ளடக்கியிருக்கின்றது. நிலமானிய அரசவம்ச முறையை ஏற்றுக் கொண்டு சமரசம் செய்து கொண்டிருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். கால்வின் லூதரின் சிந்தனைப் போக்கிற்கு எதிராக நிலைப்பாடு கொண்ட வர்த்திக்கான் தனது திருச்சபை ஊடாக நிலமானிய சிந்தனை வடிவத்தையும், சமூக உறவையுமே விதைக்கின்றது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே முதலாளித்துவம் என்பது தமது சுரண்டலுக்கு ஏற்ப சிந்தனையை சுவீகரித்துக் கொள்கின்றது.
மார்க்ஸ் எதிர்பார்த்தது போல முதலாளித்துவம் ஏன் சாதியை உடைக்கவில்லை என்பதை மார்க்சிடம் தேடுவதுபோல லெனின்- மாவோவின் கலாச்சாரப் புரட்சியில் தேடுவது சரியானதாக இருக்கும்.
கலாச்சாரப்புரட்சியை எவ்வாறு விளங்கிக் கொள்வதில் சிக்கல் தொடர்ந்தும் நீடித்துக் கொண்டிருக்கின்றது.
புரட்சியின் பின்னர் உருவாகிய புதிய உற்பத்தி உறவிற்கு ஏற்ப சமூக உறவுகளை கட்டியமைக்கும் நோக்குடன் வெளிப்பட்டதே கலாச்சாரப் புரட்சி.
கலாச்சாரப் புரட்சியின் பின்னரான தாக்கத்தையும் தவறுகளையும் தோழர் சண் (கம்யூனிசப் போராளியின் நினைவுகள், வில்லியம் கிண்டன் - சோசலிசத்தில் வர்க்கப் போராட்டம்- மாவோவின் பாத்திரம் போன்ற வரலாற்று ஆவணங்களின் ஊடாக வெளிப்படும் ஆய்வுமுடிவுகள் இயங்கியலுடன் இணைந்ததாக உள்ளது.
இவர்கள் உற்பத்தி சக்திக்கும் உற்பத்தி உறவிற்குமான உறவுகளில் இருந்து வெளிப்படுத்தும் ஆய்வுகள் சரியானதாக இருக்கின்றது.
உற்பத்தி சாதனங்களை கைப்பற்றுவதும், அதனை தொடர்ந்து பாதுகாப்பதற்கு உழைக்கும் மக்களுக்கான மாற்றுச் சிந்தனையை உருவாக்கும் போராட்டமும் அவசியமாகின்றது. உலகின் முதல் கம்யூன் புரட்சியின் அனுபவத்தின் பின்னர் பழைய நிறுவனங்களை தொடர்ந்தும் நிலைகொள்ள வைப்பது புரட்சிக்கு பாதகமானது என ஏங்கெல்ஸ், மார்க்ஸ் ஆகியோர் வந்தடைந்தனர். இதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இதனை அறிவுறுத்தியும் இருந்தனர்.
நாம் சிந்தனை மாற்றத்திற்கான போராட்டத்தினை ரஸ்யப் புரட்சியின் பின்னரும், சீனப் புரட்சியின் பின்னரா கலாச்சாரப் புரட்சி என்பன எம்முன்னால் உள்ள படிப்பினைகளாகும்.
இங்கு ஜனநாயக மத்தியத்துவம், அல்லது பாட்டாளிவர்க்கச் கலாச்சாரம் என்பதை நிலமானிய - முதலாளித்துவ எச்சத்தில் இருந்து வரையறுக்கப் போகின்றோமா அல்லது பயன்பாட்டுப் பெறுமதியை மையம் கொண்ட உறவல்லாது உழைப்பதும், உடலுழைப்பை வளங்குவதும், பரஸ்பர ஜனநாயக விழுமியங்களை மதிக்கின்ற புதிய கலாச்சாரத்தை உருவாக்கப் போகின்றோமா? புதிய சமூக உறவு எவ்வகையான ஜனநாயக விழுமியங்களை கொண்டதாக .இருக்க முடியும் என்பது ஆய்விற்கு உரியதாகும்.
2. மார்க்சியம் அன்னியப்பட்ட தத்துவமா?
மார்க்சீயமே முழுமையான குறைதீர்க்கும் காரணி எனக்  கூறிக் கொண்டே மார்க்ஸ் தனது ஆய்வின் ஊடாக கண்டடைந்த உண்மைகளை ஒரு குறிப்பிட்ட வட்டத்தினுள் அடக்கிக் கொள்ளும் சிந்தனைப் போக்கு ஆபத்தானது. 
