Thursday, 25 August 2016

தலித்தியம் கற்பிப்பது தான் என்ன?





இலங்கையில் தலித்தியம்
தலித்தியம், விழிம்புநிலை பேசும் இலங்கை தமிழ் தலித்தியவாதிகள் (அடையாள,  குறியீட்டு) தன்னியல்பு அரசியல் நடத்த முற்படுகின்றனர். தலித்துக்கள் என்று அழைத்துக் கொள்ளும் வழமையை இந்தியாவில் இருந்து இலங்கை வகுப்புவாதிகள் பின்பற்றிக் கொண்டார்கள்.  1966களில் நடைபெற்ற தீண்டாமை எதிர்ப்புப் இபோராட்டத்தில் இந்தச் சொல்லாடல் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் 1990களின் பின்னர் ஐரோப்பிய வாழ்நிலையில் இருந்து பெறப்பட்ட ஒரு இறக்குமதிச் சொல்லாகவே தலித்தியம் இருக்கின்றது. இவர்கள் யுத்தத்தின் காரணமாக புலம்பெயர் (ஐரோப்பா) தேசங்களுக்கு வந்த பின்னர் தமிழக அறிவுசார் பிரிவினரால் அறிமுகப்படுத்தப்பட்டதே தலித்தியமாகும்.

இந்தக் கோட்பாட்டை மறுபடியும் ஐரோப்பாவில் இருந்து முள்ளிவாய்காலின் பின்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யவும், தலித்திய இலக்கியத்தினை உருவாக்கிக் கொள்ளவும் முயல்கின்றார்கள். தலித்தியவாதிகள் பின்நவீனத்துவ மார்க்சீய எதிர்ப்பு நபர்களின் ஆழுமையின் கீழ் ஆட்பட்டனர். தமிழக தலித்தியவாதிகளை போசகர்களாகக் கொண்டனர். ஆனால் மேற்கை மையமாகக் கொண்ட தலித்திய ஆதரவாளர்களிடம் தலித்திய அரசியலை ஒரு கோட்பாட்டு ரீதியாக வளர்த்தெடுக்கும் வல்மை இருந்தா என்றால் அது கேள்விக் குறியே.  இவர்கள் நடத்தும் பத்திரிகைகள், இணையங்கள், எழுத்துக்கள் என்பதை அவதானிக்கின்ற போது எவ்வித சொந்தச் சரக்காக இல்லை. அம்பேத்தார், பெரியார், இந்திய தலித்திய எழுத்தாளர்களின் கோட்பாட்டு உதவி என்பது இல்லாது இலங்கைத் தலித்தியவாதிகளால் தனித்து தாக்குப் பிடிக்க முடியாது.

தலித்தியவாதிகளில் விரல்விட்டு எண்ணக் கூடிய இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், புலியெதிர்ப்பாளர்கள் என்போர் சமூகத்தில் இருந்து அன்னியப்பட்ட நிலையில் இருந்து இலக்கியம், எழுத்துக்கள் படைக்கின்றார்கள். இவர்களின் எழுத்துக்களின் படைப்பும் இந்திய எழுத்தாளர்களின் ஒப்புதலுக்கும் அங்கீகாரத்திற்கும் உட்பட்டதாகவே இருக்கின்றது. இதேவேளை இவர்கள் நட்பு வட்டமே எழுத்துக்கான வரவேற்பாளர்களாகவும்,  விமர்சகர்களாகவும், ஒருவரை ஒருவர் தூக்கிவிடுவோராகவும் இருக்கின்றார்கள். இவர்களின் படைப்புக்களை வர்க்கக் கண்ணோட்டத்தை நிராகரிப்பவர்களாவும், தனிமனித இருப்பை முன்னிறுத்தியதாகவும் தலித்தியம் இருக்கின்றது. இவர்களின் எழுத்துக்களை விமர்சிப்பவர்கள் முழு மனிதகுல விரோதிகளாகக் கருதும் கிணற்றுத் தவளைகளாக இருக்கின்றார்கள்.  முரண்பட்ட கருத்துக்கள் என்பது சமூக விஞ்ஞான ரீதியாக இருப்பதில்லை. இவர்களினால் உருவாக்கப்பட்ட தலித்திய மேம்பாட்டு முன்னணி இலங்கைக்கு நகர்த்துவதில் பல இடையூறுகளைச் சந்திக்கத் தான் போகின்றது. ஆனாலும் தேர்தலில் போட்டியிட்ட போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.