மார்க்சியம் என்பதை என்னவென்று புரிதலை ஏற்படுத்த வேண்டியது ஒரு கடமையாக இருக்கின்ற போது மார்க்சிய அணுகுமுறை (சமூக விஞ்ஞானத்தின்) ஊடாக   சமூகத்தினை விளங்க வைப்பதும் கடமையாகும். மார்க்ஸ் வாழ்ந்த ஐரோப்பிய சூழல் என்பதில் இருந்து இன்று ஏகாதிபத்தியக் காலகட்டத்தில் வாழ்கின்றோம். ஏகாதிபத்தியக் காலத்தில் வாழ்ந்தாலும்  தொடர்ச்சியான சிந்தனை முறை சமூகத்தில் கடத்தப்பட்டடே வந்துள்ளது. இந்தச் சிந்தனைகளை விளங்க வைப்பது முக்கியமான கடமையாக இருக்கின்றது.
சமூக வளர்ச்சிப் போக்கில் முற்போக்கு கட்டத்தை தாண்டி வந்தாலும் அரசியல்- பொருளாதார- கருத்தியலாக்கம் என்பது சமூகத்தினை பின்னோக்கிச் செல்லும் வகையில் தான் இருக்கின்றது. இது சோவியத் உடைவில் இருந்து தொடங்கி ஆப்கான் மண்ணில் உயர்ந்த நிலையில் இருந்த பெண்கள் மதவடிப்படைவாத சமூக உறவில் மாற்றத்திற்கு உள்ளாக்கியதும், எவ்வாறு அதனை மறுவுற்பத்தி செய்கின்றார்கள் என்ற நிலையில் இருந்து கருத்துருவாக்கமும் அது எவ்வாறு சமூக மயப்படுத்தப்படுகின்றது என்பதை வரலாற்று ரீதியாக அறியவேண்டும். 
இவ்வாறே ஆண்டாண்டு காலமாக சாதியம் என்பது தொடர்ச்சியாக மறுவுற்பத்தி செய்யப்பட்டு வருவதையும் குறிப்பாக மனிதரே மனித மலத்தை அள்ளும் நிலையை  தொடர்வதும் இந்தியச் சமூகத்தில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
முழுமையாக முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து ஏகாதிபத்தியகட்டத்தில் வாழவில்லை என்பதற்காய் மார்க்சிசம் முழுமையானது இல்லை என்று கூறமுடியுமா? இவ்வாறே சாதியச் சமூகத்தில் வாழவில்லை சாதியத்தின் தோற்றம் பற்றி எழுதவில்லை என்பதற்காய் மார்க்சிசம் போதாமை உள்ளது என்பது நமது சிந்தனைவளர்ச்சியில் உள்ள குறைபாடாகும். மாறாக மார்க்சியத்திலும் அதன் அணுகுமுறையிலும் உள்ள குறைபாடு என்பது அர்த்தமற்றதாகும்.
முன்னைய கட்டுரையில் இவை பற்றி விபரித்திருந்த போதிலும் தொடர்ந்தும் ஒரு அன்பர் தமது- நமது அறியமையை மார்க்சியத்தின் மீதான குறைபாடாக வெளிப்படுத்திக் கொண்டு வருக்கின்றது மாத்திரம் அல்ல. மற்றவர்களை முத்திரை குத்துவதின் ஊடாக தமது குறைபாட்டை மடைமாற்றிக் கொண்டிருப்பது தனிப்பட்ட சிலர் தோழர்களை பாதிப்பதில்லை. இது சமூகத்தில் உள்ள மற்றைய இளந்தலைமுறையையும், ஆவலர்களையும்  துரத்திவிடுவதில்  தான் வந்து முடிகின்றது.
சமூகத்தை பொறுத்தவரை மார்க்சியத்தின் எதிரிகளே அதிகம் ஆகவே நாம் பொறுப்புடன் விவாதிக்கவும் கருத்துக்கள் கூறவும் வேண்டும். பல புதிய விடயங்களாகவும், வரைவிலக்கிணங்கள் அதிகமாகவும் இருக்கின்றது. இதனை சமூக வரலாற்று விஞ்ஞான அடிப்படையில் இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மார்க்சிய மூன்று தத்துவக் கூறுகளைக் கொண்டே நாம் படித்தறிந்து கொள்ள முடியும். அதற்கு அப்பால்  இருந்து அணுகும் போக்கு கருத்துமுதல்வாதமாகும்.
இங்கு கருத்துமுதல்வாதம் என்பதும் சிந்தனைப் போக்குத்தான். இந்தச் சிந்தனைப் போக்கு எந்த வர்க்கத்தை பாதுகாக்கின்றது என்பது முக்கியமானதாகும். உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கான போக்கை வலியுறுத்துவது  வரலாற்றுப் பொருள்முதல்வாதம். அதற்கு மாற்றாக இருப்பதுதான் கருத்துமுதல்வாதம்.
ஆண்டாண்டு காலமான மனித இனம் சேகரித்த அறிவை. நாம் சில வருடங்களில் சில மாதங்களில் இன்று சில மணிநேரத்தில் அதனை அறிந்து கொண்டு எல்லோரையும் விட மேதாவியாகவும் எல்லாம் தெரிந்த புத்தியீவியாகவும் இவ்வுலகத்திற்கு பறைசாற்ற முன்படும் மாந்தர்களிடையே நாமும் வாழ்கின்றோம்.
நாம் பெற்ற அறிவிற்கு நாம் சொந்தக் காரர்கள் அல்ல.
அறிவு குவியபப் பெற்ற உலகில் வாழ்கின்ற நாம் தொழில் நுட்பத்தின் காரணமாக எம் முன்னோரை விட அறிவு உள்ளவர்களாக எம்மால் நடமாட முடிகின்றது.
இதுதான் இன்றைய உலக நிலை.
மார்க்சீயம் உச்சரித்தவர்களை எல்லாம் மார்க்சீயவாதிகள் என்று பிரகடனப்படுத்தும் உலகில் இன்னும் எத்தனையோ பேர் வருவார்கள். எம்மைப் போன்றவர்கள் குட்டி முதலாளிய சிந்தனைக்கு உட்பட்டவர்களாக இருக்க முடியும். ஆனால் பெரும் புரடசியாளர்கள் என்றும் தம்பட்டப் அடிப்பது தான் இதுவரை வரலாறு.
இங்கு அறிவியல் எழுச்சியில் கியூம், காண்ட், கெகல், ஃபாயபார்க் என்போர் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் தத்துவ அறிஞர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. "என்னுடைய இயக்கவியல் முறை ஹெகலிய முறையில்  இருந்து வேறுபட்டு இருப்பது மட்டும் அல்லாமல், நேரடியாகவே அதற்கு எதிரிடையானது ".(பார்க்க: மூலதனம்,
முதல் தொகுதி, இரண்டாவது ஜெர்மன் பதிப்பின் பின்னுரை,
1873,
ஜனவரி 24)  இவர்களின் வளர்ச்சியில் இருந்து விஞ்ஞான சோசலிசத்தினை படைத்தவர்தான் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகும். இவர்களைத் தொடர்ந்து லெனின், ஸ்ராலின், மாவோ என மார்க்கியம் வளர்ச்சியடைந்துள்ளது.
வளர்ச்சிப் போக்கில் ஆராயாது கலைசாலை  கோட்பாட்டிற்கு ஏற்ப எழுதும் போக்கில் அமைந்த மார்க்சின் மீதான கீழத்தேயவாதம் என்ற கோட்பாடுகள் என்பது கொச்சைப்படுத்துவதாகும்.

மொக்குகள் மோடுகள் என்ற
மார்க்சும் எங்கல்சும் ஜெர்மானியர்கள். மார்க்சியம் ஐரோப்பாவில் பிறந்த தத்துவம். மார்க்சுக்கும் ஏங்கல்சுக்கும், பிரதானமாக, ஐரோப்பாவே உலகம். ஐரோப்பாவுக்குக் கிழக்கே உள்ள கீழ்த்திசை உலகம் பற்றி அவர்களுக்குத் தெரியாது என்பது கீழத்தேயவாதத்தின் மையச் சிந்தனையாகும். இங்கு இனக்குழும முறையும் அவர்களின் வாழ்வியல் என்பது கிறிஸ்தவத்தின் ஊடாகவே பெறப்பட்டதாகும்.