சமூக அமைப்பை மாற்றம் செய்யும் அர்ப்பணிப்பற்ற போராட்டப் பாதையென்பது என்பதும் முன்னேறிய (பணம், படிப்பு) பிரிவினரிடையே ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கின்றது. தன்னியல்பான வேலைமுறைகளைத் இந்த பொருளாதார அமைப்;பு எப்பவும் ஊக்குவித்துவரும். தன்னியல்பான போராட்டங்கள் ஊடாக சமூகத்தினை சிந்தனை ரீதியாக சிதறடிக்க முடியும். இவர்களின் போராட்டமும், போராட்ட வடிவங்களும் வர்க்கப் போராட்டத்திற்கு பாதகமாக அமைந்து விடுகின்றது. இந்திய தலித்திய, விளிம்புநிலை போன்ற கோட்பாடுகள் பற்றி இலங்கை முற்போக்கு சக்திகள் அறிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இலங்கை முற்போக்குச் சக்திகள் ஏமாந்து விடாதிருக்க தலித்திய,  விளிம்புநிலைக் கோட்பாடுகளை அம்பலப்படுத்துவது அவசியமாகும். இந்திய தலித்திய,  பின்நவீனத்துவவாதிகள் ஒரு நிறுவனமயப்பட்ட ஒழுங்கமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளதை (கீற்று.கொம், புதிய ஜனநாயகம், வினவு) அம்பலப்படுத்துகின்றார்கள்.
அப்போது சீனா கம்யூனிச நாடாக மாறியிருந்தது. இந்தியாவில் வீரம் செரிந்த தெலுங்கானப் போராட்டம் நசுக்கப்பட்டிருந்தாலும் கம்யூனிசம் வளருவதற்கான கூறுகள் நிறைந்திருந்தது. இந்தியாவின் சமூகச் சூழல்களை ஆய்வு செய்த பவுண்டேசன் தலித்துகள், பெண்கள், பழங்குடியினங்கள் ஆகிய பிரிவினரிடையே கம்யூனிசம் எளிதாக காலூன்றும் என அனுமானித்தது. ஆளும் வர்க்கத்தை தூக்கியெறியும் கம்யூனிசத்துக்கு மாறாக,  இவர்களிடையே ஆளும் வர்க்கத்துக்கு சேவை புரியும் சீர்த்திருத்த அரசியலையும், அதற்கான இயக்கங்களையும் கொண்டு சேர்க்க முடிவு செய்தது.
இதற்காக ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் அறிவுஜீவிகளை உருவாக்கும் பணி முதன்மையாக்கப்பட்டது. இந்தியப் பல்கலைகழகங்கள் அமெரிக்கப் பல்கலைகழகங்களோடு இணைக்கப்பட்டன. ஃபோர்டு பவுண்டேசனின் தயவில் ஏராளமான இந்திய மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களுக்கு படிக்க அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பலர் தலித் மாணவர்களாவர். வேறு வழியில்லாத இவர்கள் இந்த உதவிகளை ஏற்றுக் கொண்டனர் என்று அருந்ததிராய் எழுதுகிறார். இம்மாணவர்களில் பலரும் பின்பு எவாஞ்சலிக்கல் திருச்சபை உதவியால் முன்னிறுத்தப்பட்ட தலித் அரசியலின், பின் நவீனத்துவ அரசியலின் மையமாக மாறினர்.”  (keetru.com)

தலித்தியம் கட்டமைப்பில் மாற்றத்தையோ அல்லது கட்டமைக்கப்படும் கருத்தியல் தளத்தினையோ மாற்றத்தினைக் கோரி நிற்பதில்லை. தலித்தியம் இருக்கின்ற சமூகக் கட்டுமாணத்தில் இருந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உயர்வர்க்கத்திற்கான ஜனநாயகத்தைக் கோருகின்றது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் உள்ள உழைக்கும் வர்க்கத்தவர்களை சாதியின் பேரால் அழைப்புவிடுத்து வர்க்க பேதத்தினை மறைத்துக் கொண்டு சாதியினை முன்னிலைப்படுத்தி சாதிவாரியாக அணிதிரட்டிக் கொள்கின்றது. இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய முற்படும் தலித்தியவாதிகள் இந்தியச் சூழலில் தலித்தியம் எவ்வகையான எதிர்வினையாற்றியிருக்கின்றது என்பது பற்றிய மறுவாசிப்பு செய்ய இவர்கள் முயலவில்லை.