பிறயினத்தார்- தாம் மற்றவர்கள்-  போன்றவையும் கறுப்பு- வெள்ளை என்ற பாகுபாட்டுச் சிந்தனை என்பது விவிலியத்தின் ஊடாக தொடரப்பட்டு வருகின்றது.  1970- 73 இடைப்பபட்ட காலத்தில் விடுமுறையில் யாழ்வந்தபோது கடற்கடையில் உலாவந்த சுவாமியாரைக் கண்ட பொதுமனிதர் முழங்காலில் இருந்து ஆசீர்வாதம் பெற்றார். அவரைத் தொடர்ந்து நானும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன். இந்த முறை பிற்பட்ட காலத்தில் கண்டதாகவோ, நான் அவ்வாறு செய்தை கண்டதில்லை. இந்தவித போக்கு சமூகத்தில் இருந்திருக்கின்றது. இந்த வேளையில் மனிதர்களின் வாழ்வியலில் ஏற்படுகின்ற சிந்தனை மாற்றத்தின் ஊடாக அவைகள் இல்லாததொழிந்துள்ளது.
இவ்வாறா செயற்பாடுகளின் பின்னால் உள்ள சிந்தனைவடிவமான (Petrinism - The beliefs or tendencies attributed to the apostle Peter; according to the Tübingen school of theology, the doctrine that Christianity is a phase or development of Judaism, supposed to have been advocated by the followers of Peter: opposed to Paulinism. See Paulinism, and Tübingen school (under school). பேட்ரனிசம்- பாதுகாவலர்  (the body of theological doctrine taught by, or attributed to, the apostle Peter.) என்பது தம்மை அறிவார்ந்தவராகவும் மற்றவர்களைஒன்றும் தெரியாதவராகவும் நடத்துவதாகும்.
இதேபோல கடல்தொழிலாளர்களுக்கு அணுக்கழிவைப் பற்றி என்ன தெரியும் அல்லது பார்ப்பணர் தான் விஞ்ஞானியாக முடியும் என்ற சிந்தனைப் போக்கையும் கொள்ள முடியும். இங்கு கருத்தியல்மேலாதிக்கவாதம் என்பது ஒரு பொருளாரச் சிந்தனையுடன் தொடர்பு பட்டதாகும்.
மார்க்சிற்கு எதிராக கீழைத்தேயவாதம் முன்வைக்கப்பட்டது. அதாவது மார்க்ஸ் கீழத்தேசத்து மக்களை கீழானவர்களாக பார்த்தாக கலாசாலை ஆய்வுமுறை படிப்பாளர்களால் முன்வைக்கப்பட்டது. இவர்கள் மார்க்சிய பின்னணி கொண்டவர்கள் அல்ல.
‘‘
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி‘ ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் விளைவுகள்‘‘மார்க்ஸ் . 201 மார்க்ஸ்- ஏங்கெல்ஸ் நூல் திரட்டு தொகுதி 3) என்ற பகுதிகளில் ஒர் நேர்மையான வரலாற்று ஆய்வாளரின் செயற்பாடே மிதமிஞ்சிக் கிடக்கின்றது. இந்தப் பகுதிகளில் மார்க்ஸ் நவீனமயமாதல், நகர்ப்புறமயமாதல், தொழிற்சாலையில் உழைப்பை விற்கும் நிலை ஏற்படல், உள்கட்டுமான (infrastructure) வளர்ச்சி, சுதந்திரமான தொழிலாளர்களை எவ்வாறு உருவாக்குகின்றது, இப்படி பல விடயங்களை எடுத்துக் கூறுகின்றார். இந்த நோக்கில் வரலாற்றில் எவ்வாறான சமூகத் தன்மை கொண்ட மக்கள் அங்கு இருக்கின்றனர் என்பது பற்றிய நிலையில் இருந்து ஆய்வை முன்வைக்கின்றார். சமூகம் என்பது அதற்கே உரித்தான உலகப் பார்வையை, சமூக நீதி நெறியைக் கொண்டு இருந்ததே காரணமாகும். இதன் காரணமாக அவர்களுடைய சிந்தனையும் அவர்கள் சமூக உறவும் உறவு முறைக்கு உள்ளடங்கப்பட்டதேயாகும்.
இங்கு மார்க்சின் சிந்தனைவடிவத்தினை குறிக்கி தட்டையாகப் பார்க்கும் பார்வையானது மார்க்சினை உயர்த்தியே சிதைக்கின்றதையே அவதானிக்கலாம்.