மனித இனத்தை வசதி படைத்தவர்கள் (மூலதனம், வசதி மறுக்கப்பட்டவர்கள் (உற்பத்தி -உழைப்பை விற்க தயாராக இருப்பவர்கள்) என்ற இரு பெரும் பிரிவிற்கு இடையில் பொருளாதார மாற்றங்களினூடாக வசதிபடைத்தவர் பிரிவிற்கும் வசதி இழந்தவர் பிரிவிற்கும் இடையே அங்குமிங்கும் நகரும் மக்கள் கூட்டமும் என இந்த பொருளாதார அமைப்பில் இருந்து கொண்டே இருக்கின்றது. இந்த மக்கள் கூட்டத்தை விஞ்ஞான ரீதியாக பகுத்தறிவதில் முரண்பாடுகள் இருந்து கொண்டே இருக்கின்றது. இதில் ஒரு சமூகத்தில் ஒரு பிரிவினரே ஒடுக்குமுறையை, பின்னடைவை இனம்கண்டு அதற்கான தீர்வை முன்வைக்கின்றனர். இந்தப் பிரிவை குட்டி முதலாளிய வர்க்கம் என்று பொருளாதார முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தை அலசிப் பார்ப்பவர்கள் வரையறுத்துக் கொள்கின்றனர். இவர்களில் உழைக்கும் வர்க்கத்தை பக்கம் சார்ந்தும் நிற்பவர்களாகவும் மறுபிரிவினர் வசதியை பெருக்கிக் கொள்ளும் நோக்கோடு அதனைச் சார்ந்து நிற்பவர்களாகவும் இருக்கின்றனர். இந்தப் பிரிவினை குட்டி முதலாளிய வலது பிரிவினராக கொள்ள முடிகின்றது. கடைக்கோடியில் உள்ள ஒடுக்கப்படும் சாதியைச் சேர்ந்தவர்களிடம் கூட முதலாளிய வர்க்கம் இருக்கின்றது.
இந்த இரண்டு நலன்களைக் கொண்ட பிரிவினர்களும் சமூகத்தில் இருக்கின்ற வழிகாட்டும் சிந்தனை பற்றிய தெரிவுகள் என்பது துல்லியமாக தெரியக் கூடியது. ஆனால் ஒவ்வொருவரும் தத்தம் நலன் கொண்டு திரித்துக் கூற முடிகின்றது. இதில் வசதி மறுக்கப்பட்டவர்கள் தமது நிலையில் இருந்து வெளிவர போராடுகின்ற போது அவற்றை ஒவ்வொருவரும் சுயமாக எதனையும் செய்து முடிவதில்லை. மாறாக சமூகத்தில் இருக்கின்ற பொருளாதார அமைப்பே இவற்றை நிர்ணயிக்கின்றது.
இந்த நிலையில் பொதுவான ஒடுக்குமுறைகளை இனம் கண்டு கொள்வதில்லை. பொருளாதார அமைப்பின் விழைவுகளை முழுமையாக உள்வாங்க முடிவதில்லை. ஆனால் அடையாள கோரிக்கையாக்கி உயர்வர்க்க நலன்களின் மையத்தில் இருந்து தீர்வு நோக்கி நகர்கின்றனர். இதன் வெளிப்பாடே சாதிய அடையாளங்களை முன்வைத்து வெளிப்படும் சாதியக் கட்சிகளும்,  அமைப்புக்களுமாகும். அனைத்து வித பிற்போக்குச் சிந்தனைகளையும் கொண்ட சாதியச் சிந்தனைக்கு முண்டு கொடுக்கும் இந்தச் சமூக அமைப்பின் மீது அறக்கோபம் ஏற்பட வேண்டும். அனைத்து வகை பிற்போக்குச் சிந்தனைகளுக்கும் எதிரான போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். ஆனால் அடையாள அரசியல் எனும் வகுப்புவாதச் சிந்தனைக்குள் மூழ்கி விடுகின்றனர்.

இது கூட பொருளாதார மாற்றங்களினூடாக வசதிபடைத்தவர் பிரிவிற்கும் வசதி இழந்தவர் பிரிவிற்கும் இடையே அங்குமிங்கும் நகரும் மக்கள் கூட்டம் தமக்கு தீர்வாக
முன்வைக்கப்படும் உரிமை என்பது ஒரு வசதி படைத்தவர்களுக்கும் இடையே பேசப்படும் பேரம் தான் இந்த நிலை.
இவ்வாறுதான் இன்று தலித்துக்கள் இன்று பொருளாதார மாற்றங்களினூடாக வசதிபடைத்தவர் பிரிவிற்கும் வசதி இழந்தவர் பிரிவிற்கும் இடையே அங்குமிங்கும் நகரும் மக்கள் கூட்டம் பார்ப்பனியச் சிந்தனையால் விதைக்கப்பட்ட சாதி தர்மத்தை மீட்டெடுப்பதாகக் கூறிக் கொண்டு வளர்ந்த பிரிவினர் தம்மை தலித்துக்கள் என்று கூறிக் கொண்டு தமது நலனின் மையநிலையில் இருந்து கருத்தை முன்வைக்கின்றனர்.