விஞ்ஞான சோசலிசம்-
மார்க்சின் ஆய்வு முடிவு விஞ்ஞானசோசலிசமாகும் ஹகல் போன்ற கருத்துமுதல்வாத இயங்கியலை தலைகீழாக கொண்டு வெளிப்படுத்தியதே இயங்கியல் பொருள்முதல்வாதமாகும். இத்துடன் இவரின் முடிவு விஞ்ஞான அரசியல் பொருளாதாரமாகவும் உபரியின் ஊடாக சொத்துப்படைத்தவர்கள் உருவாகின்றார் என்று வெளிப்படுத்தினார்.
அதேவேளை பொருள்முதல்வாதம் என்பது இந்தியாவில் இல்லை என்று கூறுகின்றது தவறானதாகும். இங்கு வாசிப்பு முறை என்பது இந்த சமூகத்தில் இருக்கின்ற சிந்தனையே தீர்மானிக்கின்றது. அதேவேளை மீள்வாசிப்பு என்பது அன்றைய சமுதாய ஓட்டத்தில் இருந்து வாசிப்பது எவ்வாறு என்பது ஒரு பயிற்சி தேவை என்பது மறுப்பதற்கு இல்லை. பரிணாம வளர்ச்சியை புல்லாகிப் பூண்டாகி, புழுவாகி, மரமாய், பல்மிருகமாகி, பறவையாகி, பாம்பாகி, கல்லாய், மனிதராய் வந்தது என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் கூறுகின்றார். பெண்களுக்கு இயற்கையிலே கூந்தலில் மணம் இல்லை என்ற விவாதத்தை நோக்கும் போது அறிவியல் ரீதியான சிந்திக்கும் நிலை இருந்துள்ளதை அவதானிக்க முடியும். மனிதர்களின் செயற்பாடுகளே ஒரு விளைவைத் தீர்மானிக்கின்றது என்ற கருத்தை (இயற்கையாக மனம் உண்டாகாது) முன்வைத்ததை அவதானிக்க முடிகின்றது. புராண இதிசாசம் சொல்லும் அணுபற்றிய (அணுக்குண்டு, விமானம் இருந்தது என்று கருதுவது தவறு) சிந்தனை, பொருள்முதல்வாதச் கூறுகளை ஆராய்ந்து படிப்பது என்பதில் கூட நம்மிடம் பயிற்சி இல்லை என்பதும் உண்மைதான்.
தமிழ் சமூகத்தில் உள்ள  பொருள்முதல்வாதச் சிந்தனையைப் பற்றி எவரும் ஆராய முயற்சிக்கவில்லை என்று கருதுகின்றார்  பேராசிரியர் நா. வானமாமலை.  தமிழ் இலக்கியத்தில் பொருள்முதல்முதல்வாதச் - உலோகாயதத்தை சிந்தனையை ஆராய்ந்துள்ளார். பேராசிரியரின் தமிழ் இலக்கியப் பரப்பில் செய்ததையே அவர் சொல்லில் இங்கு தரப்படுகின்றது.
தமிழில் உள்ள பௌத்த சமய நூல்களான மணிமேகலை, நீலகேசரியில் உலகாயதம் விவரிக்கப்பட்டுள்ளது. “ஒன்று பொருள்முதல்வாதம், மற்றொன்று கருந்து முதல்வாதம், இவற்றையே உலகாயதம், ஆன்மீகவாதம் என்றும் கூறலாம். இவையிரண்டும் நேர்முரணான கண்ணோட்டங்கள். இப்பிரபஞ்சத்திற்கு அடிப்படையாது? பிரபஞ்சத்தின் பொருள்கள் சக்திகள், உயிர்கள் இவையாவும் எதன் அடிப்படையில் தோன்றின? இக்கேள்விக்கு இருவிடைகளை தத்துவங்களில் காணலாம். பிறுபாடுகளாலும் நிலைபெறுகொண்டு இயங்குகின்றன. பிரபஞ்ச வாழ்க்கையின் அடிப்படை பொருளே (matter), என்ற கண்ணோட்டம் உலகாயதம் அல்லது பொருள்முதல்வாதம் எனப்படும்” (148 வெ. கிருஸ்ணமூர்த்தி ஆய்வு வட்ட வெளியீடு 6
 தம்மால் முடியும் என்ற நம்பிக்கை, மனித சக்தியில் நம்பிக்கை முதலிய கருத்துக்கள் இச்சமுதாயத்தின் உலகக் கண்ணோட்டமாயிருந்தன.” (157) இனக்குழுத்தின் காலத்தில் இயற்கை மீதான பயம் என்பது தன்னை வெல்ல முடியாத சக்தி என்பதினால் ஆகும். எப்போ இயற்கையை தன்னால் கண்டுப்படுத்த முடியும் என்ற சக்தி பெற்றபின்னர். மனிதர்கள் தான் உருவாக்கியவற்றிற்கே அடிமையாகிப் போனார்கள். பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்த பொருள்முதல்வாதக் கருத்தானது வீரயுகத்தில் இருந்து ஆரம்பமாகின்றது. இந்தக் காலத்தில் இனக்குழும முறையின் சிதைவையும், நிலப்பிரபுத்துவ சமூகத்தின் தொடர்ச்சியை சுட்டி நிற்கின்ற காலத்தைய பொருள்முதல்வாதத்தினை முன்னிலை உலகாயதம் (proto materialism) என்று வரையறைத்துக் கொள்கின்றார்.