இங்கு வசதி மறுக்கப்பட்டவர்கள் என்கின்ற போது ஒரு இனத்திலோ அல்லது ஒரு மதப்பிரிவிலோ அல்லது ஒரு நிறத்தில் தான் இருக்க வேண்டும் என்றில்லை. இவர்கள் இனம், மதம், சாதி, நிறம் கடந்து வசதி மறுக்கப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஒடுக்கப்படும் சமூத்தவர்களில் உள்ள உயர்வர்க்கத்தவர்களின் வர்க்க படிமுறைவளர்ச்சியானது செயற்பாட்டிலும் தளர்வினை ஏற்படுத்தி விடுகின்றது. தன்னியல்பான போராட்ட வடிவங்களின் நிலையை சிதைவை ஏற்படும். தன்னியல்பிற்கு உட்பட்ட மனிதர்களின் நிலையை அம்பேத்கர் பின்வருமாறு கூறுகின்றார். ”என்னுடைய உழைப்பின் பலனை அனுபவித்தவர்கள் படித்தவர்கள்தான்.  அவர்கள், தாங்கள் முன்னேறியதும் தன் சமூகத்தை வழி நடத்துவார்கள் என்று நினைத்தேன்.  ஆனால், அவர்கள் அவர்களுடைய வயிற்றை நிரப்பிக்கொள்வதற்காகவே என்னை சுற்றி சுற்றி வந்தார்கள்  என்று என்னுடைய இறுதிக் காலத்தில் தான் நான் உணர்ந்தேன். இவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்.”  - டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்.   இந்த அனுபவத்தினை கவனத்தில் கொள்ள வேண்டும். உதவி பெற்றபின்னர் தமது வேலையைப் பார்த்துக் கொண்டு செல்வது பொருளாதார நிலை சார்ந்ததாகும். ஏனெனில் அவ்வாறு சுயநலமாக நடந்து கொண்டது தனிமனிதப் பலவீனமும், நிச்சயமற்ற பொருளாதார நிலை கொடுக்கும் அழுத்தமாகும். எனவே வர்க்கம் என்பது இங்கு நிரூபணமாகின்றது.

ஆனால் தலித்தியர், தலித்திய அமைப்புக்கள் வர்க்கம் அற்றதாக உள்ளது என கற்பிதம்; செய்கின்றார்கள். சாதியை ஒழிப்பதற்கு ஒடுக்கும் சமூகத்தினுள் இருக்கும் உழைப்பாளிளை ஒன்றிணைப்பது அவசியமாகும். அதேவேளை ஒடுக்குதலுக்கு உள்ளாகும் சமூகத்தவர்களை ஆதிக்க சமூகத்தின் உள்ள ஜனநாயக முற்போக்குச் சக்திகளை இணைப்பும் அவசியமானதாகும். இவ்வாறான செயற்பாட்டை தலித்தியர்களை செய்யவில்லை என்பது மாத்திரம் அல்ல. அம்பேத்கர் அவர்களும் இந்தப் புரிதல் (வர்க்கப்புரிதல்) இல்லாமையால் உணர்ந்ததைத் தான் மேலே கூறுகின்றார். ஆனாலும் இந்தப் படிப்பினைகளில் இருந்த கற்றுக் கொள்ளாமல் இன்றைய தலித்திவாதிகள் (அடையாள) தன்னியல்பு அரசியலை தூக்கிப்பிடிப்பதன் ஊடாக சாதியத்தைப் பாதுகாத்துக் கொண்டும், உழைக்கும் மக்களை சாதிரீதியாக பிளவுகளையும் உண்டாக்குகின்றார்கள். இது தேசங்களில் உரிமையின் போது ஒரு நாட்டில் உழைக்கும் வர்க்கத்தை பிரிக்கின்றது என்ற  அரசியல் சிந்தனை என்பது  வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என்ற இயங்கியலை மறுத்து தேசிய இனத்தின் கோரிக்கை என்பதை வர்க்கப் கோரிக்கையாக பார்க்காத நிலையாகும். ஆனால் சாதியம், மதச் சிந்தனை என்பது சமூகக் கட்டமைப்பை மாற்றத்திற்கு உள்ளாக்காமல் தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ளும் சிந்தனை வடிவமாகும்.

முதலாளித்துவ ஜனநாயக உரிமை
இலங்கையைப் பொறுத்தவரை மன்னர்கள் கொண்டிருந்த வழக்கங்களும், கட்டுப்பாடுகளும் உடைக்கப்பட்டு சட்டவாக்கம் கொலனித்துவவாதிகளினால் உருவாக்கப்படுகின்றது. சட்ட உருவாக்கத்தில் பழைய வழமைகளையும், ஆதிக்கத்தில் இருந்த சொத்துரிமை வர்க்கம் தமது சொத்துரிமையைப் பாதுகாப்பதற்கும் கொலணித்துவத்தின் ஆட்சியில் அதிகாரத்தை உறுதி செய்யவும் புனைந்து கொண்ட யாழ்ப்பாண தேசவழமைச் சட்டம், முக்குவ தேசவழமைச் சட்டம், புத்தளத்தில் முக்குவ தேசவழமைச் சட்டமும் கொலனித்துவ காலத்துச் சட்டத்துடன் இணைத்து பயன்பாட்டில் வந்தது. ஆனாலும் முதலாளித்துவ வளர்ச்சி என்பது குடிகளின் சுதந்திரத்தை உறுதி செய்வதன் ஊடாக சுதந்திரமான (எவரின் கட்டுப்பாட்டினுள் இல்லாது)  பிரஜைகளை உருவாக்குவது முதலாளித்துவத்திற்கு அவசியமானதாகும்;. இந்த வகையில் பல்வேறு சட்டங்களை உருவாக்கி வந்திருக்கின்றது.
இங்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கு முதலாளித்துவ உற்பத்தியில் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள் கிடைக்காது இருந்துள்ளார்கள். அந்த உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளது. ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையை சமூகத்தில் பங்குபற்றுவதற்கான உரிமையையும், அவர்களை சமூக மட்டத்தில் உயர்த்தி விடுதவற்கான சலுகைகள்,  இடவொதுக்கீடு போன்றவற்றையும் அறிமுகப்படுத்தி ஒடுக்கப்பட்டவர்களை மற்றைய சமூகத்தவர்களுடன் சமானமாக வாழ வைக்க முதலாளித்துவ சட்டங்களை உருவாக்கி வரப்பட்டுள்ளது. இச்சட்டங்கள் உருவாக்கப்பட்டாலும் ஒடுக்கப்பட்டவர்கள் முழுமையாக பயன்பெறும் நடைமுறைப்படுத்த முடியவில்லை.
கௌரவம், பதவி, சலுகை போன்றவற்றை தம்மால் மாத்திரம்  தான் பெறமுடியும் என்று தம்முடன் இணையும் படி தலித்தியம்  கோருகின்றது. ஆனால் அரசியல் சொல்லாடலில் அடையாள (தன்னியல்பு) அரசியலை முன்னிறுத்துகின்றது. ஒரு பிரச்சனைக்கான தீர்வினை யார் வைக்கின்றனர் இது எவ்வாறு அமைகின்றது. சமூகத்தின் பொருளாதார அமைப்பு என்ன என்ற புரிதல் இல்லாத நிலையில் அல்லது அரசியல்மயப்படுத்தப்படாத நிலையில் இருந்து தோற்றம் பெறுகின்ற கருத்தாக்கத்தின் பின்னால் மக்கள் செல்கின்ற போது பல கோட்பாடுகளின் நிலையில் இருந்து தத்தமது நலனை முன்வைக்கின்றனர். இவ்வாறே தமிழ் தேசிய போராட்டத்தின் ஆரம்பத்திலும் சரி சாதிய எதிர்ப்புப் போராட்டதிலும் சரி முதலாளித்துவ ஜனநாயகம் என்ற நிலைப்பாடில் இருந்து இடதுசாரிகள் போராடி இருக்கின்றார்கள். வர்க்கப்பார்வையை முன்னிறுத்திச் செயற்படுவது தலித்தியவாதிகளால் வசைபாடப்பட்டே வருகின்றது.
பின்நவீனத்துவவாதிகளின் நடைமுறை பற்றி சமூகத்தின் அதிகார மையத்தில் முதலாளிகளும் தொழிலாளர்களும் பதவிச் சண்டையில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் இவர்களது இப்போராட்டத்திற்கும் விளிம்பு நிலையில் உள்ள தலித்துக்களுக்கும் தொடர்பேதும் இல்லை என்றும் தலித்துக்கள் தங்கள் சமூக அந்தஸ்துக்காக கலகம் விளைவிக்க வேண்டும் என்று இவர்களிடம் போதிக்கிறார்கள்.” (வெ கிருஸ்ணமூர்த்தி - பின்நவீனத்தின் அடிப்படைக் கூறுகள் முதலிய கட்டுரைகள் 1998 ஆய்வு வட்ட வெளியீடு 5) உழைப்பாளிகளை வர்க்கப் போராட்டத்தில் இருந்து விலத்தி வைப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.
இதிலும் தலித்தியத்தின் கருத்தாக்கத்தை (குட்டி முதலாளி சிந்தனையை) வெறும் சலுகை மூலம் மாற்றத்தினை கொண்டு வந்துவிட முடியாது இதனை எப்பவும் இலங்கையின் தீவிர இடதுசாரிகள் கூறிக் கொண்டே வருகின்றனர். ஒடுக்கப்பட்டவர்களுக்கான முதலாளித்துவ சமூக உற்பத்தியில் கிடைக்காத உரிமைகளை பெறவே போராட்டதை நடத்திக் கொண்டனர். கம்யூனிஸ்டுக்கள் சாதிப்பிரச்சனைக்கு உரிய முக்கியத்துவம் அழிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு எப்பவும் இருந்து வந்துள்ளது. உழைக்கும் மக்களும் ஒன்றுபட்டுத் திரளும் பரந்த அரசியல் கூட்டணியே எல்லா உழைக்கும் மக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க இயலும் என்ற கருத்தை தலித்தியத்தை போதிப்பவர்கள் எதிர்க்கின்றனர். அதாவது ஒன்று உழைப்பவர் பக்கம் கொண்ட சிந்தனை மற்றையது ஒப்பிட்ட ரீதியில் வளர்ந்த சமூகத்தட்டில் உள்ளவர்களின் நலன் பொருந்திய சிந்தனை இவற்றை இங்கு வித்தியாசம் காண்பது முக்கியமாகும்.