தமிழ் இலக்கியத்தின் சுவையை பக்தி இலக்கியங்களை தவிர்த்து விட்டு பார்க்க முடியாது. அந்த இலக்கியங்களில் உள்ள இலக்கண வளம் போன்றவை மதம் சார்ந்த சிந்தனையை பறைசாற்றுகின்றது என்ற காரணத்திற்காக ஒதுக்கிக் கொள்ள முடியாது. ஆனால் அந்த இலக்கியத்தில் உள்ள பொருள்முதல்வாதச் சிந்தனையை முன்கொண்டு வருவது கூட பெரும் சவாலே. தமிழ் சமூகத்தில் பொருள்முதல்வாதம் இருந்துள்ளதை நாம் அன்னிய தேசத்தவர்களின் ஆய்வின் ஊடாக அறிய முடிகின்ற அலவம் இருக்கின்றது. இதில் பேராசிரியர் நா.வானமாமலை தொடங்கி வைத்த ஆய்வு முறை முன்னோக்கிச் செல்லவேண்டும் என்றால் இயங்கியல்- வரலாற்று பொருள்முதல்வாதத்தில் நீண்ட பரீட்சையம் எவ்வளவு முக்கியமே தமிழ் இலக்கிய வரலாற்றைப் பற்றிய பரீட்சையும் அவசியமாகும்.
இங்கு தமிழ் பரப்பில் வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வை இருந்துள்ளது. அவை கொச்சைப் – அல்லது முன்னிலை பொருள்முதவாதமாக கருத முடிகின்றது. இவற்றிற்கு மாற்றாக விஞ்ஞான  சமூகவியல் பார்வையைத் தந்தவர்தான் மார்க்ஸ்.  ஆக பொருள்முதல்வாதம் - மார்க்சியம் என்பது அன்னியச் சிந்தனை என்பது தவறானதாகும்.  மனிதகுலம் சேமித்த அறிவின் திரட்சியென்பது விஞ்ஞான வகைப்பட்டதாக உருவாகிய சிந்தனை மறுப்பதாகும். மனித குலத்தின் சிந்தனை என்பது உலகம்பூராகவும் பரவிபுதிய அறிவியற் கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது. இவ்வாறு உருவாகிய சிந்தனை வடிவங்கள் மனித வர்க்கத்தின் வளர்ச்சிக்குத் துணையாக இருக்கின்றது.
”” மார்க்சியம் ஐரோப்பாவில் பிறந்த தத்துவம். ஐரோப்பாவில் சாதி கிடையாது. எனவே மார்க்சியம் சாதியைப் பற்றி அறிந்து இருக்கவில்லை. இது இயல்பானதே. எந்த ஒரு தத்துவமும் பிரதேச எல்லைகளை மீறி, பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைத்துச் சிக்கல்களுக்கும் தயார்
நிலையிலான தீர்வுகளை (READYMADE SOLUTIONS) வழங்கும்  என்ற எதிர்பார்ப்பே அறிவியலற்றது (UNSCIENTIFIC).”” மேற்கண்ட கூற்றுக்கு மாறாக மார்க்சிய அணுகுமுறை ஊடாக  பேராசிரியர் வானமாமலை அவர்கள்  மேற்கொண்டுள்ளார்.
இங்கு மார்க்சிய அணுமுறையைப் பயன்படுத்தி விஞ்ஞானரீதியாக ஆராய்வது எவ்வாறு என்பதை நாம் தான் பயிற்சி எடுக்க வேண்டும். மார்க்சியம் தயார் நிலையில்  தீர்வு வழங்குவதில்லை.

No comments:

Post a Comment