இவ்வாறே இடதுசாரிகளை அரசியல் அரங்கில் மலினப்படுத்தும் புத்திஜீவிகளின் போக்கு இருக்கின்றது. மேலும் வர்க்கத்தை முன்னிலைப்படுத்திச் சாதிப் பிரச்சனையைப்  பின்னுக்குத் தள்ளிய தவறை இடதுசாரிகள் கடந்த காலங்களில் செய்திருந்த போதிலும்‘‘ என எதனைக் கூறுகின்றனர்.  இங்குதான் புரிதல் பற்றி பார்வை மாறுபடுகின்றது. தேசிய, சாதியப் பிரச்சனையாகட்டும் அவர்களுக்கான முதலாளித்து ஜனநாயகத்தை வழங்குவதன் (அறுவைச் சிகிச்சை செய்யவேண்டிய நோயாளிக்கு அந்த நோயாளியின் நோவைக் குறைப்பதற்கு கொடுக்கப்படும் மருந்து போல) மூலமே முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும். முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள் மாத்திரம் அல்ல தேசிய முதலாளிகளும் உள்ளடங்கியே இருப்பர். இங்கு சாதியப் பிரச்சனையை பின்னுக்குத் தள்ளியதான குற்றச் சாட்டு என்பது நிரூபிக்க முடியாது.
சாதியக் கருத்தாக்கத்தை வெறும் பொருளாதாரப் பிரச்சனையின் மூலம் மாத்திரம் தீர்த்துக் கொள்ள முடியாது. இது தொடர்ச்சியாக கலாச்சார போராட்டத்தின் மூலமே மக்களின் சிந்தனையில் இருந்து மாற்றம் கொண்டுவர முடியும். இங்கு இவர்கள் பொருளாதார விடுதலை கிடைத்தவுடன் பிரச்சனை தீர்ந்து விடும் என்று எந்தக் காலத்திலும் இடதுசாரிகள் சொன்னது கிடையாது. இங்குதான் சீனாவில் நடைபெற்ற கலாச்சாரப் புரட்சியின் பாடங்கள் அவசியமானது. இதுவரை வெற்றிபெற்ற புரட்சிகளின் பின்னர் முதலாளித்துவம் எவ்வாறு அதிகாரத்தை மீளவும் கைப்பற்றிக் கொண்டது என்ற படிப்பினையை பெற்றுக் கொள்ளும் இடத்தில் மார்க்சின் கூற்று எவ்வளவு உண்மையானது என்பதை கற்ரறிந்து கொள்ள முடியும். உற்பத்தி முறையை மாற்றுவது முன்நிபந்தனையாது மாற்றத்தை விரைவில் கொண்டுவர முடியும் என்று கருதும் போக்கு குட்டிமுதலாளிய அவசரப்போக்காகும்.  சமூகத்திற்கு தேவையான உற்பத்தி சக்தியின் வளர்ச்சியடையாதவரை சமூகத்தை மாற்றம் சாத்தியமில்லை.
இது தேசியஇன, மத, சாதிகளுக்கு இடையேயான கசப்புணர்கள் எவையும் உடனடியாக ஏற்படப்போவதில்லை. அனைத்து பிற்போக்கு கருத்தமைப்புக்களை புதியகலாச்சாரப் புரட்சியின் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும். இது முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளை (பொருளாதார உரிமைகளை) பெற்ற பின்னரும் தொடரும் ஒரு போராட்டமாகும். பொருளாதார உரிமைகள் மற்றும் சிந்தனை மாற்றங்களை ஒன்றாக கொண்டு வரவேண்டும் என்று விரும்புகின்ற பதட்ட மனவுணர்வு நிலையில் இருந்து எழுதும் போக்குத் தான் ;டதுசாரிகள் மீது சேற்றைவாரி வீசுகின்றனர்.
இன்று சாதிய எதிர்ப்புநிலை என்று கூறிக் கொண்டு தனியே வகுப்புவாத அரசியலை முன்வைப்பவர்கள் கடந்த காலத்தில் தோழர் சண்முகதாசன் தலைமையில் நடைபெற்ற சாதிய எதிர்ப்புப் போராட்டங்களே தமிழ் தேசியத்திற்கான ஒரு அடித்தளத்தை ;ட்டது என்பதை மறந்து விட்டனர். இவர்கள் இன்று முதலாளித்துவப் ஜனநாயகம் என்ற நிலைக்கு எதிராக சாதி என்ற குறுகிய வட்டத்தினுள் காரியமாற்ற முற்படுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை சாதியத்தை ஒழிப்பதில்லை. மாறாக சாதிரீதியாக செயற்படுவதன் மூலம் முதலாளித்துவ ஜனநாயத்தை அடைந்து விட முடியும் என நம்பிக் கொள்கின்றனர்.
1966களில் முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தும் போராட்டங்கள் குறிப்பாக வட இலங்கையில் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் வர்க்கப் பார்வையுடன் வெகுஜன முன்னணி அமைக்கப்பட்டு தொழிலாளர்கள், ஜனநாயக முற்போக்குச் சக்திகள் இணைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. அன்றையக் காலத்தில் முதலாளித்துவ ஜனநாயகத்தை வழங்க மறுத்த நிலையில் அன்றையச் சமூகம் இருந்தது. ஜனநாயக உரிமைக்காக போராட்ட வேண்டிய தேவை இருந்தது. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சி வழிநடத்தியது. படுமோசமாக சாதியம் நிறுவனமயப்பட்டிருந்த நிலையில் உழைப்பாளிகளின் ஜனநாயக உரிமைக்காக அமைப்பு ரீதியாக போராடினார்கள்.
சாதிய உணர்வு சமூகத்தில் அகற்றுவதற்கு புதியஜனநாயகப் புரட்சியையும் தொடர்ச்சியான வர்க்கப் போராட்டத்தின் ஊடாக புதிய கலாச்சாரப் புரட்சிக்கான வேலை திட்டத்தை புரட்சிகர சக்திகள் முன்வைக்கின்றனர். இதற்கு மாறாக எதிர் நிலைக்கான போக்கை சமூக மாற்றத்தை விரும்பாதவர்கள் முன்வைத்து செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

சாதியத்தினை புரிந்து கொள்வதற்கு பற்பல அணுகுமுறைகள், சாதியை வெற்றி கொள்வதற்கு பல கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. ஆனாலும் மார்க்சீயம் சாதியத்தைப் பற்றிய முன்னோறிய புரிதலை கொடுத்துள்ளது.  ஆனாலும் வரலாற்ரோட்டத்தில் பல  புதிய புதிய கோட்பாடுகள் முன்வைத்து சாதியத்திற்கு எதிராக போராடுவதாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது. இது தலித்தியம் என்றும் விழிம்பு நிலை என்றும் கோட்பாடுகளை சாதிய அமைப்புக்கள் பின்பற்றியிருக்கின்றது.  ஆனாலும் சாதியத்தினை  எந்தக் கோட்பாட்டாலும் இதுவரை வெற்றி கொள்ள முடியவில்லை.
உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களேஎன்பதோடுதலித் மக்களேஎன்பதை இணைத்துஒன்று சேருங்கள் என முழங்க அவசியமுள்ளது?  இங்கேதலித்என்பது தனியே சாதியத்தில்  சகல அடக்கி-ஒடுக்கல்களையும் உட்கொண்டதாகும் எனக் கொள்ளல் வேண்டும். “சாதியம் என்பது ஒரு கருத்தியல் அது மதவுணர்வுபோல போலியான விதைக்கப்பட்ட சிந்தனை முறையாகும். தலித் மக்களே ஒன்று சேருங்கள் என்பது கூட அடிக்கட்டுமானம் என்ற  மார்க்சின் சிந்தாந்தத்திற்கு முரண்பாடானதாகும். தலித்தியம் என்பதே மார்க்சீய வர்க்கப் பகுப்பாய்வை மீறியிருக்கின்றது. தலித்தியம் என்பது அடக்கி- ஒடுக்கப்படுதல் என்று வரையறுத்துக் கொண்டாலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்ந்த, ஒடுக்கும் சாதிகளில் உள்ள உழைக்கும் வர்க்கத்தை குறித்து நிற்பதில்லை. 
மொழி, நிலம், பண்பாடு, பொருளாதார வாழ்விற்கு அப்பால் உள்ளவற்றை தேசியத்திற்குள் கொண்டு வரமுடியாது. இங்கு தான் இரண்டைத் தேசியம் என்று சாதியத்தினையும், தலித்தியத்தினை தேசியத்துடன் ஒப்பிடுவது அடிக்கட்டுமானத்தினை மறுப்பதன் விழைவாகும். சாதியம் என்ற இரண்டைத் தேசியம், தலித்தியம் என்பது இந்தச் சமூகக் கட்டமைப்பில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தச் சிந்தனையும், சலுகைகளையும் முன்னிறுத்தும் போராட்ட முறையாகும். தலித்தியல் ஒடுக்கப்படும் மக்களில் உள்ள உயர் வர்க்கத்தவர்களின் நலனை முன்னிறுத்துக் கொள்ளும் கோட்பாடாகும். இங்கு அடிக்கட்டுமானம் தீர்க்கமானதாகும் ஏனெனில் அதன் மேல் உருவாகும் கட்டமைப்பான சாதி என்ற கருத்துமுதல்வாதத்திற்கு உட்பட்டதாகும். தலித்தியம் என்ற இரண்டைத் தேசியம் என்பது மேற்கட்டுமானத்தில்   அமைந்தது என்பதை மறுத்து அடிக்கட்டுமானமாக பார்க்கும் பார்வை என்பது கருத்துமுதல்வாதமாகும்.

இதேபோலதான்பார்ப்பணியம், யாழ்சைவவேளாளம்என்ற சிந்தனை உழைக்கும் வர்க்கத்தினை சுரண்டுவதை நியாயப்படுத்துகின்றது. ஆனால்யாழ் சைவேளாத்தின் மீதான பகைமையும், அதனை அம்பலப்படுத்துவதில் உள்ள ஆவலும் எதிர்நிலைக்கு தள்ளிவிட்டிருகிக்கின்றது.  பார்ப்பனியம், சைவவேளாளம்என்பது நிலப்பிரபுத்துவச் சிந்தனையில் தொடர்ச்சியாக உயிர்வாழ்கின்ற ஒடுக்குமுறைச் சிந்தனையாகும். இது இன்றைய பொருளாதாரச் சிந்தனையை உள்வாங்கியதாகவும், அரைநிலபிரபுத்துவச் சிந்தனைகளாக தொடர்ந்தும் சமூகத்தில் ஆழுமை செலுத்துகின்றது.
இங்குயாழ்சைவவேளாளம், பார்ப்பனியம்என்பது கூட குறிப்பிட்ட சாதியத்தை குறித்து நிற்பதாகவே வெளிப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. இது சமூகப்புரிதலில் உள்ள குறைபாடாகும். அஃது எவ்வகையிலும் அவ்வாறு கருதுவது தவறானதாகும். ஆனால் மார்க்சிய வர்க்கப்பகுப்பாய்வின் ஊடாக கொள்ளக் கூடியது பொருளாதார அமைப்புச் சிந்தனை உருவாக்கம்.
சாதியம் என்பது ஒரு ஒடுக்குமுறை சிந்தனை எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படவில்லை, புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக்கூடிய பொருளாதார நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்க்கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய பொருளாதார நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்த பட்சம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகின்றது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும்.”  மார்க்சின் சித்தாந்த வெளிச்சமாகிய எந்தச் பொருளாதார அமைப்பு இருக்கின்றதோ அதன் உற்பத்தியாகிய சிந்தனை இருக்கும். இதேவேளை முழுமையாக பழைய உற்பத்தி முறையில் மாற்றம் கொள்ளாது புதிய சிந்தனையிலும் தொடர்ச்சியாக தொடர்ச்சியாக உயர் வாழும். இந்தச் சமூக அமைப்பை மாற்றியமைப்பதன் ஊடாகவே அழுகிய சமூகச் சிந்தனையை மாற்றியமைக்க முடியும்.
இந்த ஆழ்ந்த சிந்தனையை புரிந்து கொண்டு செயற்படுவதே அனைவருக்குமுள்ள பெரும் சவாலாகும். மார்க்சின் இந்த கண்டுபிடிப்பு கேள்விக்கிடமற்று இருக்கின்றது. சமூக இயக்கம் என்பது அதன் எல்லைக்குள் எவ்வாறு செயற்படுகின்றது என்பதையும், அதற்குள் மனிதர்கள் இயக்கம் என்பது இருக்கின்றது என்பதை தீர்க்கதரிசனமாகவே தெரிவித்துள்ளார். இந்த சமூக அமைப்பை மாற்றிய போராட்டங்கள் வெற்றியையும், தோல்விகளை மார்க்சின் இக்கூற்றில் இருந்து அறிந்து கொள்ள முடியும். ஆகவே வெறும் வரைவிலக்கணங்களை வலதுசாரியத்தின் அழுத்தம் காரணமாக (குட்டிமுதலாளிய சிந்தனைவாதிகளின்) இணைத்துக் கொள்வதே அல்லது இசைவாக கோட்பாட்டை உருவாக்கிக் கொள்வதில்லை. ஆனால இந்தச் சமூக அமைப்பை மாற்றுவதற்கான வேலைமுறைகளை அரசியல், சிந்தனைத் தளத்தில் செயற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட சாதிகளில் உள்ள உயர் வர்க்கத்தவர்களை திருப்திபடுத்துவதற்காக தமிழகத்தில்தலித்திய, விளிம்புநிலை மக்கள் என்று புதிய வரைவிலக்கணங்களை உருவாக்கி திருப்திப்படுத்தியது போன்று இலங்கையிலும் அவ்வாறான நிலையை தோற்றுவிக்கப்படுவதாக கருத இடமுண்டு.
பொருளாதார அமைப்பின் ஒரு விளைவாக மதம், சாதியச் சிந்தனை அமைந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளாத மார்க்சீய விரோத அணுமுறையை அறிவிஜீவிகள் பயன்படுத்துவதும் கவனிக்கத் தாக்கதாகும். மார்க்சீயம் போதிக்கும் மேற்கட்டுமானத்தில் அமைந்த சிந்தனைப் போக்கினை புரிந்து கொள்ளதாத குறைபாடு அறிவியல் தளத்தில் தவறான முடிவுகளை முன்கொண்டுவந்து நிறுத்துகின்றது.

No comments:

Post a Comment